அதிசயம்

புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று ஏற்படுத்தும் ஆச்சரியம் அல்லது வியப்பு வியப்பு ஏற்படுத்தும் புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று நம்பமுடியாத விந்தை

wonder, a great surprise that which causes wonder; strange a miracle, miraculous event

Winslow (1862)

அதிசயம் (aticayam) — noun
  1. Astonishment, surprise, wonder, admiration, delight, captivation, ஆச்சரியம்
  2. An extraordinary occurrence, any thing wonderful, strange, miraculous, அற்புதம்
  3. News, information, புதுமை
  4. One of the eighteen defects of the body, பதினெண்குற்றத்தொன்று
  5. [in rhetoric.] Hyperbole or exaggerated description, ஓரலங்காரம்
  • அதிசயச்சொல் — A word indicating wonder, surprise, an exclamation.
  • அதிசயவிரக்கச்சொல் — A word expressing wonder and pity.
  • அதிசயன் — God of the Jainas, அருகன். (p.)
  • அதிசயிக்க — To wonder, be surprised, delight in, or be enraptured with.
  • அதிசயோத்தி — Hyperbole, மிகக் கூறுமோரலங்காரம். Wils. p. 18. ATISHAYOKTI.

Fabricius (1972)

அதிசயம் — noun
  1. wonder, admiration, ஆச்ச ரியம்
  2. miraculous event, அற்புதம்
  3. superiority, excellence
  4. excess
  • அதிசயோக்தி–அதிசயம்–யுக்தி — (+), hyperbole, a figure of speech; உயர்வு நவிற்சியணி.
  • அதிசயமொழி — expression of wonder.

Tamil Moli Akarathi (1928)

அதிசயம் (aticayam)
  1. அதிரேகம், அற்புதம், ஓர லங்காரம், நூதனம், புதுமை, மாயை, யாக்கைக்குரிய பதினெண் குற்றத் தொன்று
அதிசயம் (aticayam)
  1. அதிரேகம், அற்புதம், இறும் பூது, சித்திரம், விசித்திரம், விபரீ தம், விம்மிதம், வியப்பு, இரும்பு
அதிசயம் (aticayam)
  1. 3 - கர்மக்கயாதிசயம், சகசாதி சயம், தெய்வீகாதீசயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அதிசயம் (aticayam) — noun
  1. < atišaya
  2. Excellence, superiority; சிறப்பு. குணாதிசயம்
  3. (Jaina.) Pre-eminence, as an attribute of Arhat, of three kinds, viz., சகசாதிசயம், கர்ம க்ஷயாதிசயம். தெய்வீகாதிசயம். (சீவக. 2813.)
  4. Excess; மிகுதி. கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109)
  5. See அதிசயோக்தி. (தண்டி. 54.)
  6. Astonishment, wonder; ஆச்சரியம். அடிகளிவ் வழிபோந்த வதிசய மறி யேனே (தேவா. 938, 1)

IndoWordNet

அதிசயம் — noun
  1. ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
அதிசயம் — noun
  1. எதிர்பாராத ஒன்று திடீரென்று நிகழ்தல்
அதிசயம் — noun
  1. அற்புதமானது அல்லது அசாதரணமானது
அதிசயம் — noun
  1. புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை
அதிசயம் — noun
  1. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்

வியப்பு ஆச்சரியம் திகைப்பு மலைப்பு பிரமிப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் செயல் விசித்திரம் விந்தை வினோதம் நிகழ்ச்சி சம்பவம் விநோதம் பொருள் ஆச்சர்யம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அதிசயம்
  1. புதுமை, வியப்பு
  2. மிகுதி
  3. மேம்பாடு
  4. சிறப்பு