வரை
கரை (வரம்பு) திருமணம் இரேகை.
to draw, paint to write, inscribe to limit, restrain
Winslow (1862)
வரை (varai) — noun
- Measure, limit, அளவு
- A hill or mountain, மலை
- A shore, bank, margin, கரை
- A small ridge, as சிறுவரம்பு
- The lines in the finger, விரலிறை
- The bambû, மூங்கில். (சது.)
- A furrow of the forehead, a wrinkle in the face, வரி
- Marriage, விவாகம். அதுவரையிற்போ. Go as far as that [place]. நாளதுவரைக்கும். Up to the present time
- வரைசிறகரிந்தோன் — An epithet of Indra, இந்திரன். (சது.)
- வரைபகவெறிந்தோன்–குமரன்–சது — An epithet of Kumara, . (.)
- வரைபொருட்பிரிதல் — Departing to get means for an intended marriage.
- வரையரமகளிர் — Goddesses residing in mountains, மலைவாழ்தெய்வப்பெண். (p.)
- வரையற — Without remainder, exactly. 2. Abundantly. வரையறத்தீர்த்துப்போட்டேன். I cleared his account.
- வரையறக்கொடுப்போன் — One who gives abundantly.
வரை (varai) — verbal noun
- , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To write, ஏழுத
- To take, கொள்ள
- To paint and draw, to delineate, சித்திரமெழுத
- To reject, நீக்க
- To exchange, மாற்ற
- To marry, விவாகஞ்செய்ய. (சது.) வரையாக்கொடை. A gift which is never withheld
- வரைப்பு — A limit or border, ஏல்லை. 2. A wall of a fortification or fane, மதில்.
- வரைவு — Measurement, அளவு. 2. A limit, or bound, ஏல்லை. 3. Separation, rejection, பிரிவு. 4. Change, perversity, மாறுபாடு. (சது.) 5. Marriage, விவாகம்.
- வரைவின்மாது — A profligate, one who lives not within proper limits, வேசை. (சது.)
Fabricius (1972)
வரை — noun
- measure, limit, a continuance of time, அளவு
- a hill, a mountain, மலை
- a shore, a bank, கரை
- lines in the fingers, விரலிறை
- a wrinkle in the face, வரி
- marriage, விவாகம்
- the bamboo
- நாளது வரைக்கும்–இந்நாள் வரைக்கும் — up to this day.
- ஒரு மாசவரையிலே — within or during a month.
- அரைவரையில் போ — go as far as that.
- வரையற — wirhout remainder, abundantly.
- வரையறுக்க — to determine or specify a number; 2. to decide, to settle; 3. to surround, encircle.
- வரையறை — a boundary.
வரை — v. t.
- v. t. write, எழுது
- paint, draw
- exchange, மாற்று
- marry, விவாகஞ்செய்
- reject, நீக்கு
- take, கொள்ளு
- வரைப்பு — a limit or border, எல்லை; 2. a wall of a fortification, மதில்.
- வரைவு — measurement, அளவு; 2. a limit or bound; 3. separation, rejection; 4. perversity; 5. marriage.
- வரைவின்மாது–வேசை — a profligate, one who lives not within proper limits, .
Tamil Moli Akarathi (1928)
வரை (varai)
- அளவு, கரை, சிறுவரம்பு, மலை, மூங்கில், வரையென்னேவல், வரை வு, விரலிறை, விவாகம்
வரை (varai)
- அளவு, கரை, சிறுவரம்பு, மலை, மூ ங்கில், வரையென்னேவல், விரலிறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரை² (varai)
- , < வரை-. n. [T. vara, M. varu, K. bare.]
- Line; கோடு
- Line, as in palm of hand or on the fingers; wrinkle, as on the body; இரேகை. (சூடா.)
- Letter; எழுத்து. (பிங்.)
- A defect in pearls; முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.)
- Bamboo; மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12)
- Mountain; மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6)
- Mountain top, peak; மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39)
- Side-hill; slope of a hill; பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42)
- Stone; கல். வரையம்பு காயெரி மாரிகளாய் (திருநூற். 34)
- Small ridge, as of a paddy field; சிறுவரம்பு. (W.)
- Bank, shore; நீர்க்கரை. (சூடா.)
- Limit, boundary; எல்லை. வளவரை (குறள், 480)
- Measure; extent; அளவு. உளவரை (குறள், 480)
- Measure of the distance between the joints of the forefinger; விரலிறையளவு. Loc
- Time; காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17)
- Place; இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1)
- See வரைவு
- (W.) — adv. See வரைக்கும்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வரை
- மலை
- மலையுச்சி
- பக்கமலை
- உயர்ந்த மலை
- கல்
- சிறுவரம்பு
- நீர்க்கரை
- எல்லை
- அளவு
- விரலிறை அளவு
- கோடு
- எழுத்து
- ஏற்றத்தாழ்வு நோக்குகை
- முத்துக்குற்றத்துள் ஒன்று
- மூங்கில்
- காலம்
- இடம்