காப்பு

இரட்சை காப்பாற்றுதல் பாதுகாத்தல்

watching, caution, vigilance, preservation, defence, guard, protection a thing that which serves as a protective synonym of காப்புநாண் (kāppunāṇ)

Winslow (1862)

காப்பு (kāppu) — noun
  1. Guard, protection, &c. See under the verb கா.

Fabricius (1972)

காப்பு — v. n. & s.
  1. n. & s. defence, guard, watching, vigilance
  2. amulet
  3. a bangle, a bracelet
  4. a cord tied round the arm of a votary or that of a priest etc, before any festival, or that of a bridgroom before the marriage ceremonies
  5. invocation at the commencement of a poem
  6. fence, hedge, வேலி
  7. the devas who guard the eight cardinal points, திக்பாலகர்
  8. sandals, பாதுகை
  • காப்புக்கட்ட — to tie an amulet round the arm; 2. to engage in any pursuit with zeal.
  • காப்பு நாண் — the string which is used for the purpose of tying an amulet.
  • காப்பாற்ற–தற்காக்க — to defend, protect, preserve, save, .
  • காப்பிட — to put arm rings to children when five days old.
  • தற்காக்க–தற்–தன் — see under .
காப்பு — v. n. & s.
  1. n. & s. see under கா.

Tamil Moli Akarathi (1928)

காப்பு (kāppu)
  1. ஆடை, இரட்சாபந்தனம், இர ட்சிப்பு, ஒருபிரபந்தம், கதவு, காவல் கையணியிலொன்று, திருநீறு, நூல் களில் தெய்வவணக்கச் செய்யுள் மதில், மூங்கில், விபூதி
காப்பு (kāppu)
  1. ஆடை, கதவு, காவல், திலக மணிதல், மதில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காப்பு (kāppu) — noun
  1. Watching, caution, vigilance, preservation, defence, guard, protection; பாது காவல். (பிங்.)
  2. That which serves as a protective; காவலாயுள்ளது. கண்ணேறு காத்திட்ட காப் பென (குமர. பிர. மதுரைக். 101)
  3. See காப்புநாண்
  4. String or cord tied round medicinal plants with mantras either by way of preserving them from injury, or by way of attenuating their pernicious effects, before using them in medicine; மூலிகைகெடாமலிருக்கவும் அதன் கெட்ட குணங்கள் நீங்கவும் அதைச்சுற்றிக் கட்டும் மந்திரக் கயிறு
  5. Invocation of deities at the commencement of a poem to facilitate its successful completion; எடுத்தவிஷயம் இனிதுமுடியும்பொருட்டு நூலின்தொடக்கத்திற்செய்யும் தெய்வவணக்கம்
  6. See காப்புப்பருவம். (இலக். வி. 806.)
  7. Sacred ashes, as an amulet; திருநீறு. விருத்தனாகிக் கூனிவந் துயர்காப்பிட்டான் (திருவாலவா. 38, 56)
  8. Bangle, bracelet, anklet; கைகால்களில் அணியும் வளை மைந்தரும் . . . காப்பணியாக் கொள்ளுங் கலைசையே (கலைசைக். 53)
  9. Fence, hedge; வேலி. (பிங்.)
  10. Surrounding wall, fortification; மதில். திருத் துஞ்சுந் திண்காப்பின் (பட்டினப். 41)
  11. Mound within a fort; கோட்டையின் உள்ளுயர் நிலம். (பிங்.)
  12. Door; கதவு. (பிங்.)
  13. Bolt of a door; கதவின் தாழ். கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து (அருட்பா, iv, அருட்பிர. 26)
  14. Royal seal; அரசமுத்திரை. ஓலைமுகடு காப்பியாத்து (கலித். 94)
  15. The running cord connecting the leaves of a cadjan manuscript; ஏட்டுக்கயிறு. புத்தகத்தின் காப்பொருவி வாசித்து (விநாயகபு. 62, 15)
  16. Place of special protection; காவலான இடம். கெடில வீரட்டமும் . . . உறைவார் காப்புக்களே (தேவா. 971, 1)
  17. Village, as in a pastoral region; ஊர். கடிகொளிருங்காப்பின் (கலித். 110)
  18. Guardian deities of the eight points of the compass; திக்குப் பாலகர். காப்புக் கடைநிறுத்தி (சிலப். 28, 231)
  19. Prison; சிறை. பங்கயன் காப்பினை . . . விடுத்தனன் (கந்தபு. அயனைச்சிறைநீ. 12)
  20. Sandals; பாத ரட்சை. காப்பணி தாளன் (திருவிளை. பழியஞ். 13)
  21. Objects of enjoyment by a king; அரசன் நுகர்தற் குரிய பொருள்கள். மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பு (சீவக. 1873)

IndoWordNet

காப்பு — noun
  1. தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.
காப்பு — noun
  1. கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
காப்பு — noun
  1. கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
காப்பு — noun
  1. முழங்கையில் அணியும் ஆபரணம்

கொலுசு பாதரசம் சலங்கை சதங்கை கழல் தண்டை பாதணி வளையல் ஆபரணம் நகை அணிகலன் அணி மோதிரம் கணையாழி நெளி நெளிவு கைச்சங்கிலி கைச்செயின் மதுரா கைஅங்கி கைவங்கி கையணி கங்கணம் கடகம் பரியகம்

Tamil Wiktionary

காப்பு
  1. இரட்சை
  2. காப்பாற்றுதல்
  3. பாதுகாத்தல்
  4. கை ஆபரணம்/காப்பு
  5. கால் வளையம்/காப்பு
  6. காவல்