நினைவு

மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். - thought நினை - வு

memory; mind (as the seat of memory) thought, idea consciousness

Tamil Wiktionary

நினைவு — பெயர்ச்சொல் (Noun)
  1. மறவாமல் மனதில் தோன்றும்
  2. மனதின் எண்ணங்கள்.

[object Object]

நினை வு நினைவகம் நினைவுநாள் நினைவரங்கம் நினைவில்லம் நினைவாற்றல் நினைவுச்சின்னம் நினைவுபரிசு நினைவுகூர்தல் நினைவுபடுத்து நினைவூட்டு ஞாபகம் ஞாபகார்த்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நினைவு (niṉaivu) — noun
  1. Thought, idea; எண்ணம். நினைவுந் துணிபுமா கும் (தொல். சொல். 337)
  2. Reflection, consideration; ஆலோசனை. நினைவிலார் போல நெஞ்ச நெகிழ்த்தியோ (கம்பரா. நாகபா. 213)
  3. Recollection, remembrance; ஞாபகம்
  4. Imagination, fancy, supposition; conception, notion; பாவனை
  5. Object, design, purpose; நோக்கம்
  6. Care, attention, thoughtfulness; கவனம்
  7. Meditation, contemplation; தியானம். மனநிலை திரியாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே (தொல். பொ. 75, உரை)
  8. Anxiety, distress; வருத்தம். நெறிமையிற் கூற நினைவி னகன்றாள் (சீவக. 333)
  9. Order, command, as of a king; அரசர் கட் டளை. (Insc.)
  10. Memorandum; memento; ஞாபகக்குறிப்பு. (W.)

Tamil Moli Akarathi (1928)

நினைவு (niṉaivu)
  1. ஏண்ணம், கருத்து, நினைப்பு, னினைப்புக்குறிப்பு, நோக்கம்
நினைவு (niṉaivu)
  1. நினைத்தல்

IndoWordNet

நினைவு — noun
  1. மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.
நினைவு — noun
  1. மனத்தின் நினைப்பு.
நினைவு — noun
  1. ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.
நினைவு — noun
  1. நினைவு, செய்தி
நினைவு — noun
  1. நினைவு

ஞாபகம் நனவு நினைப்பு ஓர்மை பிரஞ்ஞை அறிவு ஞானம் புத்தி மதி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம் எண்ணம் கருத்து சிந்தனை நெனவு நெனப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் அர்த்தம் பொருள் சாரம் கரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நினைவு
  1. எண்ணம்
  2. ஆலோசனை
  3. ஞாபகம்
  4. பாவனை
  5. நோக்கம்
  6. கவனம்
  7. தியானம்
  8. வருத்தம்
  9. ஞாபகக் குறிப்பு
  10. அரசர் கட்டளை