இருள்

இருட்டு, ஒளி அற்ற நிலை அறியாமை darkness

darkness, absence of light dark colour, swarthiness, blackness mental delusion; clouded state of mind

Tamil Moli Akarathi (1928)

இருள் (iruḷ)
  1. ஆரல்மீன், இடி, கார்த்திகை நாள்
இருள் (iruḷ)
  1. இருட்டு, உன்மத்தம், கறுப்பு நரகம், மயக்கம், யானை
இருள் (iruḷ)
  1. அந்தகாரம், அந்தரம், அல், கங் குல், கச்சளம், கருவரி, கருள், கார், சரு வரி, தமம், திமிரம் துணங்கறல், துவாந்தம், நத்தம், நிசி, நீலம், மங்குல்
இருள் (iruḷ)
  1. அல், இருளென்னுமேவல், உன் மத்தம், கறுப்பு, நரகம்,யானை

Winslow (1862)

இருள் (iruḷ) — noun
  1. Darkness, obscurity, அந்தகாரம்
  2. A dark color, black, blackness, கறுப்பு
  3. (p.) Ignorance, mental delusion, stupor, உன்மத்தம்
  4. An elephant, யானை
  5. Hell, நரகம். ஓவென்ற இருளாயிருக்கின்றது. There is total, absolute darkness. இந்தவீடிருளடைந்துகிடக்கிறது. This house is become dark; i. e. ruined
  • இருட்படலம் — Wide-spread darkness.
  • இருட்பரப்பு — An expanse of darkness.
  • இருட்பிழம்பு — Great darkness –as a mass.
  • இருணிலம் — The land of darkness, hell, நரகம்.
  • இருளன் — ( இருளர்.) An individual of a tribe of foresters or savages, மலையில்வாழுமோர்சாதியான். 2. The name of a devil, ஓர்பிசாசம்.
  • இருள்வலி — The sun, சூரியன். (p.)
இருள் (iruḷ) — noun
  1. –இருளு, கிறது–இருண்டது–இருளும்–இருள, v. n. To become dark –as clouds before rain, to darken, இருட்ட
  2. To grow dark–as at the close of the day; to become obscure–as a heavenly or luminous body, மங்க
  3. To become dark or dim in color, ஒளிமழுங்க
  4. To become obscure or dark–as when over-spread with clouds, இருப்பட
  5. To darken or be dark, as the mind, be in ignorance, illusion, doubt, &c., மருள. மனமிருண்டுபோயிற்று. The mind is obscured or is under the power of illusion. வானமிருண்டது. The heavens grew black
  • இருண்டகாடு — A dark forest.
  • இருண்டசிவப்பு — Dark red, red mixed with black.
  • இருண்டமனம் — A mind that conceals dark and diabolical designs.
  • இருட்சி — Darkness, obscurity, cloudiness, gloom, becoming dark, இருள்கை. 2. Mental darkness, ignorance of spiritual things, மருளுகை.

Fabricius (1972)

இருள் — noun
  1. darkness, obscurity, அந்த காரம்
  2. a dark colour black, blackness, கறுப்பு
  3. confusion of mind, ignorance, stupor, உன்மத்தம்
  4. hell, நரகம்
  5. birth, குற்றம்
  6. fault, blemish, குற்றம்
  7. elephant, யானை; 8.Ironwood of ceylon, Burma
  • இந்த வீடு இருளடைந்து கிடக்கிறது — this house is become dark.
  • இருளர் — a tribe living in the woods.
  • இருள்வலி — the sun.
  • இருள்நிலம்–இருணிலம் — hell.
  • ஆரிருள் — complete darkness hell.
  • காரிருள்–கருமை–இருள் — (+) utter darkness.
இருள் — v. i.
  1. , இருளு, I. v. i. grow dark, இருட்டு.
  • மனம் இருண்டிருக்கிறது — the mind is obscured.
  • இருட்சி — darkness, obscurity.
  • இருண்டகாடு — dense forest.
  • இருண்ட சிவப்பு — dark red.
  • இருண்டிருக்க — to be dark.

IndoWordNet

இருள் — noun
  1. வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
இருள் — noun
  1. அறியாமை இருட்டு

இருட்டு அறியாமை பேதமை அறிவீனம் முட்டாள்த்தனம் மூடத்தனம் அசடு அஞ்ஞானம் அபோதம் அறிமடம் எய்யாமை மௌட்டியம் மூட்டம் மூடுபனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இருள்
  1. அந்தகாரம்
  2. கறுப்பு
  3. மயக்கம்
  4. அறி

Tamil Wiktionary

இருள்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இருள்¹ (iruḷ) — noun
  1. Darkness; அந்தகாரம். (குறள், 999.)
  2. Dark colour, swarthiness, blackness; கறுப்பு. இரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு (மதுரைக். 634)
  3. Mental delusion, clouded state of mind; மயக்கம். பொறிகட்கிரு ளீயு ஞாலத்து (பு. வெ. 9, 42)
  4. Spiritual ignorance concerning God; அஞ்ஞானம். உலக மிருணீங்க விருந்தவெந்தை (சீவக. 2812)
  5. Trouble, difficulty; துன்பம். அச்சற் றேம மாகியிரு டீர்ந்து (பதிற்றுப். 90, 2)
  6. A region of darkness, which is one of many hells; நரகவிசேடம். (குறள், 121.)
  7. Birth; பிறப்பு. இருணீங்கி யின்பம் பயக்கும் (குறள், 352)
  8. Fault, blemish; குற்றம். இருடீர் பொறையும் (ஞானா. ஆசிரியர்துதி)
  9. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய கருகல். (சிலப். 14, 184.)
  10. Corruption affecting the soul; மலம். (சி. சி. பாயி. 5.)
  11. Elephant; யானை. (W.)
  12. Burmah ironwood. See இருவேல்
  13. Ironwood of Ceylon. See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 41, 33.)