சிந்தூரம்

சிவப்பு நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி வெட்சி எனும் பூச்செடி

Sindoor

Tamil Wiktionary

சிந்தூரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சிவப்பு
  2. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
  3. வெட்சி எனும் பூச்செடி
  4. செங்குடை
  5. செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
  6. யானைப் புகர்முகம்
  7. சேங்கொட்டை
  8. செவ்வியம்

Winslow (1862)

சிந்தூரம் (cintūram) — infinitive
  1. (Sa. Sindurah.) Red, சிவப்பு
  2. Vermilion, red-paint, or powders for the head; also a red spot on the forehead, chiefly of women as an ornament, செந்திலகம்
  3. (com. செந்தூரம்.) Any red, chemical, or metallic compound used medicinally, red metallic oxide, precipitate or mercury, ஓர்மருந்து
  4. A red umbrella, செங்குடை
  5. The tamarind tree, புளியமரம்
  6. A flower shrub, வெட்சி, Ixora coccinea, L
  7. A marking nut, சேங்கோட்டை. (M. Dic.)
  8. [a change of சிந்துரம்.] An elephant, யானை
  • சிந்தூரந்தீட்ட — To mark the forehead with a vermilion spot.
  • சிந்தூரப்புடம் — Calcination of metals to make red powders.
  • சிந்தூரப்பொட்டு — Vermilion spot on the forehead, as சிந்தூரம், 2.
  • சிந்தூரவகை — Different kinds of சிந்தூரம் compounds.
  • சிந்தூரவைப்பு — Preparation of சிந்தூரம் powders.
  • தங்கசிந்தூரம் — Powders chemically prepared from gold.

Tamil Moli Akarathi (1928)

சிந்தூரம் (cintūram)
  1. சிவப்பு, செங்குடை, செந்தி லகம், செங்கோட்டை திலகம், புட மிட்ட பஸ்மம், புளியமரம், யானை, வெட்சி
சிந்தூரம் (cintūram)
  1. சேலேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிந்தூரம்¹ (cintūram) — noun
  1. < sindūra
  2. Redness; சிவப்பு. (பிங்.)
  3. Red umbrella; செங் குடை. (பிங்.)
  4. Vermilion, red paint, red powder for tilka; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி. (பிங்.) மதகரியைச் சிந்தூரமப்பியபோல் (கம்பரா. மிதலைக். 151)
  5. Red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally; செந்நிறமுள்ள பஸ்ம வகை. சிந்தூரத்தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67)
  6. Elephant's face, as spotted red; யானைப் புகர்முகம். (பிங்.)
  7. Scarlet ixora. See வெட்சி. (திவா.)
  8. Marking-nut tree. See சேங்கொட்டை. (மலை.)
சிந்தூரம்² (cintūram) — noun
  1. See சிந்துரம்². (பிங்.)
சிந்தூரம்³ (cintūram) — noun
  1. See சிந்துரம்³. (பிங்.)

IndoWordNet

சிந்தூரம் — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

யானை ஆனை உரலடி கசம் களபம் கஜம் குஞ்சரம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி கரி கறையறி புகர்முகம் புழைக்கை மதகயம் மதாவளம் மந்தமா மருண்மா வாரணம் வேழம் சதுரங்ககாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிந்தூரம்
  1. சிவப்பு
  2. செங்குடை
  3. நெற்றியில் அணியும் ஒருவகைச் சிவப்புப்பொடி
  4. செஞ் சுண்ணம்
  5. யானைப் புகர்முகம்
  6. வெட்டிச் செடி
  7. யானை
  8. புளியமரம்
  9. சேங்கொட்டை