வீரம்
(பெ) - ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்ளுதல்/சந்தித்தல் அஞ்சாமை
heroism, bravery the sentiment of heroism, one of nava-racam strength, might
Tamil Wiktionary
வீரம்
- (பெ) -
- ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்ளுதல்/சந்தித்தல்
- அஞ்சாமை
- துணிச்சல்
- துணிவு
[object Object]
Winslow (1862)
வீரம் (vīram) — noun
- Heroism, bravery, fortitude, magnanimity, வீரியம்
- Strength, might, வலி
- A king-like medicine, as சௌவீரம். W. p. 798. VEERA
- A mountain, மலை. (சது.)
- One of the Saiva Agamas. See சிவாகமம்
- A posture of the Yogi. See ஆதனம்
- வீரகங்கணம்–வீரகடகம் — A warrior's bracelet.
- வீரகண்டாமணி–வீரகண்டை — An ornament or ring for the foot.
- வீரகுடியான் — One employed to sound the chank, or trumpet, on joyful, and mournful occasions, பணிசெய்பவன்.
- வீரகெம்பீரன் — A proud champion.
- வீரகேசரி — An epithet of a hero. See வீரர், 9. 2. Vickramaditya.
- வீரசாகி — [St. வீரவிருக்ஷம்.] The marking nut-tree, செங்கோட்டைமரம். (சது.)
Fabricius (1972)
வீரம் — noun
- a medicine
- bravery, heroism, fortitude, வீரியம்
- strength, வலி
- a mountain, மலை
- one of the Saiva Agamas
- a posture of a Yogi
- வீர கங்கணம்–கடகம் — a warrior's bracelet.
- வீரக்குடியான் — one employed to sound the chank or trumpet on joyful or mournful occasions.
- வீரகேஸரி–கேசரி — an epithet of a hero; 2. Vikramditya.
- வீரசாகி — the marking-nut tree.
- வீரசூரம் — heroic valour.
- வீரசைவம் — the high Saiva or Linga system.
Tamil Moli Akarathi (1928)
வீரம் (vīram)
- இஞ்சிக்கிழங்கு, ஓரத்தி, ஓரலங் காரம் அது வீரந்தோன்றக்கூறுவது, ஓர்மருந்து, கஞ்சி, சிவாகமமிருபத் தெட்டினொன்று, பெலன், மலை, மிளகு, மேன்மை, வலி, வீராதனம், வீரயம்
வீரம் (vīram)
- ஒருமருந்து, மலை, வலி, வீரியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வீரம்¹ (vīram) — noun
- < vīra
- Heroism, bravery; பராக்கிரமம். கன்மே னிற்பர் தம்வீரந் தோன்ற (சீவக. 2302)
- (Rhet.) The sentiment of heroism, one of nava-racam, q.v.; நவரசத்துள் பராக்கிரமத்தை விளக்குஞ் சுவை. (சிலப். 3, 13, உரை.)
- Strength, might; வலிமை. வீரநோய் வெகுளி (சீவக. 2771)
- Excellence; மேன்மை. (யாழ். அக.)
- (Nāṭya.) A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
- An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. (சைவச. 333, உரை.)
- See வீராசனம். பதுமநகரில் வீரம் (பிரபோத. 44, 68)
- Pepper; மிளகு. (யாழ். அக.)
- Gruel; கஞ்சி. (யாழ். அக.)
- A kind of fig; அத்திவகை. (யாழ். அக.)
- Back; முதுகு. (நாமதீப. 585.)
- cf. வேரம். Mountain; மலை. (பிங்.) வீரந் துஞ்சுவ வெண்மதி (இரகு. குசன. 71)
வீரம்² (vīram) — noun
- < சவ்வீரம்
- Corrosive sublimate. See சவ்வீரம்
- (W.)
- A kind of medicine; மருந்துவகை
வீரம்³ (vīram) — noun
- cf. šṛṅgi-bēra. Ginger. See இஞ்சி²
- (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வீரம்
- பேராண்மை
- பெருஞ்செயல்
- பெருமிதச் சுவை
- வலிமை
- மேன்மை
- வரிக்கூத்துவகை