முண்டம்
நெற்றி வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் - திருவாசகம்(முண்டை என்பது முண்டம் என்னும் நெற்றியைக் குறிக்கும் சொல்லடியாக வந்தது.) தலை, கை, கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும் அறிவற்றவன்- வசைச்சொல்லாக
a dismembered body; one without limbs or a head. fool, idiot, jackass, dumbass forehead
Tamil Wiktionary
முண்டம் — பெயர்ச்சொல் (Noun)
நெற்றி வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் - திருவாசகம்(முண்டை என்பது முண்டம் என்னும் நெற்றியைக் குறிக்கும் சொல்லடியாக வந்தது.) தலை கை கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும் அறிவற்றவன்- வசைச்சொல்லாக
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முண்டம் (muṇṭam) — noun
< muṇḍa Head; தலை. (பிங்.) முண்டம் வெம்ப (திருவாலவா. 44, 31) Forehead; நெற்றி. முண்டத்துற்ற கண்ணெரியினான் (இரகு. தேனுவ. 86) Clean-shaven head; மழித்த தலை. சடையு முண்டமுஞ் சிகையும் (அரிச். பு. விவாக. 2) Bald head; வழுக்கைத்தலை. (W.) Skull; கபாலம். இறை யான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை (திவ். பெரியதி. 5, 1, 8) Headless trunk; உடற் குறை. (யாழ். அக.) Limbless body; உறுப்புக் குறை. கை முண்டம், கால் முண்டம் Undeveloped fœtus; நிரம்பாக் கருப்பிண்டம். முண்டம்விழுந்தது Naked body; நிர்வாணமான உடல். Colloq Useless person; blockhead; அறிவில்லாதவன் Sphere, globe; திரட்சி. (சூடா.) Stump, stake; குற்றி. (இலக். அக.) Iron dross. See மண்டூரம். (அக. நி.) An Upaniṣad. See முண்டகம்² (யாழ். அக.) See முண்டபங்கி. நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64) cf. puṇḍra. Caste mark on the forehead; புண்டரம். ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்டமாட் டாது (திருவாச. 35, 9) cf. piṇḍa. A preparation of rice-flour cooked in steam; பிட்டு. (அக. நி.) Ankle; கணுக்காற்பொருத்து Piece, as of timber; மரத்துண்டு Mass; கட்டி. பேராறு பெருகிவர பீமுண்டம் மிதந்துவர
முண்டம் (muṇṭam) — noun
perh. muṇḍa. A single card of a suit, in the hands of a player; சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச் சார்ந்த ஒற்றைச்சீட்டு. Colloq.
Winslow (1862)
முண்டம் (muṇṭam) — noun
The head, தலை The forehead, நெற்றி A shaved head, a bald pate, மழித்ததலை (c.) A headless trunk, உடற்குறை. W. p. 665. MUN'DA A naked body, நிர்வாணசரீரம் A ball or globe, உண்டை [in anat.] The trunk One of the Upanishads. See உபநிடதம். முண்டமாய்நிற்கிறான். He stands naked
முண்டாகாரம் — A headless form, or figure; [ex ஆகாரம்.]
Fabricius (1972)
முண்டம் — noun
the head, தலை a headless trunk a shaved head a naked body, நிர்வாண சரீரம் a ball or globe, உண்டை the forehead, நெற்றி one of the Upanishads
முண்டமாய் நிற்கிறான் — he stands naked. முண்டாகாரம் — a headless form or figure.
Tamil Moli Akarathi (1928)
முண்டம் (muṇṭam)
உடற்குறை, உபநிடத முப் பத்திரண்டில் ஒன்று, குற்றி, தலை, திரட்சி, நெற்றி, மொட்டைத்தலை
முண்டம் (muṇṭam)
உடற்குறை, தலை, திரட்சி, மொட்டைத்தலை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல் அகராதி
சொல் தேடு