மழை

மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி - rain மழைநீர், மழைத்துளி, மழைக்காலம்

rain abundance, plenty

Tamil Wiktionary

மழை — பெயர்ச்சொல் (Noun)
  1. மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி

[object Object]

மழைநீர் மழைத்துளி மழைக்காலம் அடைமழை கனமழை விடாமழை பெருமழை பூமழை பருவமழை அந்திமழை மாமழை கார்மழை புயல் இடி மின்னல்

Winslow (1862)

மழை (maḻai) — noun
  1. Rain. See மாரி
  2. Cloud, மேகம்
  3. Water, நீர்
  4. Coolness, குளிர்ச்சி
  5. [fig.] Abundance, plenty, மிகுதி. அந்திமழைஅழுதாலும்விடாது. An evening rain will not cease, though you shed tears. மழைமாரிஉண்டா. Has there been any rain? மழைபிடிக்கும். There will be much rain. மழைவரும்–மழைவந்துவிடும். It will rain. மழைஅடிக்கிறது. It rains very violently. மழையடைத்துக்கொண்டது. It rains incessantly. மழை வெளிவாங்கிப்போயிற்று–மழைவாங்கிப்பொயிற்று. The sky is cleared. மழைசாடையாய்ப்போய்விட்டது. It proved a slight rain. மழைவிட்டோய்ந்தது. It ceased raining; also-spoken of the cessation of disputes. மழைக்கண்மங்கையர். Cool, refreshing-eyed females. (p.)
  • மழைக்கண்ணி — A kind of bird, ஓர்பறவை.
  • மழைகாலம் — [also மாரிகாலம்.] The rainy season, monsoon.
  • மழைக்கால் — A water-spout.
  • மழைக்காலிருட்டு — Darkness of a rainy night.
  • மழைக்கிளி — A kind of grasshopper, ஓர்விட்டில்.
  • மழைக்குணம்–மழைக்கோலம்–மழைச் சாடை–மழைத்தோற்றம் — A rainy aspect.

Fabricius (1972)

மழை — noun
  1. rain, மாரி
  2. cloud, மேகம்
  3. water, நீர்
  4. coolness, குளிர்ச்சி
  5. abundance, மிகுதி
  • மழைபிடிக்கும்–பெய்யும்–வரும் — we shall have rain.
  • மழைமாரி உண்டா — has there been any rain?
  • மழைவிட்டிருக்கிறது–நின்றிருக்கிறது — it has ceased to rain.
  • மழை அடிக்க — to rain vehemently.
  • மழைகாலம்–மாரிகாலம் — the rainy season, monsoon.
  • மழைக்கால் — a water-spout.

Tamil Moli Akarathi (1928)

மழை (maḻai)
  1. குளிர்ச்சி, நீர், மாரி, மிகுதி, மேகம்
மழை (maḻai)
  1. ஆர்கலி, ஆலம், ஆலி, ஊதகம், உறை, சீகரம், சொரி, தாரை, திவ லை, துளி, தூவல், தூறல், மாரி, வரு டம், வானம், வான், அன்றியும்பெரு மழையின்பெயர்
  2. ஆசாரம், விடாம ழையின்பெயர், சோனை, அடைமழை யின்பெயர்-பனித்தல், மழை விடுதலி ன்பெயர், தலையல்
மழை (maḻai)
  1. குளிர்ச்சி, நீர், மேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மழை¹ (maḻai) — noun
  1. Rain; மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55)
  2. Cloud; நீருண்ட மேகம். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி, 361)
  3. See மழைக்கால். மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363)
  4. Water; நீர். (பிங்.)
  5. Blackness, darkness; கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46)
  6. Coolness; குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239). (பிங்.)
  7. Abundance, plenty; மிகுதி. (W.)

IndoWordNet

மழை — noun
  1. மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர்.

இயற்கை முறை இயற்கைச் செயல் மழைத்தூறல் சீந்தல் சிறுமழை சின்னமழை சாரல் முதல்மழை உளவியல் மனோத்தத்துவம் மனோவிஞ்ஞானம் தூறல் சோதகம் துமி தூவானம் புன்றுமி ஆலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மழை
  1. மேகத்தினின்று பொழியும் நீர்
  2. நீருண்ட மேகம்
  3. காண்க: மழைக்கால்
  4. நீர்
  5. கருமை
  6. குளிர்ச்சி
  7. மிகுதி