பழுது

கோளாறு, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு பழுதைக்கயிறு இற்றுப்போன கயிறு, நெல்லந்தாளில் திரித்த கயிறு ஆங்கிலம்:defect,problem

defect, blemish, flaw, fault unprofitableness damage, injury, ruin

Winslow (1862)

பழுது (paḻutu) — noun
  1. Defect, blemish, flaw, இனம்
  2. Any thing tainted, rotten, putrid, marred பதனழிவு
  3. Damage, injury, சேதம்
  4. Moral evil, turpitude, குற்றம்
  5. Degeneracy, vitiation, சிதைவு
  6. A lie, பொய்
  • பழுதற — Without blemish.
  • பழுதற்ற — Faultless.
  • பழுதாக — [active பழுதாக்க, பழுது பண்ண.] To become decayed.
  • பழுதானவன் — A depraved man.
  • பழுதுபட — To be damaged, spoiled. 2. To be injured in character; to degenerate.
  • பழுதுபார்க்க — To repair, to mend.

Fabricius (1972)

பழுது — noun
  1. fault, குற்றம்
  2. defect, blem- ish, ஈனம்
  3. damage, சேதம்
  4. lie, falsehood, பொய்
  • பழுதற — without blemish.
  • பழுதற்ற — faultless.
  • பழுதாய்ப்போன தானியம் — corn that is damaged.
  • பழுதுபட — to be damaged, spoiled; to be injured in character, to dege- nerate.
  • பழுது பார்க்க — to repair, to mend, to correct.

Tamil Moli Akarathi (1928)

பழுது (paḻutu)
  1. குற்றம், சிதைவு, பொய், பொல் லாங்கு, சேதம், மிடி
பழுது (paḻutu)
  1. நாவல், பரண், பிசாசம், வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பழுது (paḻutu) — noun
  1. prob. பாழ்-
  2. Unprofitableness; பயனின்மை. (தொல். சொல். 324.)
  3. Defect, blemish, flaw, fault; குற்றம். (திவா.) பழுதிறொல் புகழாள்பங்க (திருவாச. 28, 10)
  4. Damage, injury, ruin; சிதைவு. இவை பழுதிலை (தேவா. 543, 2)
  5. Anything tainted, rotten, putrid, marred; பதனழிந்தது
  6. The state of being a corpse; பிணமாயிருக்குந் தன்மை. (சிலப். 19, 66, அரும்.)
  7. Lie; பொய். (பிங்.) பழுதுரையாதவ னுரைப்பான் (திருவாலவா. 39, 9)
  8. Poverty; வறுமை. பழுதின்று (பொருந. 150)
  9. Evil; தீங்கு. பழுதெண்ணு மந்திரியின் (குறள், 639)
  10. Body; உடம்பு. பழுதொழிந் தெழுந்திருந்தான் (சிலப். 19, 66)
  11. Moral evil, turpitude; ஒழுக்கக்கேடு
  12. Place; இடம். (அக. நி.)
  13. Fullness; நிறைவு. (அக. நி.)

IndoWordNet

பழுது — noun
  1. நாசம்.
பழுது — noun
  1. சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

அழிவு நாசம் கேடு சீர்குலைவு நசிவு சிதைவு பிரளயம் பாழ் பேரழிவு செயல் வீழ்ச்சி சேதம் சீர்கேடு சரிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பழுது
  1. பயனின்மை
  2. குற்றம்
  3. சிதைவு
  4. பதன் அழிந்தது
  5. பிணமாயிருக்குந் தன்மை
  6. பொய்
  7. வறுமை
  8. தீங்கு
  9. உடம்பு) ஒழுக்கக்கேடு
  10. இடம்
  11. நிறைவு

Tamil Wiktionary

பழுது — பெயர்ச்சொல் (Noun)
  1. கோளாறு
  2. இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு
  3. பழுதைக்கயிறு இற்றுப்போன கயிறு
  4. நெல்லந்தாளில் திரித்த கயிறு