நகை
தங்கத்தால் செய்யப்படும் அணிகலன் புன்னகை - இனிய உதட்டுச் சிரிப்பு : jewellery, smile
jewel laugh, smile to laugh, smile
Tamil Wiktionary
நகை — பெயர்ச்சொல் (Noun)
- தங்கத்தால் செய்யப்படும் அணிகலன்
- புன்னகை - இனிய உதட்டுச் சிரிப்பு
[object Object], [object Object]
நகைப்பெட்டி பொன்னகை புன்னகை
Winslow (1862)
நகை (nakai) — noun
- A splendid jewel, commonly set with precious stones; jewels, trinkets, ஆபரணம்
- A metal article, commonly of a superior kind, உடைமை. (c.)
- Laughter, smile, சிரிப்பு
- Contemptuous laughter, sneer, grin, ridicule, derision, scorn, இகழ்ச்சி
- Hilarity, mirth, களிப்பு
- Delight, gratification, pleasure, joy, இன்பம்
- Brightness, splendor, coruscation, பிரகாசம்
- The gums, ஈறு
- Teeth, பல்
- Flower bud, பூமொட்டு
- Blossoming of flowers, மலருதல். (p.)
- நகைகொள்ள–நகைபுரிய–நகையாட — To smile, to laugh.
- நகைகொட்ட — To laugh heartily.
- நகைசெய்ய — To make a jewel. (c.) 2. To smile, to laugh. 3. To deride, to ridicule.
- நகைச்சொல் — Ridicule, derision, a giggle, a sneer. 2. Pleasantry, joking humor.
- நகைநாணயம் — Wealth, teasure; property in jewels.
- நகைரசம் — Emotion of laughter.
நகை (nakai) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. and a. To laugh, to smile. சிரிக்க
- To laugh at, to deride, to ridicule, to laugh contemptuously or sarcastically, பரிகாசிக்க
- To scoff, to giggle, to taunt, நிந்திக்க. (c.)
- நகைமுகம் — A smiling countenance.
- நகைப்பு — Smiling, derision, &c., as the verb.
- நகைப்புக்கிடமாயிருக்க — To be ridiculous.
Fabricius (1972)
நகை — noun
- a jewel, trinkets, ஆபரணம்
- laughter, contemptuous smile, ridicule, சிரிப்பு
- brightness, splendour, பிரகாசம்
- the gums, ஈறு
- the teeth
- a flower bud, பூமொட்டு
- blossoming of flowers, மலர்தல்
- நகைகொள்ள–ஆட–புரிய — to laugh, to smile.
- நகைசெய்ய — to laugh, to ridicule; 2. to make a jewel.
- நகைச்சொல் — ridicule, derision, joking.
- நகைநட்டு — நகைநாணயம், pro- perty in jewels.
- நகைரசம் — emotion of laughter.
- நகைவகை — jewels of various kinds.
நகை — v. i.
- v. i. & t. laugh, smile, சிரி
- laugh at, ridicule, பரகசி
- taunt, நிந்தி
- என்னை நகைக்காதே — do not laugh at me.
- நகைப்பு — smiling, derision.
- நகைப்புக்கிடமான காரியம் — a ridiculous thing.
- எனக்கு நகைப்பு வந்தது — it made me laugh.
- நகைமுகம் — a smiling countenance.
Tamil Moli Akarathi (1928)
நகை (nakai)
- ஆபரணம், இகழ்ச்சி, இகழ்ச்சி மகிழ்ச்சிதோன்றக் கூறுமலங்காரம், இன்பம், ஏயிறு, ஒளி, களிப்பு, சிரி ப்பு, நகையென்னேவல்,பல், பூ மொட்டு, மலர்ச்சி
நகை (nakai)
- ஆபரணம், இகழ்ச்சி, இன்பம், ஏயிறு, ஒளி, களிப்பு, சிரிப்பு, நகை யென்னேவல், பல், பூவரும்பு, மலர்ச்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நகை¹ (nakai) — noun
- < நகு
- [K. nage.] Laughter, smile; சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568)
- [K. nage.] Cheerfulness; மகிழ்ச்சி. இன்னகை யாயமொ டிருந்தோற் குறுகி (சிறுபாண். 220)
- [K. nage.] Delight, gratification, pleasure, joy; இன்பம். இன்னகை மேய (பதிற்றுப். 68, 14)
- [K. nage.] Contemptuous laughter, sneer, derision, scorn; அவ மதிப்பு. பெறுபவே . . . பலரா னகை (நாலடி, 377)
- [K. nage.] Grinning; இளிப்பு
- [K. nage.] Pleasantry; பரிகாசம். நகையினும் பொய்யா வாய்மை (பதிற்றுப். 70, 12)
- [K. nage.] Friendship; நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25)
- Pleasant word; நயச்சொல். (திவா.)
- Play, sport; விளை யாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள், 871)
- Flower; மலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59)
- Blossoming of flowers; பூவின்மலர்ச்சி. நகைத்தாரான் தான்விரும்பு நாடு (பு. வெ. 9, 17)
- Brightness; splendour; ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுரு. 86)
- Teeth; பல். நிரைமுத் தனைய நகையுங் காணாய் (மணி. 20, 49)
- The gums; பல்லீறு. (W.)
- Pearl; முத்து. அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் (சீவக. 603)
- Garland of pearls; முத்தமாலை. செயலமை கோதை நகையொருத்தி (கலித். 92, 33)
- [T. K. M. Tu. naga.] Jewels; ஆபரணம். Colloq
- Resemblance, comparison; ஒப்பு. நகை . . . பிறவும் . . . உவமச்சொல்லே (தண்டி. 33)