ஆணி

மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்க வசதியாக சற்று தடித்த தலைப்பகுதியும் உண்டு. கல் முள் அழுத்துவதால் உள்ளக்காலில் தோன்றும் தடிப்புத்தோல். முதன்மை, மேன்மை,

hook, peg, nail

Tamil Wiktionary

ஆணி — பெயர்ச்சொல் (Noun)
  1. மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும்
  2. அடிக்க வசதியாக சற்று தடித்த தலைப்பகுதியும் உண்டு.
  3. கல் முள் அழுத்துவதால் உள்ளக்காலில் தோன்றும் தடிப்புத்தோல்.
  4. முதன்மை
  5. மேன்மை
  6. உறுதிதரும் (உறுதிபயக்கும் அடிப்படை) ஆதாரம்
  7. அடிப்படை ஒப்பீட்டுப்பொருள் (எ.கா. ஆணிப்பொன்
  8. ஆணிமுத்து)
  9. மேற்கோள்
  10. எல்லை
  11. மிகுதிகாட்டும் விகுதி

[object Object], [object Object]

எழுத்தாணி கடையாணி திருகாணி இரும்பாணி ஆனி ஊசி உளி

Winslow (1862)

ஆணி (āṇi) — noun
  1. Nail, spike, pin, peg, கீலகம். Wils. p. 108. AN'I
  2. A piece of gold, used as a standard, for comparing the quality of other gold, உரையாணி
  3. (p.) Style for writing, ஏழுத்தாணி
  • ஆணிகடாவ — To drive nails, to nail.
  • ஆணிக்கோவை — A string of gold- pins for testing the quality of gold.
  • திருகாணி — A screw.
  • வரிச்சாணி–வரிச்சலாணி–வலிச்சலாணி — A nail for ledgers, reapers.
  • கட்டாணி — A pin for ear-rings.
  • பட்டாணி — A clasp, a clamp, a clamp-iron, a clincher.
ஆணி (āṇi) — noun
  1. Excellence, principal or transcendent qualities, மேன்மை
  2. (c.) A kind of corn on the feet, supposed to be caused by the prick of a thorn, &c., காலிலுண்டாகுமாணி
  3. A kind of block set into the mortar, when that is worn too low, உரலாணி
  • ஆணிக்குருத்து — The heart, or prime part of a palmyra shoot.
  • ஆணிச்சிதல் — The core of a suppuration.
  • ஆணித்தங்கம்–ஆணிப்பொன் — The best kind of gold.
  • ஆணித்தரம் — First quality, முதற்றரம். 2. [in pearls.] Superior pearl, நல்லமுத்து. 3. (fig.) Firmness, உறுதி.
  • ஆணித்தரமானவன் — An excellent man, one of first rate accomplishments.
  • ஆணிப்பூ — A disease of the eye –a kind of cataract.

Fabricius (1972)

ஆணி — noun
  1. a nail
  2. piece of gold used as a standard for testing other gold
  3. a style எழுத்தாணி
  4. core of an ulcer
  5. excellence, மேன்மை
  6. support, foundation, ஆதாரம்
  7. wish, desire, விருப்பம்
  • ஆணிகடாவ–அறைய — to drive a nail.
  • ஆணிக்கையாய் — with a strong hand.
  • ஆணிக்கோவை–உரையாணி — a string of gold pins, of different degrees for testing the quality, of gold.
  • ஆணிதைக்க — to fasten with a nail.
  • ஆணித்தரம் — first or superior quality.
  • ஆணித்தரமாய் — firmly, strongly.

Tamil Moli Akarathi (1928)

ஆணி (āṇi)
  1. உரையாணி, ஏழுத்தாணி, ஏல் லை, காயாணி, தைக்கிறவாணி, மு தன்மை, மேன்மை, வாளலகு
ஆணி (āṇi)
  1. கீலம்
ஆணி (āṇi)
  1. ஆணி, உறுதி, ஏழுத்தாணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆணி¹ (āṇi) — noun
  1. < āṇi
  2. Nail, small spike; இரும்பாணி. அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா. i, 170, 22)
  3. Linch-pin; அச்சாணி. உழுவா ருலகத்தார்க் காணி (குறள், 1032)
  4. Style for writing; எழுத்தாணி. பித்திகைக் கொழுமுகை யாணி கைக்கொண்டு (சிலப். 8, 55)
  5. Peg, plug, wooden spike; மரவாணி. உரலாணி (தொல். எழுத். 99, உரை)
  6. Pin of gold for testing the standard of other gold; உரையாணி. ஆணிக்கனகம் (அஷ்டப். அழகரந். 3)
  7. Core of an ulcer; புண் ணாணி
  8. Excellence, superiority; மேன்மை. ஆணிமுத்து
  9. Support, basis, foundation, protection; ஆதாரம். ஆணியாயுலகுக் கெல்லாம் (கம்பரா. கடறாவு. 27)
  10. Wish, desire; ஆசை. (திவ். பெரியாழ். 5, 2, 3.)
ஆணி² (āṇi) — part
  1. Suffix in words like உச்சாணி, சிரிப்பாணி, சின்னாணி, having an intensive force.
ஆணி¹ (āṇi) — noun
  1. (பொதி. நி.)
  2. cf. அணை. Bed; சயனம்
  3. cf. அணி. Great beauty; பேரழகு

IndoWordNet

ஆணி — noun
  1. ஆணி
ஆணி — noun
  1. சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.

கடையாணி திருகாணி முறுக்காணி புரியாணி சிற்றாணி பொடியாணி சிறியஆணி நங்கூரம் கலைப்பொருள்கள் சிறு ஆணி சுள்ளாணி சிறிய ஆணி கொக்கி