சபை

மன்றம் assembly assemblée (பெண்)

assembly, meeting, congregation, society, association assembly room, public hall common meeting place

Tamil Wiktionary

சபை
  1. அவை
  2. மன்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சபை (capai) — noun
  1. < sabhā
  2. Assembly, meeting, congregation, society, association; கூட்டம். (பிங.)
  3. See சபாமண்டபம். Colloq
  4. Common meeting place. See அம்பலம்
  5. Temple-halls in which Šiva performs His dance, as the kaṉaka-capai at Chidambaram; சிவபெருமான் நடனமாடுஞ் சபை
  6. Church, congregation. See திருச்சபை. Chr

Winslow (1862)

சபை (capai) — noun
  1. A hall of assembly, a public hall; especially the halls in the temple at Chillumbram (சிதம்பரம்), மண்டபம்,–Note. Five apartments are enumerated in which Siva is said to manifest himself–as கனக சபை, சித்திரசபை, சிற்சபை, தேவசபை, நிருத்தசபை, which see
  2. (c.) An assembly, a meeting, congregation, company, அவை
  3. Society, an association, a conclave, கூட்டம்
  4. An assembly of the learned, the literati, புலவர் சபை. W. p. 893. SABHA'
  5. [in Christian usage.], a select society of believers–as திருச்சபை.–Note. This word retains its Sanscrit pronunciation in the Sanscrit compounds
  • சபாகம்பம் — Diffidence as to appearing before an assembly. See கம்பம்.
  • சபாசனம் — A stated assembly, சபை. (p.) 2. W. p. 893. SABHAJANA. Courtesy, politeness, civility, மரியாதை.
  • சபாஸ்தம்பம் — The pillar which supports the hall of an assembly. (R.)
  • சபாபதி–சபாநாதன்–சபாநாயகன் — The president of an assembly, சபைக்கிறைவன். 2. Siva–as god of the sacred halls at சிதம்பரம், சிவன்.
  • சபாமண்டபம் — A public hall, assembly room.
  • சாபாரஞ்சிதம் — Pleasing manners, சபைக்கிதமானதன்மை; [ex இரஞ்சிதம், pleasantness.]

Fabricius (1972)

சபை — noun
  1. hall of assembly, a public hall, மண்டபம்
  2. an assembly, கூட்டம்
  3. an assembly of learned men
  4. (Chr- us.) a church, congregation
  • சபாகம்பம் — nervousness before an audience.
  • சபாசனம் — a stated assembly; 2. honour done to a person.
  • சபாதாம்பூலம்–தாம்பூலம் — betel, areca nuts etc, distributed at a mar- riage.
  • சபாத்தியட்சன்–ஸபா–அத்யஷன்–சபா நாதன் — (+) the president of an assembly, .
  • சபாநாதன்–நாயகன்–சபாத்தி யட்சன் — same as ; 2. Siva.
  • சபாபதி — the president of an assem- bly; 2. Nataraja, Siva in Chidam- baram temple.

Tamil Moli Akarathi (1928)

சபை (capai)
  1. சங்கம், சபைமண்டபம், திருச் சபை, அது சிற்சபை, கனகசபை யென விரண்டு
  2. அவை புண்டரீக வீடாகிய இருதயகமலத்தின துகுறிப் பாக வுள்ள சிதம்பர ஸ்தலத்திலே யுள்ளன
  3. அச் சிற்சபையி லுள்ள ஐந்து படிகளும் பஞ்சாக்ஷரத்தின் குறிப்பு அதிலுள்ள இருபத்தெட்டு ஸ்தம்பங்களும் இருபத்தெட்டாகமங் களை யுங்குறிக்கும், இத்தம்பத்தளம் பிரமபீடம்
  4. தொண்ணூற்றாறு கலா க்ஷியும் தொண்ணூற்றாறு தத்துவங் களின்பாவனை
  5. இது விஷ்ணுபீடம் உருத்திரபீடத்துள்ள ஐந்து ஸ்தம்ப ங்களும் பஞ்சபூதங்களைக்காட்டுவன ஈசுரபீடத்துத் தம்பமாறும் சாஸ்தி ரங்கள ஆறையம் விளக்கும்
  6. சதாசி வபீடத்துத் தம்பம் நான்கும் வேதம் நான்கையும் குறித்துநிற்கும்
  7. திரை மகாமாயையின் குறிப்பு
  8. தரிசன ஸ்பரிசனவே திகைகளிரண்டும் மந்தி ரஸ்தானங்கள்
  9. மகாப்பிரணவம் இர கசியமாகவிருக்கின்றது
  10. கைமரங்கள் அறுபத்து நான்கும் கலைஞானம் அறுபத்து நான்கையுங் குறிப்பன
  11. பலகையிருபத்து நான்கும் புவனங் கள் இருபத்தோராயிரத் தறுநூறு தாமிரவோடுகள் உச்சுவாச நிச்சுவா சங்கள்
  12. ஆணிகள் ஏழுபத்தீராயிரமு ம் நரம்புரூபம் ஒன்பதுகலச முடி களும் நவசத்திகளதுரூபம்
  13. இனிச் சிவன் வெளிப்படப் பஞ்சகிருத்தி யத்தின் பொருட்டு ஆனந்தத்தாண்ட வஞ்செய்யும் கனகசபை திருவருள் வடிவினது
  14. இதனிடத்துள்ள பதி னெட்டு ஸ்தம்பமும் பதினெண்பு ராணங்களையுங் குறிக்கும் கலசமுடி யொன்பதும் நவசத்திகளைக் குறிக் கும்
  15. இச்சபைகளைத்தேவ நிருமாண மென்ப
  16. இவற்றின் விரிவு மகரசை வந்திரமுதலிய நூற்களிற் காண லாம்
  17. புலவர்கூட்டம்
சபை (capai)
  1. அவை, குழு, கோட்டி, கூட்டம், கணம், சமவாயம், சமூகம், சங்கம், தொகுதி
சபை (capai)
  1. 5- இரத்தினசபை, கனகசபை, வெள்ளிசபை, தாமிரசபை, சித்தி ரசபை, திருவாலங்காட்டில் இரத்தி னசபை, சிதம்பரத்தில் கனகசபை, மதுரையில் வெள்ளிசபை, திருநெல் வேலியல் தாமிரசபை, திருக்குற் றாலத்திற் சித்திரசபையுமுள

IndoWordNet

சபை — noun
  1. கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா
சபை — noun
  1. அவை
சபை — noun
  1. பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
சபை — noun
  1. வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
சபை — noun
  1. சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.

பட்டமளிப்பு பட்டம்அளிப்பு கூட்டம் வேலை பணி சபா பவன் அவை இடம் ஸ்தாபனம் சபைமண்டபம் மண்டபம். மண்டபம் கூட்டத்தொடர் குழு மாநாடு மண்டலி சமுதாயம் சமூகம் மக்கள்சபை மக்களவை ராஜ்யசபை மாநிலஅவை நீதிமன்றம் அரசபை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சபை
  1. சபைகூடும் மண்டபம்
  2. அவை
  3. கூட்டம்
  4. சம்பவை - பார்வதிதேலி. சிதம்பரத்தில் சிவபெருமான் நடனமாடும் சம்பளக்காரன் - சம்பளம் பெறுபவன்