மண்

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும். இவற்றில் பல வகைகள் உள்ளன. செம்மண்,

soil, earth dry ground, land land, country

Tamil Wiktionary

மண்
  1. பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
  2. (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல்.
  3. இவற்றில் பல வகைகள் உள்ளன.

மணல் மண்வளம் மண் வகைகள் மண்ணாசை மண்ணுலகம் மண்ணாங்கட்டி மண்வாசனை மண் பரிசோதனை மண்ணரிப்பு செம்மண் களிமண் உவர்மண் பிடிமண் புற்றுமண் பூமி

Winslow (1862)

மண் (maṇ) — noun
  1. The earth, the world, பூமி
  2. Lime-mortar, சுட்டசாந்து
  3. Hill, mountain, மலை
  4. Atom, particle, grain, அணு
  5. Soil, ground, dirt, land, நிலம்
  6. Greatness, superiority, excellency, மாட்சிமை
  7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust–an imprecation
  • மட்கடி–க்கிறேன்–த்தேன்–ப்பேன்–க்க — To damage, destroy, lose money by negligence. (Beschi.)
  • மட்கலம்–மட்பாண்டம்–மட்பாத்திரம்–மண்பாண்டம்–மண்பாத்திரம் — An earthen vessel. 2. (fig.) The body, உடல்.
  • மட்கு–கிறது–மட்கினது–ம்–மட்க — [as மக்கு.] To grow dim, be deprived of lustre, glory, brilliance, மழுங்க. 2. To be fouled, to become dirty, அழுக்காக.
  • மட்குகை — Becoming mouldy; damaged. 2. As மண்குகை.
  • மட்சுவர்–மண்சுவர் — A mud-wall.
  • மண்கட்ட — To form earth–as white ants, புற்றுக்கட்ட. 2. To make moulds of earth for casting metals, as கருக்கட்ட.
மண் (maṇ) — infinitive
  1. [by apocope of Sa. Man'da.] Decoration, adorning, embellishment, ஒப்பனை. (சது.)
  • மண்ணுறுத்த — To adorn, embellish, அலங்கரிக்க. (நீதி.)
மண் (maṇ) — noun
  1. –மண்ணு, கிறேன், மண்ணினேன், மண்ணுவேன், மண்ண, v. a. To ornament, beautify, decorate, அலங்கரிக்க
  2. To wash, to clean by washing, கழுவ. (p.)
  • மண்ணீர் — Water to wash with, கழுவுநீர். (மூது.)

Fabricius (1972)

மண் — noun
  1. the earth, the world, பூமி
  2. soil, ground, land, நிலம்
  3. dust, earth, தூள்
  4. excellence, greatness, மாட்சிமை
  5. drum-paste (to increase its sound), முழவின் மார்ச் சனை
  6. adorning, decorating, ஒப் பனை
  7. a hill, a mountain, மலை
  8. lime-mortar, சுட்ட சாந்து
  • மட்கலம்–மண்கலம்–மண் பாத்திரம் — an earthen vessel.
  • மட்குகை–மண்குகை — a cave in the earth, a crucible.
  • மட்கொத்தளம் — a bulwark of earth, a rampart.
  • மட்சுவர்–மண்சுவர் — a mud-wall.
  • மண் கட்ட — to form earth, as white ants; 2. to make moulds of earth for casting metals.
  • மண்கணை–குட முழவு — an earthen pot with a skin over its mouth for a drum, ; 2. any drum.
மண் — r. t.
  1. , மண்ணு, III. r. t. decorate, அலங் கரி
  2. wash, கழுவு
  • மண்ணீர் — water to wash with

Tamil Moli Akarathi (1928)

மண் (maṇ)
  1. அணு, ஒப்பனை, கழுவுதல், சுட்டசாந்து, துகள், நிலம், பூமி, மண்ணென்னேவல், மலை, மாட்சி மை, முழவின் மார்ச்சனை
மண் (maṇ)
  1. ஒப்பனை, சுட்டசாந்து, பூமி, மண் ணென்னேவல், மலை, மாட்சிமை, முழவின் மார்ச்சனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்¹ (maṇ) — noun
  1. cf. mṛd. [K. maṇ.]
  2. The earth, the world; பூவுலகம். மண்ணொடு புகழ் நிறீஇ (பு. வெ. 2, 5)
  3. Earth, as an element; பிருதிவி பூதம். புனலொடு மண்ணும் விண்ணும் (திருவாச. 5, 8)
  4. Clods of earth taken from ten specified places and rubbed on the person in purificatory baths; நீராடுங்காற் பூசிக்கொள்ளும் பத்துவகை மண். ஆடு நீரன பத்து மண்களும் (சீவக. 2418)
  5. Dust, dirt; புழுதி. (பிங்.)
  6. Sacred white earth. See திருமண். ஈராறு நாமமுரை செய்து மண்கொ டிடுவார்கள் காணுமிமையோர் (பாரத. ஒன்பதாம். 1)
  7. Dry ground, soil, land; தரை. (W.)
  8. Atom, particle, grain; அணு. மண்டிணிந்த நிலவனும் (புறநா. 2)
  9. Lime-mortar, cement; சுண்ணச் சாந்து. மண்ணோ டியைந்த மரத்தனையர் (குறள், 576)
  10. Paste smeared on the head of a drum for toning it; மத்தள முதலிய வற்றிற் பூசும் மார்ச்சனை. மண்கனைமுழவின் (மலைபடு. 370)
  11. House-site; மனை. நான் கோயிலில் மண்பெற்றது அவ்வேளாளனாலே (திவ். கண்ணிநுண். 3, வ்யா.)
  12. Cultivable field; வயல். அவன் மண் மனையில்லாதவன். Loc
மண்² (maṇ) — noun
  1. < மண்ணு-
  2. Washing; கழு வுகை. மண்ணீரு மாகாது (மூதுரை, 12). (அக. நி.)
  3. Adornment, decoration; ஒப்பனை. மண்கெழு மறவன் (பு. வெ. 4, 15, கொளு)
மண்³ (maṇ) — noun
  1. prob. மாண். Greatness, superiority, excellence; மாட்சிமை. (அக. நி.)

IndoWordNet

மண் — noun
  1. பூமியின் மேற்பரப்பில் உள்ள மணலை விட நுண்மையாக இருக்கும் துகள்.

இயற்கைப் பொருட்கள் சேறு சகதி சாக்குக்கட்டி சீமைச்சுண்ணாம்பு கோலிசந்தனம் மணல் முல்தானி மிட்டி முல்தானி மெட்டி உவர்மண் உழைமண் களர்நிலமண் ஊசரமண் சவட்டுமண் உவரகமண் உப்புமண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்
  1. நிலவுலகம்
  2. நீராடுங்கால் பூசிக்கொள்ளும் பத்துவகை மண்
  3. பூமி
  4. புழுதி
  5. காண்க: திருமண்
  6. தரை
  7. அணு
  8. சுண்ணச்சாந்து
  9. மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை
  10. மனை
  11. வயல்
  12. கழுவுகை
  13. ஒப்பனை
  14. மாட்சிமை