அரசு

Tamil Wiktionary

அரசு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு.
  2. ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டக் குழு.
  3. நாட்டுத்தலைவரின் ஆட்சிக் காலம்.
  4. நாட்டின் ஆட்சி முறைமை
  5. ஒரு வகை மரயினம் (Ficus religiosa)

[object Object], [object Object]

அரசர் அரசன் அரசி இளவரசன் இளவரசி அரசாட்சி அரசவை அரசுப்பணி அரசாங்கம் அரசாணை அரசிதழ் அரசியல் குடியரசு பேரரசு முடியரசு நடுவண் அரசு ஈரரசு இளவரசு தமிழரசு பூவரசு நல்லரசு வல்லரசு

Winslow (1862)

அரசு (aracu) — noun
  1. Royalty, government, இராசாங்கம்
  2. A king, இராசா
  3. A kingdom, the territory of a sovereign, இராச்சியம்
  4. The planet Jupiter, வியாழம். (p.) அரசடைந்தான். He is come to the throne, he has obtained the kingdom
  • அரசங்கம் — The six safe-guards of royalty; viz.: படை, குடி, கூழ், அமச்சு, நட்பு, அரண்.
  • அரசளிக்க — To govern.
  • அரசாள — To reign, govern.
  • அரசாட்சி — Reign, government, the exercise of government, the right of possession to the throne, இராசரிகம்.
  • அரசியல் — Royalty, இராசாங்கம். 2. The duties or functions of a king, இராசரிகமுறைமை. They are six; viz.: அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்.
  • அரசிருக்கை — The place of a king, or throne.

Fabricius (1972)

அரசு — noun
  1. royaly, இராசாங்கம்
  2. a king, இராசன்
  3. kingdom, இராச்சியம்
  • அரச தம்பதிகள் — their majesties.
  • வல்லரசுகள்–பேரரசுகள் — the Great Powers.
  • அரசியல் அமைப்பு — constitution of a kingdom.
  • அரசாங்கம்–அரச–அங்கம் — (+), government.
  • அரசாட்சி–இராசரிகம் — reign, government, heredi- tary succession to the throne, .
  • அரசாள–அரசு செய்ய — to reign,
அரசு — noun
  1. , அரசமரம், s. a tree, Ficus religiosa. கொடியரசு, ஆற்றரசு, diffe- rent species of the same kind.
  • பூவரசு — Portia tree.

Tamil Moli Akarathi (1928)

அரசு (aracu)
  1. இராசா இராசாத்சியபாரம் ஒருமரம் துவர்பத்தினொன்று நாடு, வியாழன்
அரசு (aracu)
  1. அரசன், இராசாங்கம், ஓர்மரம், நாடு, வியாழம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரசு¹ (aracu) — noun
  1. Pipal
  2. tr., Ficus religiosa; அரசமரம்
அரசு² (aracu)
  1. n
  2. Kingliness; அரசனது தன்மை. (குறள், 384, உரை.)
  3. King; அரசன். (மதுரைக். 128.)
  4. Kingdom, territory of a ruler; இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45)
  5. Government; அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7)
  6. That which is pre-eminent; தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143)
  7. An ancient title of Vēḷāḷa chieftains; பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெ னவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை)
  8. Tiru-nāvukkaracu Nayaṉār, the author of a part of the Tēvāram; அப்பர். (பெரியபு. திருஞான. 494.) — int. An exclamation equivalent to 'check', used in chess; சதுரங்கத்தில் அர சன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்
அரசு (aracu) — noun
  1. < rāja
  2. Privileges allowed to watchmen; காவற்சுதந்தரம். (P. T. L.)
  3. Domain, land; பூமி. (பொதி. நி.)

IndoWordNet

அரசு — noun
  1. அரசன் போன்றோரின் ஆளுகை
அரசு — noun
  1. ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.

ஆட்சி சமஸ்தானம் பிரபுத்துவம் பிரதேசம் பிரதேஷம் தேசம் தேஷம் நாடு சாம்ராஜியம் அரசாங்கம் இஸ்ரேல் சங்கம் மத்திய அரசாங்கம் கேப்பிடல் வாஷிங்டன் நாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரசு
  1. அரசன்
  2. இராச்சியம்
  3. அரசியல், கொற்றான்
  4. குறிஞ்சியாழிசை. அரசாட்சி
  5. அரசமரம்
  6. திருநாவுக்கரச நாய அரத்தோற்பலம்- செங்குவளைக் கொடி
  7. னார். காண்ச: செவ்வாம்பல். அரசுகட்டில் - அரியணை. அரதனம் - இரத்தினம்
  8. மிருதபாடாணம். அரசுவா - பட்டத்து யானை. அரதனாகரம் - கடல்
  9. தனுக்கோடிக்குக் கிழக்கே அரசோனம் - காண்க: வெள்ளைப்பூண்டு. யுள்ள கடல். அட்சி - மனக்குழப்பம். அரதி - வேண்டாமை
  10. துன்பம். அரட்டடக்கி - செருக்குள்ளவர்களை அடக்கு அரதேசி - உள்நாட்டுப் பிச்சைக்காரன்