மண்டலம்

வட்டம் வட்ட வடிவம் கிராந்திவீதி, சூரியவீதி

earth region, domain, realm circle, orbit, sphere

Tamil Wiktionary

மண்டலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வட்டம்
  2. வட்ட வடிவம்
  3. கிராந்திவீதி
  4. சூரியவீதி
  5. பிரதேசம். மேக மண்டலம்.
  6. பாம்பு முதலியவற்றின் சுற்று
  7. வட்டவடிவான வியூகவகை
  8. நாட்டின் பெரும்பகுதி
  9. ஊர்
  10. மந்திரசக்கரம்
  11. மண்டில நிலை - தேசிக்கூத்தின் வகை
  12. 40
  13. 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு
  14. குதிரைக் கதிவகை
  15. கூட்டம்
  16. பரிவேடம்
  17. நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்கமற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை
  18. நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
  19. காதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம்
  20. வில்லோர் நிலையுள் ஒன்று

மண்டு மண்டல பூசை வளிமண்டலம் ஒரை மண்டலம் காற்று மண்டலம் வெப்ப மண்டலம் துருவ மண்டலம் நரம்பு மண்டலம் கழிவு மண்டலம் நிணநீர் மண்டலம் சுவாச மண்டலம் காந்த மண்டலம் அயனி மண்டலம் வட்டம் பிரதேசம் சுற்று பகுதி கூட்டம் பரிவேடம்

Winslow (1862)

மண்டலம் (maṇṭalam) — noun
  1. Circle, sphere, orbit, disc, வட்டம்
  2. Disc of the sun or moon
  3. A great circle–as the equator or ecliptic, கிராந்திமண்டலம்
  4. A region, world–as of the sun, moon, or clouds, as சத்த மண்டலம்
  5. Any circular, or elliptical figure, வலயம்
  6. Coil, as of a snake or rope, பாம்புச்சுற்று. W. p. 633. MAN'DALA
  7. A mystic circular diagram, யந்திரம்
  8. A bending attitude in archery. See மண்டலநிலை
  9. A course of regimen for forty days, நாற்பதுநாள்
  10. See மண்
  • திரிமண்டலம்–மண்டலம்–3.–அக்கினிமண்டலம்–ஆதித்த மண்டலம்–சந்திரமண்டலம் — or , The three mystic regions of the human body. These are; 1. , that of fire, in the lower abdomen; 2. , of the sun, in the stomach and heart; 3. , of the moon, in the head and shoulders. See these words.
  • சத்தமண்டலம்–மண்டலம்–7.–வாயுமண்டலம்–வருணமண்டலம்–சந்திரமண்டலம்–சூரியமண்டலம்–நட்சத்திர மண்டலம்–அக்கினிமண்டலம் — or , Seven regions in the universe. These are; 1. , of wind; 2. , of water; 3. , of the moon; 4. , of the sun; 5. , of the stars; 6. , of , fire; 7. திரிசங்குமண்டலம், of திரிசங்கு or the Southern cross; which see.
  • மண்டலநிலை — The second of the four attitudes in archery. See நிலை.
  • மண்டலமழை — Rain extending through the country.
  • மண்டலம்போட–மண்டலமிட — To form into circles or coils, as a snake. 2. To pass round one another–as combatants, or as birds, &c., in a circle, சுற்றிச்சுற்றிவர. 3. To make ornamental, astrological or mystic diagrams, commonly of a circular figure, யந்திரம்வகுக்க.
  • மண்டலவிதி — Directions for making diagrams, for worship, &c.

Fabricius (1972)

மண்டலம் — noun
  1. a circle, an orbit, வட்டம்
  2. region, country, province, தேசம்
  3. a course of regimen for 40 days
  4. mystic circular diagram
  5. a bending attitude in archery
  6. the three mystic regions of the human body which are I. அக்கினிமண்டலம்; the region of fire in the lower abdomen; II. ஆதித்தமண்டலம், of the sun in the stomach and heart; and III. சந்திரமண்டலம், of the moon in the head and shoulders
  7. coil, as of a snake or coir, பாம்புச்சுற்று
  • மண்டலம் போட–இட — to from into coils as a snake; 2. to pass round one another; 3. to make mystic diagrams.
  • சூரிய மண்டலம் — the region of the sun.
  • சோதி மண்டலம் — the region of the stars.
  • பர மண்டலம் — the heaven.
  • பூ மண்டலம் — the earth, the terrestrial globe.

Tamil Moli Akarathi (1928)

மண்டலம் (maṇṭalam)
  1. இயந்திரம், இருகாலும் பக்கல்வளைய நிற்குநிலை, உண்டை, குவியல், சூரியமண்டல முதலியன தேயம், நகக்குறி,நாடு, நாற்பது நாள் கொண்டது, நாற்பத்தெட்டு நாள், பூமி, வட்டம்
மண்டலம் (maṇṭalam)
  1. 3- அக்கினிமண்டலம், ஆதி த்தமண்டலம், சந்திரமண்டலம்
மண்டலம் (maṇṭalam)
  1. 7- வாயுமண்டலம், வருண மண்டலம், சந்திரமண்டலம், சூரிய மண்டலம், நட்சத்திரமண்டலம், அக் கினிமண்டலம், திரிசங்குமண்டலம்
மண்டலம் (maṇṭalam)
  1. நாடு, பூமி, வட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்டலம்¹ (maṇṭalam) — noun
  1. The earth; பூமி. மண்டலந்தனை . . . குளிரவே வைத்தோன் (பாரத. குருகுல. 3).
மண்டலம்² (maṇṭalam) — noun
  1. < maṇḍala
  2. Circle, sphere, orbit; வட்டம். (பிங்.) சுடர்மண் டலம் (திருநூற். 80)
  3. Disc, as of sun or moon; வட்ட வடிவம். (திவா.)
  4. Ecliptic. See கிராந்திவீதி
  5. Region, as of sun, moon or clouds; பிரதேசம். மேக மண்டலம்
  6. Coil, as of a snake or rope; பாம்பு முதலியவற்றின் சுற்று. மண்டலம் பயி லுரகர் (பாரத. குருகுல. 3)
  7. Array of an army in a circular form; வட்டவடிவான வியூகவகை. (குறள், 767, உரை.)
  8. District, division of a country; நாட்டின் பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்ப. 94)
  9. Town; ஊர். (பிங்.)
  10. Mystic circular diagram; மந்திர சக்கரம். (W.)
  11. See மண்டில நிலை. (பிங்.)
  12. Period of 40, 41 or 45 days; 40, 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு. ஒரு மண்டலம் மருந்து சாப்பிடவேண்டும்
  13. A pace of horse; குதிரைக் கதிவகை. பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றினானே (சீவக. 795)
  14. Assembly; serried array; கூட்டம். சேனை மண்டலங்களுடனே (பாரத. பத்தாம. 30)
  15. Halo, as round sun or moon; பரிவேடம். சூரியனைச்சுற்றி மண்டலம் பாட்டிருக்கிறது
  16. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the middle finger and the thumb are joined and the other fingers are bent, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்க மற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையா வினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
  17. An Upaniṣad, one of 108; நூற்றெட் டுபநிடதங்களுள் ஒன்று
  18. (Erot.) Circular nailmark made on a woman's body by her lover during sexual union, one of six naka-k-kuṟi q.v.; காதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம். (கொக்கோ. 5, 58.)
  19. A posture in archery, one of four viltor-nilai, q.v.; வில்லோர்நிலையு ளொன்று. (சூடா.)

IndoWordNet

மண்டலம் — noun
  1. ஒரு முக்கியமான அதிகாரியின் கீழ் இருக்கும் மேலும் மாவட்டங்களின் பிரிவில் இருக்கும் எல்லையின் ஒரு பிரிவு
மண்டலம் — noun
  1. ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு
மண்டலம் — noun
  1. மண்டலம், குழு, சங்கம்
மண்டலம் — noun
  1. பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் தளம்.
மண்டலம் — noun
  1. பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி.

பகுதி கட்வால் குமாயூங் குமாஊங் மாவட்டம் பாந்தா மயூர்பஞ்ச் கொரியா ஜில்லா ஔரங்காபாத் ஜில்லா பிலாஸ்பூர் ஜில்லா தார் பன்னா பிண்ட ஜில்லா பிண்ட சிவபுரி ஜில்லா சாகர் ஜில்லா பெல்காம் மாவட்டம் நீலகிரி ஜில்லா நீலகிரி மாவட்டம் மால்தா ஜில்லா குழு சங்கம் கூட்டம் சமுதாயம் சமூகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்டலம்
  1. நாடு
  2. வட்டம்
  3. பூமி
  4. வட்டவடிவம்
  5. சூரியவீதி
  6. நாட்டுப்பகுதி
  7. பாம்பு முதலிய வற்றின் சுற்று
  8. வட்டவடிவமான படைவகுப்பு வகை
  9. நாட்டின் பெரும்பகுதி
  10. ஊர்
  11. மந்திரச் சக்கரம்
  12. தேசிக்கூத்தின்வகை
  13. 40, 41 அல்லது 45 நாள்கொண்ட காலவளவு
  14. குதிரை நடைவகை
  15. கூட்டம்
  16. பரிவேடம்
  17. அபிநய வகை
  18. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
  19. அடையாளம்
  20. வில்லோர் நிலையுள் ஒன்று