குறிக்கோள்

இலக்கு நோக்கம் செயல்நோக்கம்

objective, goal, ideal aim, target

Tamil Wiktionary

குறிக்கோள்
  1. இலக்கு
  2. குறி
  3. நோக்கம்
  4. செயல்நோக்கம்
  5. உள்ளெண்ணம்
  6. உட்கோள்
  7. அடையும் எல்லை
  8. பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லைம் தொகுப்பாகவோ இருக்கும்.

Tamil Moli Akarathi (1928)

குறிக்கோள் (kuṟikkōḷ)
  1. 8- இன்பம் தெளிவு, நிறை, ஒளி வன்சொல், இறுதி, மந்தம், உச்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குறிக்கோள் (kuṟi-k-kōḷ) — noun
  1. +
  2. Single-minded devotion, concentration; மன வொருமை. (திவா.)
  3. Cherishing in memory, remembering; ஞாபகத்தில் வைக்கை. (திவா.) குறிக் கோட் டகையது கொள்கெனத் தந்தேன் (சிலப். 30, 63)
  4. Comprehension or power of understanding; அறியுந்திறம். என்றுணரும் குறிக்கோ ளில்லா (கம்பரா. சூர்ப். 140)
  5. Ideal; உயர்ந்த இலட்சியம். குறிக் கோளிலாது கெட்டேன் (தேவா. 632, 9)
  6. Wisdom, good sense, sagacity; நல்லுணர்வு. கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால் (திவ். பெரியதி. 1, 9, 3)
  7. Acts needed to play upon a violin properly, numbering 8, viz., பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினையிற் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல்முதலிய தொழில்கள். (சிலப். 3, 16, உரை.)
  8. The state of being distinguished or illustrious; மேன்மைப்பாடு. (W.)

IndoWordNet

குறிக்கோள் — noun
  1. வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
குறிக்கோள் — noun
  1. அடைய நினைக்கும் இலட்சியம்.
குறிக்கோள் — noun
  1. செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
குறிக்கோள் — noun
  1. மனிதன் எப்பொழுதும் தன்னுடைய நல்ல நல்ல விசயங்களை தன்முன்னே வைத்து அதன் பயனை மனதில் வைத்து அனைத்து காரியங்களையும் செய்யவேண்டும் என்பது இதன் தத்துவம்
குறிக்கோள் — noun
  1. குறிக்கோள், இலக்கு

இலட்சியம் இலக்கு லட்சியம் நோக்கம் எண்ணம் கருத்து சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு சுயநலம் பொருள் ஞானம் அறிவு அடையாளம் பார்வை கவனம் கொள்கை கோட்பாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குறிக்கோள்
  1. மனஒருமை
  2. நினைவில் வைத்தல்
  3. அறியுந்திறம்
  4. உயர்ந்த நோக்கம்
  5. நல் லுணர்வு
  6. யாழ் மீட்டுகையில் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல் முதலிய தொழில்கள்