மலை

பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. அணி, அணிந்து கொள் திகைப்பு-பயம் (கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்)

mountain, hill

Tamil Wiktionary

மலை — பெயர்ச்சொல் (Noun)
  1. பாறைகளைக் கொண்ட
  2. சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு.
  3. அணி
  4. அணிந்து கொள்
  5. திகைப்பு-பயம் (கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்)

[object Object]

மலைப்பு மலைச்சிகரம் மலையாடு மலைவாசி மலையடி மலையுச்சி மலைப்பாதை மலைப்பகுதி மலைத்தொடர் மலையாளி மலையாளம் மலையேறு எரிமலை கோட்டுமலை பொன்மலை வெண்மலை பனிமலை இமயமலை வெள்ளிமலை பழனிமலை கொல்லிமலை மருதமலை சென்னிமலை

Winslow (1862)

மலை (malai) — noun
  1. Hill, mountain, பருவதம்
  2. Rock, கற்றிடர். [Compare மலயம்.] (c.)
  3. A word of comparison, உவமைச்சொல், as சந்திரன்மலைமுகம், a face like the moon.–Note. There are eight principal mountains, in Jambu Dwipa, and seven in India, &c. See கிரி and சத்தகுலாசலம். மலைபோல்வந்ததுபனிபோற்போயிற்று. It came as a mountain and went as the dew
  • மலங்காடு — A mountainous region.
  • மலைகலக்கி — A plant, Adiantum caudatum.
  • மலைக்கடுகு — The hill-mustard.
  • மலைக்கற்றாழை — Mountain கற்றாழை.
  • மலைக்குகை — A mountain-cavern.
  • மலைக்குக்குறுப்பான் — A large kind of bird, the mountain-burbet, ஓர்புள்.
மலை (malai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To wear, put on, தரிக்க; [from Sa. Mala, v.]
  2. To oppose, fight with, ஏதிர்க்க
  3. To contradict, ஆட்சேபிக்க
  4. To oppose in meaning, மறுக்க
  5. To fight, போர்செய்ய. (p.) மலைகளிறு. A fighting elephant
  • மலையம் — . We cannot fight, &c.
  • மலைவு — Delusion, confusion of mind, மயக்கம். 2. Obscurity in language, சொன்மலைவு. 3. Contrariety of meaning in a sentence, பொருள்மாறுபாடு. 4. Opposition, contending with, போர். 5. A word of comparison, உவமைச்சொல்.
மலை (malai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To stagger, be confused, மயங்க. (c.)
  2. To be crowned with garlands, மாலையணிவிக்க
  3. v. a. To fight, போர்செய்ய. (p.) இத்தேசத்தார் கடியாரத்தை முதலிற்பார்த்தபொழுது மலைத்துப்போனார்கள். When the people of this country saw a watch, for the first time, they were confounded
  • மலைப்பு — Confusion of mind. (c.) 2. Fighting. மலைப்பாய்ப்பார்க்கிறது. Looking with astonishment.

Fabricius (1972)

மலை — noun
  1. a hill, a mountain, பருவதம்
  2. a rock, பாறை
  3. a word of comparison
  • எள்ளத்தனையானதை மலையத்தனை யாக்க — to exaggerate a trifle; to make a mountain of a molehill.
  • மலங்காடு — ( of மலையங்காடு), a mountainous region.
  • மலைச்சாரல் — the declivity or slope of a mountain; 2. cold wind or rain from the hills.
  • மலைச்சார்பு–ச்சார்வு–ச்சார் — mountainous tract.
  • மலைநாடு–மலையமாநாடு–மலையா ளம் — same as .
  • மலைபடு திரவியம் — mountainous productions.
மலை — v. t.
  1. v. t. wear, put on, அணி
  2. oppose, fight with, எதிர்
  3. contradict, மறு
  • மலைகளிறு — a fighting elephant.
  • மலையான் — he cannot fight.
  • மலைவு — delusion; obscurity in language; opposition; a word of comparison.
மலை — v. i.
  1. v. i. stagger, be perplexed, தடுமாறு; v. t. fight, போர்செய்.
  • மலைத்தவன் — one that is perplexed.
  • மலைப்பாய்ப் பார்க்க — to look with astonishment.
  • மலைப்பு — confusion of mind; 2. fighting.

Tamil Moli Akarathi (1928)

மலை (malai)
  1. உவமை, பருப்பதம், மலையென்னேவல்
மலை (malai)
  1. அசலல், அடுக்கல், அத்திரி, அரி, இரவி, இறும்பு, இறும்பூது, ஏந்தல், ஓங்கல், ஓதி, ஓதிமம், கல், கல்லகம், கிரி, குதரம், குத்திரம், குவடு, குறும், பொறை, குன்று, கோத்திரம், கோத் திரை, சக்கரம், சயிலம், சாரல், சிக ரம், சிகரி, சிமயம், சிமிலம், சிலம்பு, சிலை, சிலோச்சயம், சையம், தடம், தரணி, தரம், தராதரம், தாணு, தாப ரம், திகிரி, நகம், நவிரம், நாகம், பக லை, பருப்பதம், பறப்பு, பாதவம், பிற ங்கல், பூதரம், பொகுட்டு, பொங்கர், பொச்சை, பொருப்பு, பொறை, போ தி, மாதிரம், மேரு, வரை, விண்டு, விந்தம், விலங்கல், வீரம், வெற்பு, வேதண்டம், மூதண்டம், அன்றியுஞ் சிறுமலையின்பெயர்
  2. இறும்பு, கறடு, குவடு, குறும்பொறை, குன்று, பதலை, பொச்சை, பொற்றை
மலை (malai)
  1. உவமை, மலை, மலையென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலை⁴ (malai) — noun
  1. perh. மல்லல். [K. male.]
  2. Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது (குறள், 124)
  3. Collection, aggregation; ஈட்டம். சொன்மலை (திருமுரு. 263)
  4. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq
மலை⁵ (malai) — noun
  1. Occupation of war; போர்த்தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331).
மலை (malai) — noun
  1. The squares in the board of an indoor game, where the pieces cannot be cut; கட்ட ஆட்டத்தில் காய்வெட்டுதற்கு இயலாத கட்டங்கள். Colloq.

IndoWordNet

மலை — noun
  1. பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.

பருவதம் பர்வதம் வரை குன்று பறம்பு கிரி. இமயமலை பெரியமலை சிறியமலை. சின்னமலை சிறியபருவதம் சின்னபருவதம் சிறியபர்வதம் சின்னபர்வதம் சிறியபறம்பு சின்னபறம்பு சிறியகிரி சின்னகிரி சிறியகுன்று சின்னகுன்று சிறியவரை சின்னவரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மலை
  1. ஈட்டம்
  2. காண்க: மலைக்கட்டுக்குளம்