இனம்

பரம்பரை பொதுவான குணம் மற்றும் பண்புகள் பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,

kind, breed, race species friend

Tamil Wiktionary

இனம் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

இனங்காண் இனப்படுகொலை இனவுணர்வு இனமானம் இனவெறி வல்லினம் இடையினம் மெல்லினம் உயிரினம் பாலினம் விலங்கினம் பறவையினம் பேரினம் தமிழினம் ஆணினம் பெண்ணினம்

Winslow (1862)

இனம் (iṉam) — noun
  1. Kindred, relations, connections, affinity, relationship, சுற்றம்
  2. Class, kind, species, caste, sort, குலம்
  3. Association (with persons), union, fellowship, சம்பந்தம்
  4. A company, collective body, a society, association, கூட்டம்
  5. Flock, herd, shoal, swarm, திரள்
  6. Attendants of kings, royal household, அரசர்க்குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம்
  • இனக்கட்டு — Family ramifications, connections, உறவின்முறை. 2. Bond of union between relations, பந்துக்கட்டு. 3. Subordination, due respect, &c. among the several branches of a family, relative bonds, முறைமை.
  • இனஞ்சனம்–இனத்தார்சனத்தார் — Relations, kindred and connexions, சுற்றத்தார்.
  • இனமொழிவிடை — One of the five kinds of இறைபயப்பது–an indirect answer.
  • இனமோனை — A rhyme where the letters which begin a line or foot are not the same as those of the next line or foot, but of the same class, இனவெழுத்தால்வருமோனை. If the letters are of the வல்லினம் class, the rhyme is called வல்லினமோனை; if of the மெல்லினம் class, the rhyme is மெல்லினமோனை; if of the இடையினம் class, the rhyme is இடையினமோனை.
  • இனம்பிரிக்க — To divide into classes.
  • இனம்பிரிய — To be separated from the company.

Fabricius (1972)

இனம் — noun
  1. a kindred, relationship, சுற்றம்
  2. class, sort, குலம்
  3. company, flock, herd, திரள்
  4. equality, ஒப்பு
  5. individual, ஆசாமி
  6. brotherhood, fellowship, society, company
  • இனம் இனத்தோடே–வெள்ளாடு தன் னோடே — ", " Proverb "Geese with geese and women with women". "Birds of a feather flock to-gether"
  • அதற்கு இனம் பண்ணினான்–பண்ணி வைத்தான் — he adopted proper measures to effect it.
  • இனக்கட்டு — alliance, union between relations.
  • இனசனம்–இனத்தார்–இனத்தவர்–சனத் தார் — kinsfolk, relations.
  • இனமாய்ச்செய்ய — to do a thing properly.
  • இனமாய்ச்சொல்ல — to speak with propriety.

Tamil Moli Akarathi (1928)

இனம் (iṉam)
  1. குலம், கூட்டம், சம்பந்தம், சுற் றம், திறன், பசுக்கூட்டம், மந்திரி கள் வருக்கம்
இனம் (iṉam)
  1. குலம், கூட்டம், சுற்றம், திரள், பசுக்கூட்டம், மந்திரிகள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இனம் (iṉam) — noun
  1. [M. inam.] Class; group, division, kind; species; sort; வருக்கம். (நன். 91.)
  2. Race, clan, tribe; குலம். விண் ணோர்களொருபடைதானும் நங்களினத்தை யுயிருண்ணாது (கந்தபு. அக்கினிமு. 203)
  3. Comrades, associates; சுற்றம். (அக. நி.)
  4. Brotherhood, fellowship, society, company; துணையாகச் சேருங் கூட்டம். இனத் தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453)
  5. Pack, herd; நிரை. கழுதைப் புல்லினம் பூட்டி (புறநா. 15)
  6. Associated items; ஒரு தொகுதியுட்சேர்த்து வழங்கற்குரியது. (நன். 358.)
  7. Ministers in council; அமைச்சர். இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் (குறள், 568)
  8. Equality; ஒப்பு. இனமேதுமிலானை (திவ். திருவாய். 9, 3, 5)
  9. Individual; ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்.. Loc
இனம் (iṉam) — noun
  1. Comparison; உபமானம் இன்னுணர் முழுநலம் (திவ். திருவாய். 1, 1, 2).

IndoWordNet

இனம் — noun
  1. மனிதரிலும்,பெரும்பாலான உயிரினங்களிலும் உள்ள ஆண்,பெண் என்ற பாகுபாடு

பால் பகுப்பு பிரிவு சாதி ஆண்பால் பெண்பால்