கச்சை

girdle

Tamil Wiktionary

கச்சை — பெயர்ச்சொல் (Noun)
  1. பெண் மார்புக்கு அணியும் உள்ளாடை
  2. கச்சை என்றால் பழங்காலத்தில் கவசம் என்றும்
  3. கயிறு என்றும் பொருள் உண்டு
  4. இதனால் கயிறு போன்று அமைந்து கவசமும் கொண்ட மின்கம்பிகளை குறிக்க இச்சொல் உகந்ததாகும்
  5. மின்கம்பி

Winslow (1862)

கச்சை (kaccai) — noun
  1. A girdle, அரைக்கச்சு
  2. An elephant's neck-rope, யானைக்கழுத்திடுகயிறு
  3. A rope, a cord, கயிறு
  4. A coat of mail, கவசம்
  5. A scar, a cicatrice, any mark made by a blow or wound, தழும்பு
  6. [prov.] A whole piece of Indian cloth. முழுப்புடவை
  • கச்சைகட்டுதல் — Tucking up the cloth either loosely or closely. 2. Girding one's self. 3. Tucking up the fore-flap.
  • கச்சைக்கொடியோன் — The king Karnan. (p.)
  • கச்சைநெய்தல் — Weaving a girdle.
  • யானைக்கச்சை — An elephant's rope, the string round his neck, also his girth.

Fabricius (1972)

கச்சை — noun
  1. a belt, a girdle, அரைக்கச்சு
  2. a rope, card, கயிறு
  3. a piece of long cloth
  4. a scar, தழும்பு
  5. coat-of- mail
  • கச்சை கட்ட — to gird one's self for a fight; to tuck up the cloth.
  • கச்சைக் கொடியோன் — Karna, whose banner bore the device of an elephant's rope.
  • கச்சை நெய்ய — to weave a girdle or cloth.
  • கச்சைப் பட்டை–கச்சு — see under, .

Tamil Moli Akarathi (1928)

கச்சை (kaccai)
  1. கயிறு, கவசம், கௌபீனம் தழும்பு, முழுப்புடவை,யானைகட் டுங் கயிறு, வார்
கச்சை (kaccai)
  1. கயிறு, இரவிக்கை, கவசம், தழும்பு, யானைகட்டும் கயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கச்சை¹ (kaccai) — noun
  1. cf. kañcuka
  2. Coat of mail; கவசம். (பிங்.)
  3. cf. kacchu. Scar, cicatrice, mark made by a blow or wound; தழும்பு. (பிங்.)
கச்சை² (kaccai) — noun
  1. kaccha < kạkṣyā
  2. Rope; கயிறு. (பிங்.)
  3. Elephant's girth; யானைக்கீழ்வயிற்றிற்கட்டுங் கயிறு. கச்சையானை (சிலப். 5, 142)
  4. Broad tape; நாடா
  5. Canvas chair for hill travel; நாடாவற்கட்டப்பட்ட டோலி. Kodai
  6. Girdle, belt; அரைக்கச்சு. மாசுணக்கச் சைபாடி (திருவாச. 9, 19)
  7. cf. kaccha. See கச்சம்²
  8. Whole piece of new cloth; முழுப் புதுத் துணி
கச்சை¹ (kaccai) — noun
  1. A tinkling ornament; கிண்கிணி. கருடன் காலிற் கச்சை கட்டினதுபோல் (பெண்மதிமாலை, 115).

IndoWordNet

கச்சை — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
கச்சை — noun
  1. பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

கவசம் அரணம் கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் சாலிகை கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல் கயிறு இமிழ் இரச்சு கண்ணி தாம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கச்சை
  1. கயிறு
  2. கவசம்
  3. தழும்பு
  4. அரைக்கச்சு, அரைப்பட்டிகை
  5. யானைக் கழுத்திடு கயிறு