சிந்தனை

* தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன். : thinking : चिंतन

thinking

Tamil Wiktionary

சிந்தனை
  1. * தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.

[object Object], [object Object], [object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிந்தனை (cintaṉai) — noun
  1. < cintanā
  2. Thought, idea; எண்ணம். சிந்தனை யுரைசெய்வான் (கம்பரா. கங்கை. 53)
  3. Revision of lessons; படித்தபாடத்தை மீண்டும் நினைக்கை. படித்தவற்றைச் சிந்தனை செய்யவேணும்
  4. Meditation; தியானம். அதே சிந்தனையாயிருக்கிறான்
  5. Care, concern, grief; கவலை. சிந்தனை முகத்திற் றேக்கி (கம்பரா. குகப். 35)
  6. Attention, consideration; கவனம். (W.)
  7. Subject about which a person consults a soothsayer; குறிகேட்கும் விஷயம். நட்டமுட்டி சிந்தனை. (சூடா. உள்.)

Winslow (1862)

சிந்தனை (cintaṉai) — noun
  1. Thought, conception, recollection, imagination, reflection, consideration, நினைவு
  2. Heed, attention, கருத்து
  3. Care, concern, grief, regret, கவலை
  4. Deep thought, meditation, contemplation, தியானம்
  5. Supplication to or desires after the deity in the heart, தேவசிந்தனை
  6. Inquiry, investigation, search, ஆராய்வு
  7. Wish, desire, விருப்பம். (c.)
  8. The thing conceived in the mind, as one of the three things about which the astrologer is consulted. See நஷ்டம் and முஷ்டி. Compare சிந்தை. உனக்கொருசிந்தனையுமில்லை. You need have no concern
  9. (R.) There is nothing against you
  • சிந்தனைகெட்டுப்போக — To become bewildered, or deranged.
  • சிந்தனைப்பட — To be careful, anxious, concerned. 2. To be distracted, disturbed in thought.
  • சிந்தனைபண்ண — To remember, to think, to reflect, to meditate. 2. To make supplication in the heart. 3. To heed, attend to. 4. To inquire, examine. சிந்தனைபண்ணிப்பார். Ponder this well; think over and over.
  • சிந்தனையின்மை — Freedom from care or apprehension. 2. Inconsiderateness, heedlessness, carelessness.
  • சமுசாரசிந்தனை — Family or worldly cares.
  • தேவசிந்தனை — Divine meditation or contemplation; attention to divine things.

Fabricius (1972)

சிந்தனை — noun
  1. (சிந்தி) thought, reflection, meditation, நினைவு
  2. care, anxiety, concern, கவலை
  • உனக்கொரு சிந்தனையுமில்லை — you have no concern.
  • சிந்தனை பண்ணிப்பார் — ponder this well, think over and over.
  • சிந்தனையாயிருக்க–சிந்தனைப்பட — to be anxious, to be concerned.

Tamil Moli Akarathi (1928)

சிந்தனை (cintaṉai)
  1. ஆராய்வு, ஏண்ணம், தியானம் நினைவு விருப்பம்
சிந்தனை (cintaṉai)
  1. சிந்தை

IndoWordNet

சிந்தனை — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
சிந்தனை — noun
  1. மனத்தின் நினைப்பு.
சிந்தனை — noun
  1. சிந்தனை
சிந்தனை — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனத்தில் நிம்மதியின்மை, வருத்தம்

யோசனை எண்ணம் ஆலோசனை நினைப்பு உத்தேசம் சித்தம் உளப்பாடு மனக்கிடக்கை உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை பணி கவலை துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிந்தனை
  1. எண்ணம்
  2. மீண்டும்மீண்டும் நினைத் '