வெடிப்பு
முழுமையான மேற்பரப்பு அல்லாமல், சிறிது சிறிதாக பிளவு பட்டு இருக்கும் நிலை ஆகும். explosion வெடி - வெடிப்பு
explosion
Tamil Moli Akarathi (1928)
வெடிப்பு (veṭippu)
- அதிகம், கமர், விள்ளுகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெடிப்பு (veṭippu) — noun
- < வெடி¹-
- Explosion; ஓசையோடு வெடித்து எழுகை
- Crevice, fissure, gap; பிளப்பு. (சங். அக.)
- Ruin; விநாசம். வெடிப்பு நின்பசுநிரை மேய்க்கப் போக்கு (திவ். திருவாய். 10, 3, 6)
- Bad smell; துர்நாற்றம்
- Disgust; வெறுப்பு. (W.)
- Objectionable language; குற்றமான வார்த்தை. பிறிதோர் வெடிப்பு முரைத்தறியேன் (அருட்பா, vi, திருவருட்பெருமை. 10)
- Strictness; sternness; கண்டிப்பு. Loc
- Splendour; சிறப்பு. காரியம் வெடிப்பாய் நடந்தது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெடிப்பு
- ஓசையோடு வெடித்து எழுகை
- பிளப்பு
- அழிவு
- தீநாற்றம்
- வெறுப்பு
- குற்ற மான சொல்
- கண்டிப்பு
- சிறப்பு