பண்பு

உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. character nature

action, deed beauty character, nature, quality

Winslow (1862)

பண்பு (paṇpu) — noun
  1. Nature, property, natural or essential quality, குணம். (சது.)
  2. Mode, state, manner, விதம்
  3. Good quality, fitness, suitability, தகைமை
  4. Disposition. temper, சுபாவம்
  5. [in gram.] An adjective, (p.)–Note. பண்புப்பெயர், are by some grammarians divided into two classes; குணப்பண்பு, abstract qualities
  6. தொழிற்பண்பு, qualities of actions. For ஒலிப்பண்பு, குறிப்புப்பண்பு, சாதிப்பண்பு, see in their places
  • பண்படி — The root of adjectives or words of quality.
  • பண்படியாகப்பிறந்தவினை — Verbs derived from abstract nouns.
  • பண்பாகுபெயர் — Names of qualities, &c. See குணவாகுபெயர்.
  • பண்பி — A thing or persons possessing a quality. See குணி. (p.)
  • பண்பிற்பகாநிலைப்பதம் — Uncompounded words denoting quality.
  • பண்புகாட்ட — To betray one's nature or descent. See குணங்காட்ட.

Fabricius (1972)

பண்பு — noun
  1. disposition, temper, nature, quality, குணம்
  2. suitability, fitness, தகைமை
  3. (in gr.) an adjective
  • பண்புப்பெயர் — an abstract noun.
  • பண்புடைமை — the quality of adopting one's self to others knowing their character.
  • பண்பு பாராட்ட — to extol the good qualities of a person or thing.
  • பண்புருபு–ஆகிய — the particle .

Tamil Moli Akarathi (1928)

பண்பு (paṇpu)
  1. குணம், தகுதி, விதம்
பண்பு (paṇpu)
  1. குணம், நிறம்
பண்பு (paṇpu)
  1. குணம்

IndoWordNet

பண்பு — noun
  1. மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.
பண்பு — noun
  1. இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளும்படியாக இருக்கும் இயல்பு

நற்குணம் நன்னடத்தை நாகரீகம் சீரியபண்பு நல்லொழுக்கம் சுவாபம் குணம் ஞானம் அறிவு மிதமிஞ்சி செலவு செய்தல் இயற்கையான வெட்கம் நாணம் கூச்சம் அசைவற்றத்தன்மை மனதைரியம் கொடூரகுணம் அரக்ககுணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பண்பு
  1. வண்ணம், வடிவு, அளவு, சுவை என்னும் நாற்குணம்
  2. இயல்பு
  3. மனத்தன்மை
  4. பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம்
  5. விதம்
  6. பண்புப்பெயர்
  7. அழகு
  8. முறை
  9. செய்கை

Tamil Wiktionary

பண்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. உயிருள்ள
  2. உயிரற்ற பொருளின் தன்மை.
  3. குணம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பண்பு (paṇpu) — noun
  1. perh. பண்
  2. Quality of four kinds, viz., vaṇṇam, vaṭivu, aḷavu, cuvai; வண்ணம், வடிவு, அளவு, சுவை யென்னும் நாற்குணம். (திவா.)
  3. Nature; property; இயல்பு. நுண்ணி தின் விளக்க லதுவதன் பண்பே (தொல். பொ. 478)
  4. Disposition, temper; மனத்தன்மை. ஈதென்ன பண்பி வட்கே (தணிகைப்பு. களவு. 184)
  5. Good quality, courtesy; பிறரியல்பை யறிந்து நடக்கும் நற் குணம். பண்பெனப்படுவது பாடறிந் தொழுகல் (கலித். 133)
  6. Mode, state, manner; விதம், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் (திருவாச. 2, 53)
  7. (Gram.) Noun denoting a quality; பண்புப் பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18)
  8. Beauty; அழகு. (தஞ்சைவா. 31, உரை.)
  9. Usage according to Šāstras, customs, manners; முறை. பண்பினா னீக்கல் கலம் (ஆசாரக். 27)
  10. Action, deed; செய்கை. இப் பாதகந்தரு பண்பை யிழைத்தேம் (பிரமோத். 9, 38)