தோற்றம்

(எ.கதோற்றம் 29 06 1985 origin - (ஆங்) प्रकृति - (இந்தி)

appearance, look form, shape beginning, origin, birth

Winslow (1862)

தோற்றம் (tōṟṟam) — noun
  1. Appearance, visibility, perceptibility, காட்சி
  2. Conspicuousness, prominence, distinctness, in appearance, பிரகாசம்
  3. Origin, rise, beginning, formation, state of existence, spring, source, தொடக்கம்
  4. Birth, production of creatures, worlds, &c., creatures, or things produced, பிறப்பு
  5. Offspring, son. மகன்
  6. (in Thcol.) Evolution of things from their primitive elements–oppos. to ஒடுக்கம். See உற்பத்தி
  7. Reflection, representation, semblance, சாயை
  8. Vision, prospect. object, sight, தரிசனம்
  9. Idea, conception. figure formed in the mind, imagination, notion, ஏண்ணம்
  10. Entrance on the stage as a character; debut, வருகை
  11. Rising of a heavenly body, உதயம்
  12. Phantom, apparition, illusion, ஆவேசம்
  13. Word, சொல்
  14. A fit, seasonable word, ஏற்றமொழி
  15. Praise, eulogy, fame, reputation, புகழ்
  16. Vigor, strength, power. force, வலி
  17. Phenomena, நூதனக்காட்சி. The two classes of தோற்றம், or beings produced, are:–1. சரம், moveable creatures
  18. அசரம், inanimate beings, &c., which see. The four class of தோற்றம்
  19. பை, or சாரயுகம், viviparous, womb-born
  20. முட்டை, or அண்டசம், oviparous or egg-born
  21. நிலம், or உற்பீசம், germinating from the earth by seeds, &c
  22. வியர்வை, or சுவேதசம், insects supposed to be engendered by perspiration, &c., which see severally
  • வெள்ளிதோற்றம் — The appearance of stars, as denoting the time of the evening auspicious for marriage, &c.
  • பேய்த்தோற்றம் — An appearance of an evil spirit.
  • நிலாத்தோற்றம் — Rising of the moon.
  • தோற்றக்கவி — [loc. கட்டியக்காரன்கவி.] A verse sung immediately before the appearance of a person on the stage.
  • தோற்றத்தரு — The verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.
  • தோற்றப்பட — To appear, to be visible, to be conspicuous. 2. To be formed to come into existence, to be born.

Fabricius (1972)

தோற்றம் — noun
  1. (தோன்று) appearance, spectacle, காட்சி
  2. rise, beginning, origin, துவக்கம்
  3. birth, பிறப்பு
  4. things created, visible objects
  5. idea, எண்ணம்
  6. phenomena, நூதனக் காட்சி
  7. offspring, a son, மகன்
  8. semblance, சாயை
  9. vision, prospect, sight, தரிசனம்
  10. debut, entrance on the stage as a character வருகை
  11. a phantom, an illusion, ஆவேசம்
  12. a fit, seasonable word, ஏற்றமொழி
  13. a word, சொல்
  14. vigour, strength, வலி
  15. praise, eulogy, புகழ்
  • தோற்றமாக–தோற்றப்பட — to appear, ; 2. to appear on the stage.
  • தோற்றமானவன்–தோற்றப்பட்டவன் — a celebrated, conspicuous man.
  • நிலாத்தோற்றம் — rising of the moon.
  • தோற்றக்கவி — a verse sung just before the arrival of an actor on the stage.
  • தோற்றத்தரு — the verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.

Tamil Moli Akarathi (1928)

தோற்றம் (tōṟṟam)
  1. உதயம், ஏண்ணம், ஏற்ற மொழி, கணிப்பு, காட்சி, துலக்கம், துவக்கம், தோன்றுதல், பிரபலியம், பிறப்பு, புகழ்ச்சி, பெலன், பொலிவு, மகன், முதன்மை, மூலம், மேன்மை, வலி, வார்த்தை
தோற்றம் (tōṟṟam)
  1. தோல்வி, தோன்றல், பிற த்தல், முளைத்தல், வீணெண்ணம்
தோற்றம் (tōṟṟam)
  1. 2 - சரம், அசரம், இவற்றுட் சரம் நடையுள்ளன
  2. அசரம், நடை யில்லன
தோற்றம் (tōṟṟam)
  1. 2 - பை, முட்டை, நிலம், வியர்வை
தோற்றம் (tōṟṟam)
  1. ஏற்றமொழி, சொல், பிறப்பு, மகன், வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தோற்றம் (tōṟṟam) — noun
  1. Appearance; காட்சி. இலக்குவன் றோன்றிய தோற்றம் (கம்பரா. கும்பகருண. 231). தோற்றஞ்சான் ஞாயிறு (நாலடி, 7)
  2. Vision, sight, perceptibility; பார்வை. என்னுடைய தோற்றத்தில் அது மரமாக உள்ளது
  3. Conspicuousness, prominence, distinctness in appearance; உயர்ச்சி. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் (குறள், 124)
  4. Splendour, brightness; விளக்கம்
  5. Origin, rise, beginning, source; உற்பத்தி. தோற்றமு நிலையுங் கேடும். (மணி. 27, 181)
  6. Birth, avatar; பிறப்பு. (பிங்.) நாய கன் றோற்றத்தின் (கம்பரா. சிறப். 11)
  7. Class; சாதி. வேறுபடவந்த வுவமத்தோற்றம் (தொல். பொ. 307)
  8. Creation; படைப்பு. எவ்வகைப் பொருளுந் தோற்ற நிலையிறுதி (திருக்கோ. 1, உரையகவல்)
  9. Reflection, semblance; சாயை. அவனுக்குத் தந்தையின் தோற்றமிருக்கிறது
  10. Fame, reputation; புகழ். ஈவார்க ணென்னுண்டாந் தோற்றம் (குறள், 1059)
  11. Vigour, strength, power, force; வலிமை. (பிங்.)
  12. Costume, guise; வேடம். வானுயர் தோற்றம் (குறள், 272)
  13. Form; உருவம். நாற்றத்தோற்றச் சுவை யொலி யுறலாகி நின்ற (திவ். திருவாய். 3, 6, 6)
  14. Panegyric; சொன்மாலை. (பிங்.)
  15. Member, limb, part; உறுப்பு. எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் (தொல். பொ. 221)
  16. Nature; தன்மை. அறத்து வழிப்படூஉந் தோற்றம்போல (புறநா. 31)
  17. Idea; எண்ணம். தோற்றனனேயினி யென்னுந் தோற்றத்தால் (கம்பரா. இராவணன்வதை. 78)
  18. Guess, estimate; உத்தேசம். பதினைந்து தேதியிருக்கு மென்று ஒரு தோற்றம். Loc
  19. Entrance on the stage; debut; நாடகப்பிரவேசம். (W.)
  20. Rising, as of a heavenly body; உதயம்
  21. Phantom, apparition, illusion; மாயை. (W.)
  22. Phenomenon, of two classes, viz., caram and acaram; சரம் அசரம் என்ற இருவகைத் திணை. (பிங்.)
  23. Genesis of life. See உயிர்த்தோற்றம்

IndoWordNet

தோற்றம் — noun
  1. விளையாட்டு காட்சி
தோற்றம் — noun
  1. தோற்றம், பிரதிபலிப்பு
தோற்றம் — noun
  1. பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
தோற்றம் — noun
  1. ரூபம், தோற்றம், வடிவம்
தோற்றம் — noun
  1. பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.

காட்சி மரபொம்மை விளையாட்டு வித்தை பிரதிபலிப்பு ஞானம் அறிவு பொருள் ரூபம் வடிவம் எடுத்துக்காட்டுதல் உருவம் உருவமைப்பு தோற்றமைப்பு அங்கஅமைப்பு உடல் உடலமைப்பு பிம்பம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தோற்றம்
  1. காட்சி
  2. விளக்கம்
  3. சாதி
  4. படைப்பு
  5. சாயை
  6. புகழ்
  7. பார்வை
  8. உயர்ச்சி
  9. உற்பத்தி
  10. பிறப்பு
  11. உருவம்
  12. தன்மை
  13. வலிமை
  14. சொல் மாலை
  15. உறுப்பு
  16. உத்தேசம்
  17. நாடகப் பிரதேசம்
  18. எண்ணம்
  19. மாயை
  20. இருவகைத் திணை
  21. காண்க: உயிர்த்தோற்றம்