பசை

பிசின் செல்வம் stickiness, tenacity, adhesiveness - ஒட்டும் நிலை, பற்றுமை

glue, paste sap desire, attachment

Tamil Wiktionary

பசை — பெயர்ச்சொல் (Noun)
  1. பிசின்
  2. செல்வம்

Winslow (1862)

பசை (pacai) — noun
  1. Stickiness, tenacity, ropiness, adhesiveness, பற்று
  2. Glue, paste, cement, பிசின். (Tel. ஈௌ.)
  3. Moisture, sap, juice of meat. ஈரம்
  4. Animal or vegetable bodies; glutinous substance in fruits, roots, &c., சாரம்
  5. Love, affection, compassion, அன்பு
  6. [with இரத்தம்.] Boldness, sanguineness, கொழுப்பு
  7. (சது.) Gain, profit, lucre, property, இலாபம்
  8. Desire, விருப்பம்
  9. Boiled rice, and other ingredients, applied to a drum-head to improve the sound, முழுவின்மார்ச்சனை. (c.) அதிலேபசையில்லை. There is no hope in the case, we shall be disappointed; There is no hope of his recovery. உடம்பிலே பசையில்லை. He is greatly emaciated. அவர்முகத்திலேரத்தப்பசையில்லை. His countenance is gloomy, he looks dejected
  • பசைபூசுதல் — Putting பசை on the right side of a drum.
  • பசையடி — The first washing of a new cloth, without starching.
  • பசையற்றவன் — A person without kindness, or compassion, அன்பில்லாதவன். 2. One impoverished. See பசுமையுள்ளவன். 3. A man destitute of property, வறியவன்.
  • பசையாயிருக்க — To be glutinous. 2. To be advantageous, profitable, lucrative, for one's interest. 3. To be kind, affectionate, compassionate.
  • பசையொட்டுதல் — Gluing or pasting any thing.
பசை (pacai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be compassionate, kind, affectionate, அன்பு கொள்ள
  2. To be liberal, beneficent, benevolent, சாரமுள்ளதாக
  3. [prov.] To become glutinous, viscous, tempered–as clay, &c., இளகு
  4. v. a. To temper clay so as to make it viscous–as done by potters, white-ants, or hornets; kneading dough, பிசைய
  5. To fill cracks in iron by beating, ஒட்ட
  • பசைந்தார் — Friends, சினேகிதர். (சது.)
  • பசைமட்டை — A piece of palmyra stalk used by blacksmiths in tempering the heat of fire the by water, இரும்பைப் பசையுமட்டை.
  • பசைவு — Compassion, kindness, affection, attachment, அன்பு.

Fabricius (1972)

பசை — noun
  1. glue, paste, பிசின்
  2. desire, love, affection, அன்பு
  3. gain, advantage, property, இலாபம்
  4. sap, juice of meat
  5. boiled rice and other ingredients applied to a drum-head to improve the sound, முழவின் மார்ச்சனை
  • பசையற்றவன் — a poor man, unmerciful person.
  • பசையாயிருக்க — to be glutinous; 2. to be advantageous, or profitable; 3. to become compassionate or kind.
பசை — v. i.
  1. v. i. be kind, affectionate, அன்புகொள்ளு
  2. become glutinous, இளகு
  3. be liberal, beneficent; v. t. temper clay, knead dough, பிசை
  4. fill cracks in iron by beating, ஒட்டு
  • பசைந்தார் — friends.
  • பசைவு–அன்பு — compassion, attachment, .

Tamil Moli Akarathi (1928)

பசை (pacai)
  1. அன்பு, ஆசை, இலாபம், ஈரம், ஒட்டும் பசை, குழைவு, சாரம், செந் தளிப்பு, தளைவு, பசையென்னே வல், பற்று, விருப்பம்
பசை (pacai)
  1. ஆசை, இலாபம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பசை¹ (pacai) — noun
  1. prob. பசு-மை
  2. [M. paša.] Stickiness, tenacity, adhesiveness; ஒட்டு நிலை
  3. [M. paša.] Glue, paste, cement; பிசின். பத்தல் பசையொடுசேர்த்தி (மலைபடு. 26)
  4. [T. pasa, M. paša.] Glutinous substance in fruits, roots, etc.; sap; juice; சாரம். பசைநறவின் (கம்பரா. கங்கைப். 5)
  5. [M. paša.] Moisture; ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3)
  6. Devotion; பத்தி. பரமனை நினைபசையொடு (தேவா. 833, 11)
  7. Love, affection; அன்பு. வீறிலேன் பசையினாற் றுஞ்சி (சீவக. 1814)
  8. [K. pasa.] Desire, attachment; பற்று. (யாழ். அக.)
  9. Compassion, mercy; இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42)
  10. Gain, profit; பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை
  11. Property, possession; செல்வம். அவனிடத்திற் பசையுண்டா ?
  12. Strength, vigour; கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை
  13. Paste applied to a drumhead to improve the sound; முழவின் மார்ச்சனைப் பண்டம்
பசை (pacai) — noun
  1. A kind of lubricant for carts; உசவு. Tj.

IndoWordNet

பசை — noun
  1. சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.
பசை — noun
  1. ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.
பசை — noun
  1. காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா
பசை — noun
  1. ஒட்டும் தன்மையுள்ள பொருள்
பசை — noun
  1. பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்

கோந்து பிசின் தாவரவகை பைன்மரக்கோந்து பைன்மரப்பசை பைன்மரப்பிசின் குங்கிலியம் உலூகம் குக்குலுவம் குங்குலிகம் குற்குலு சலோர்ச்சம் சாளம் திசாயம் துசம் தேவகந்தம் சலோர்க்கம் மோசரஸ் கலவை திரவம் பற்பசை பல்பசை காரை சுண்ணாம்பு கலவை