புரவி

பிகில் குதிரை அசுவதி () --அசுவனி என்னும் இந்தியப் பஞ்சாங்கத்தில் முதல் நட்சத்திரம்

horse the first nakshatra

Winslow (1862)

புரவி (puravi) — noun
  1. A horse, குதிரை. (c.)
  2. The first lunar asterism, அசுபதி. See புருவம். இதுசீனத்துப்புரவியோ. Is this a China horse? also applied to a person in derision. கெட்டிக்காரப்புரவி. A clever and capable man. (Jaff.)
  • புரவிவட்டம் — A race-course, riding ground, வையாளிவீதி.

Fabricius (1972)

புரவி — noun
  1. a horse, குதிரை
  2. the first lunar asterism, அசுபதி நாள்

Tamil Moli Akarathi (1928)

புரவி (puravi)
  1. அசுபதி, குதிரை, வேகி
புரவி (puravi)
  1. அச்சுவினிநாள், குதிரை

IndoWordNet

புரவி — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
புரவி — noun
  1. வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

குதிரை அசுவம் அயம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புருகம் மராலம் மறி வயமா கலிங்கம் கந்துவம். சவாரிவிலங்கு மட்டக்குதிரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புரவி
  1. குதிரை
  2. குதிரை, யானை இவற்றைக் கட்டுமிடம்
  3. அசுவினிநாள்
  4. சாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புரவி¹ (puravi) — noun
  1. < புர-
  2. Horse; குதிரை. கதழ்பரிப் புரவி (பதிற்றுப். 80, 13)
  3. The first nakṣatra. See அசுவதி. (பிங்.)
  4. Stable for horses or elephants; குதிரை அல்லது யானைகட்டு மிடம். பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17)
புரவி² (puravi) — noun
  1. Corr. of பிறவி. Class, order. See பிறப்பு
  2. கெட்டிக்காரப்புரவி. (J.)