காட்சி

Tamil Wiktionary

காட்சி — பெயர்ச்சொல் (Noun)

[object Object], [object Object]

காண் சி காட்சியமை காட்சிப்படு காட்சிப்படுத்து காட்சியகம் காட்சித்தொகுப்பு கண்காட்சி பொருட்காட்சி சிறப்புக்காட்சி தொலைக்காட்சி காலைக்காட்சி பகற்காட்சி மாலைக்காட்சி இரவுக்காட்சி

Winslow (1862)

காட்சி (kāṭci) — noun
  1. Sight, view, பார்‌வை
  2. An object of sight, visible appearance, தோற்றம்
  3. The manifestation of a deity or the sight of a great personage, தரிசனம்
  4. (p.) [in logic.] Perception, evidence of the senses, பிரத்தியட்சப்பிரமாணம்
  5. Knowledge, intelligence, ascertainment, அறிவு
  6. [in erotics.] One of the ten அவத்‌தை, the first view which a bridegroom has of his bride, விரகாவஸ்தைக்காட்சி
  7. (c.) Anomaly, a strange event, நூதனக்காட்சி.–Note. In the agama logic, seven species of perception are given, viz.:
  8. ஐயக்காட்சி, Indistinct apprehension, doubt, uncertainty, hesitation
  9. திரிபுக்காட்சி, misapprehension, misconception, optical or mental illusion
  10. விகற்பக் காட்சி, discrimination or knowledge to distinguish things one from another in five particulars, viz.: in name, kind, quality, action, and substance. or matter
  11. பொறிவாயிற்காட்சி, perception of the sences, with the aid of the mental faculties
  12. மனக் காட்சி, or மானதக்காட்சி, ideas formed in the mind of things perceived by the senses
  13. அனுபவக்காட்சி, perception by actual experience of the exercise of the affecions towards objects perceived
  14. யோகக்காட்சி, the spiritual perception of the Yoga, or knowledge of events past, present or future, by abstract devotion–Note. 2d. Each of the above has two divisions, one, புறம்–abroad, relating to external or secular affairs; the other, அகம்– at home, to religious affairs. கண்ணுக்குக்காட்சிகடவுளுக்குங்காட்சி. What is pleasing to the sight is pleasing to the deity–referring to the ornaments of the temple, rich offerings, &c. கண்ணுள்ளபோதே காட்சி. Gratify your sight while you can
  • காட்சிகொடுக்க — To manifest himself–as a deity.
  • காட்சிப்பிரமாணம் — One of the eight modes of ascertaining truth. See பிரத்தியட்சப்பிரமாணம்.
  • காட்சிப்பொருள் — Things seen, objects of sight or sense–as distinguished from கருத்துப்பொருள். or mental objects.
  • காட்சிமறைத்தல் — Hinderance in seeing or observing any thing. See அஷ்டகுற்றம்.
  • காட்சியர்–காட்சியவர்–காட்சியார் — The wise, அறிஞர்.
  • காட்சியாக — To appear in a vision.

Fabricius (1972)

காட்சி — noun
  1. sight, view, vision, பார்வை:
  2. an object of sight, visible appearance, தோற்றம்:
  3. manifestation of God, தரிசனம்
  4. (logic) evidence of the senses, பிரத்தியக்ஷப்பிரமாணம்:
  5. knowledge, அறிவு:
  6. beauty, அழகு:
  7. nature, தன்மை
  • காட்சிகொடுக்க–ஆக — to appear in a vision.
  • காட்சிப்பிரமாணம்–பிரத்தியட்சப் பிர மாணம் — perception, means of perception. .
  • காட்சிப்பொருள் — visible concrete things ( to கருத்துப்பொருள், abstract things).
  • காணாக்காட்சி — an extraordinary sight or occurrence.
  • பொருள்காட்சிச்சாலை — a museum.

Tamil Moli Akarathi (1928)

காட்சி (kāṭci)
  1. அறிவு, அற்புதம், ஓரளவை, தரி சனம், தோற்றம், பத்தவத்தையி னொன்று
  2. அது தலைமகளைத் தலைம கன் தனியிடங்காண்டல்
  3. பார்வை பிரத்தியட்சபிரமாணம், வேடிக்கை
காட்சி (kāṭci)
  1. 6- ஐயக்காட்சி, வாயிற்காட்சி, விகற்பக்காட்சி, அந்நுவயக் காட்சி, வெதிரேகக்காட்சி, திரவுகாட்சி
காட்சி (kāṭci)
  1. அறிவு, பார்வை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காட்சி (kāṭci) — noun
  1. < காண்-
  2. Sight, view; கண்ணுறல். தரும மூர்த்தியைக் காட்சியே யினிக்கடன் (கம்பரா. விபீடண. 19)
  3. Form, appearance; தோற்றம். கையென லாயிற்றன்றே . . . மணியின் காட்சி (கம்பரா. திருவடி. 82)
  4. Vision of a deity; sight of a great personage; audience; தரிசனம். எதிரேநின்று காட்சி தந்தருளி (பெரியபு. மெய்ப்பொ. 23)
  5. Exhibition. See கண்காட்சி
  6. Attractive object of sight; அற்புதநிகழ்ச்சி. அஃது ஒரு கண் கொளாக் காட்சியாயிருந்தது. Colloq
  7. Perception; பிரத்தியட்சப்பிரமாணம். மருளில் காட்சி யைவகை யாகும் (மணி. 27, 14)
  8. Knowledge; அறிவு. மரு டீர்ந்த மாசறு காட்சி (குறள், 199)
  9. (Puṟap.) Theme describing the first sight of a maiden by a man who falls in love with her; தலைவன் தலைவியை முதன்முதற் காணுதலைக்கூறும் ஒரு கைக் கிளைத்துறை. (பு. வெ. 11, ஆண்பால்.)
  10. (Puṟap.) Theme describing the choice of a suitable stone for a memorial of a warrior, or of a virtuous wife who chose not to survive her deceased husband; வீரர்வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை. (தொல். பொ. 60: சிலப். 25, அரும்.)
  11. (Puṟap.) Theme describing the actual sight of the memorial stone; நடுகல்லை வீரர் தரிசித்தலைக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.)
  12. Place, site, where something was once seen or found; ஒருபொருளைக் கண்ட இடம். கண்டு நின்றுவந்த காட்சியு மிதுவே (கல்லா. 6, 28)
  13. Beauty; அழகு. அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி (பொருந. 20)
  14. Nature; தன்மை. கற்குழித்து நெறிசெயுங் காட் சியே (சேதுபு. அவை. 4)
காட்சி (kāṭci) — noun
  1. < காண்-
  2. Doctrine, tenets; கோட்பாடு. நின்காட்சி யழித்திடுவேன் (நீல கேசி, 494)
  3. Scripture; நூல். திறவோர் காட்சி யிற் றெளிந்தனம் (புறநா. 192)

IndoWordNet

காட்சி — noun
  1. கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.
காட்சி — noun
  1. கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.
காட்சி — noun
  1. ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி
காட்சி — noun
  1. விளையாட்டு காட்சி
காட்சி — noun
  1. கண்ணுக்கு தெரிகின்றவைகள்.

வேலை பணி காதல் திறனாய்வு தோற்றம் நாடகம் புவிகாட்சி அங்கம் பாகம் மரபொம்மை விளையாட்டு வித்தை பொருள் நாடகக் காட்சி தரிசம் ஞானம் அறிவு தரிசனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காட்சி
  1. பார்வை
  2. காணல்
  3. தோற்றம்
  4. தரிசனம்
  5. கண்காட்சி
  6. வியத்தகு காட்சி
  7. காட்சியளவை
  8. அறிவு
  9. தலைமகளைத் தலைமகன் முதலில் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறை
  10. வீரர் வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை
  11. நடுகல்லை வீரர் தரிசித் தலைக் கூறும் புறத்துறை
  12. அழகு
  13. தன்மை
  14. நூல்