அரணம்
கோட்டை மதில் காட்டுத் துருக்கம்/அரண் பரிகாரம்
Aram
Winslow (1862)
அரணம் (araṇam) — noun
- Protection by forests, &c., காவற்காடு
- A fort, கோட்டை
- Wall, மதில்
- Hedge, enclosure, வேலி
- A jacket or coat of mail, கவசம்
- A door, கதவு
- A dart, a javelin, வேல்
- A bed, மஞ்சம்
- A sandal, தொடுதோல். (p.)
Fabricius (1972)
அரணம் — noun
- அரணி, s. a fort கோட்டை
- a wall, மதில்
- coat of mail
- forest
- அரணாதுர்க்கம் — a fortified tower.
Tamil Moli Akarathi (1928)
அரணம் (araṇam)
- அழகு, கதவு, கருஞ்சீரகம், க வசம், காவல், காவற்காடு, காவற் சாலை, கோட்டை, தொடுதோல், மஞ்சள், மதில், வேலி
அரணம் (araṇam)
- கதவு, கவசம், காவற்காடு, கோ ட்டை, தொடுதோலல், மஞ்சம், மதில், வேலி, வேல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரணம்¹ (araṇam) — noun
- prob. šaraṇa
- Protection; காவல். என்னுயிர்க் கரண நாடி (யசோதர. 2, 61)
- Hedge, enclosure; வேலி. (சூடா.)
- Fort; கோட்டைமதில். முழுமுத லரண முற்றலும் (தொல். பொ. 65)
- Forest, as a strong defence; காட்டுத்துருக்கம். (பிங்.)
- Coat of mail; கவசம். (பிங்.)
- Dart, javelin; வேல். (பிங்.)
- Remedy; பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவ னும் (ஞானா. 56)
- Sandal; செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69)
- Bed, couch; மஞ்சம். (அக. நி.)
அரணம்² (araṇam) — noun
- Black cumin. See கருஞ்சீரகம். (தைலவ. தைல. 112.)
அரணம்¹ (araṇam) — noun
- cf. ṛṇa. Bastion; கொத்தளம். (அக. நி.)