தொப்பாரம்

துணியிற் கட்டித் தோள் மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை புற்கட்டு கொப்புளம்

Topparam

Tamil Wiktionary

தொப்பாரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. துணியிற் கட்டித் தோள் மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை
  2. புற்கட்டு
  3. கொப்புளம்
  4. நெடுஞ் சப்பாத்து

மூட்டை பாரம் சுமை கோடைக்கட்டி வேனற்கட்டி கொப்பளம் கொப்புளம் கட்டி கொப்புள் சிலந்தி சுடுதண்ணீர்க்கொப்புளம் திலகரோகம் தொப்பை தோடகம் பருமுத்து பளக்கு பிடகம் பொக்குளம் கொப்புளி பொள்ளு

Winslow (1862)

தொப்பாரம் (toppāram)
  1. [prov.] [a contraction of தோழ்ப்பாரம்.] A large bundle tied in a cloth, to be carried over the shoulders, தோட்சுமை
  2. A large truss of grass, &c., புற்கட்டு
  3. See தொம்பாரம்

Fabricius (1972)

தொப்பாரம் — noun
  1. (தோள்பாரம்) a large bundle over the shoulders
  2. (தொம் பாரம்) a large building

Tamil Moli Akarathi (1928)

தொப்பாரம் (toppāram)
  1. கொப்புளம், தோள்பா ரம், நெடுஞ்சப்பாத்து, பேரில்லம், பொட்டணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொப்பாரம்¹ (toppāram) — noun
  1. tapāramu. A kind of crown; முடி விசேடம். குற்றுடை வாளுங் கட்டிக் குலவு தொப்பாரங்கட்டி (திருவாலவா. 4, 12).
தொப்பாரம்² (toppāram) — noun
  1. tcapparamu. Large building; பெரிய கட்டடம். (W.)
தொப்பாரம்³ (toppāram) — noun
  1. cf. தோட்பா ரம். A large bundle of things tied in a cloth, as carried over the shoulders; pack; துணியிற் கட்டித் தோள்மேற் கொண்டுபோகப்படும் பெரு மூட்டை. (யாழ். அக.)
  2. A large truss of grass; புற்கட்டு. (W.)
  3. Boil; கொப்புளம். (யாழ். அக.)
  4. A kind of spurge; நெடுஞ்சப்பாத்து. (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொப்பாரம்
  1. தோட்சுமை
  2. துணிப்பெருமூட்டை
  3. புற்கட்டு
  4. கொப்புளம்
  5. ஒரு முடியலங் காரவகை
  6. முகமூடிவகை
  7. பெரிய கட்டடம்