வாதம்

(பெ) - விவாதம் சர்ச்சை

Argument

Tamil Wiktionary

வாதம்
  1. (பெ) -
  2. விவாதம்
  3. சர்ச்சை
  4. தர்க்கம்
  5. தருக்கம்
  6. ஒரு பட்சத்தை எடுத்துக் கூறுதல்
  7. உடல் உறுப்புகளை முடமாக்கும் வாத நோய்
  8. சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று, இங்கு வாத நாடி காற்றைக் குறிக்கும்

[object Object]

வாதநோய் பக்கவாதம் கீழ்வாதம் இளம்பிள்ளைவாதம் முடக்குவாதம் விவாதம் வாக்குவாதம் பிடிவாதம் எதிர்வாதம் விதண்டாவாதம் பிரிவினை வாதம் பொருள்முதல்வாதம் யதார்த்தவாதம் பயங்கரவாதம்

Winslow (1862)

வாதம் (vātam) — noun
  1. Wind, air, காற்று
  2. The vital airs, வாயு
  3. One of the diseases from bad humors of the body. See முப்பிணி
  4. Rheumatism, gout, inflammation of the joints, வாயுநோய். W. p. 749. VATA
  5. Disputation, argument, discussion, தருக்கம். [Sa. Vada.]
  6. Alchemy, a pretended art of transmuting metals, &c.; occult chemistry, as taught in India, இரசவாதம்; [a currupt. of Sa. Vatiga.]–Note. There are different kinds of rheumatism, as இளம்பிள்ளைவாதம் or பச்சைவாதம், a kind of pleurisy; கரட்டுவாதம், a goitre, wen; கரஸ்தம்பவாதம், a kind of flatulency; குதிவாதம், a cramp in the heels; திமிர்வாதம் palsy paralysis. வாதம்ஊதியறிவேதம்ஓதியறி. Try alchemy by refining metals, and the Vedas by sound learning. Prov
  • வாதகரப்பான் — The Ailanthus tree.
  • வாதகரப்பான்பட்டை — Its bark which is used as an antidote for paralysis.
  • வாதகாசம் — A pulmonic complaint. See காசம்.
  • வாதகாலம் — The third period of life; see also பித்தம் and சிலேட்டுமம். 2. The third division of a day.
  • வாதகுன்மம் — Hypochondriac disorders. See குன்மம்.
  • வாதக்காலன்–வாதக்கையன் — One who is arthritic in his arms and legs.

Fabricius (1972)

வாதம் — noun
  1. wind, air, வாயு
  2. one of the humours of the body, flatulency inducing melancholy, hypochondriasis
  3. rheumatism, gout, வாயுநோ
  4. alchemy, இரசவாதம்
  5. disputation, discussion, தருக்கம்
  • வாதகாசம் — a pulmonic complaint.
  • வாதகுன்மம் — hypochondriac disorders.
  • வாதக் காலன்–கையன் — one who is paralytic in his legs or arms.
  • வாதக்கொதி–சுரம் — feverish state of the body from flatulent or acid humours.
  • வாதசரீரம் — a bloated body.
  • வாதசூலை — arthrites or gout from cold humours.

Tamil Moli Akarathi (1928)

வாதம் (vātam)
  1. இரசவாதம், இரும்பு முதலிய லோகங்களைப் பொன்னாக்கும் வித் தை, காற்று இது உயிர்வேதனையி னொன்று, சம்பாஷணை, தருக்க மு டிவு, தருக்கம், முப்பிணியினொன்று, முறைப்பாடு, வில்வம்
வாதம் (vātam)
  1. காற்று, தருக்கம், முப்பிணியி லொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாதம்¹ (vātam) — noun
  1. < vāta
  2. Wind, air; காற்று. (பிங்.) மாவாதஞ் சாய்த்த மராமரமே போல் கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99)
  3. The ten vital airs of the body. See தசவாயு. (W.)
  4. Windy humour of the body; உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு. (பிங்.) வாதபித்த கபமென . . . மூவ ரும் . . . நலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிறப். 31)
  5. See வாதநாடி
  6. See வாதநோய்
வாதம்² (vātam) — noun
  1. < vāda
  2. Utterance; சொல். எஞ்சலின் மந்திரவாதமன்றி (பெரியபு. திருஞான. 911)
  3. Argument; வாதம் முதலியவற்றில் ஒருபட்சத்தை யெடுத்துக்கூறுகை
  4. Disputation, contention; தருக்கம். (சூடா.) வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன் (பெரியபு. திருஞான. 924)
  5. Conversation; சம்பாஷணை. (யாழ். அக.)
  6. Alchemy; இரசவாதவித்தை. வகரமாதி மூன்றாகிய வசியமே வாதம் (திருவிளை. எல்லாம்வல்ல. 17)
வாதம்³ (vātam) — noun
  1. Bael. See வில்வம். (மலை.)

IndoWordNet

வாதம் — noun
  1. ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
வாதம் — noun
  1. ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

விவாதம் வாக்குவாதம் தர்க்கம் நிரூபனம் உரையாடல் குதர்க்கம் விதண்டாவாதம் வழக்கு தருக்கம் வியாச்சியம் விதண்டை விசாரணை