எடை

weight (of a person of thing) standard weight lengthening, increasing

Tamil Wiktionary

எடை — பெயர்ச்சொல் (Noun)
  1. நிறை
  2. பழந்தமிழர் திடப்பொருளை எடையிட கழஞ்சு என்ற அலகினை
  3. அளவையாகப் பயன் படுத்தினர்.
  4. கனம்
  5. பாரம் - கனமாக இருப்பதால் தூக்க முடியவில்லை
  6. தரம்
  7. குணம் - என்னை எடைப் போடாதே? உன் வேலையைப் பார்.

[object Object], [object Object]

Fabricius (1972)

எடை — noun
  1. (எடு) taking up, தூக்குகை
  2. weighing weight, நிறை
  3. a weight of 6¼ seers or 50 palams
  4. lengthening, increasing, மிகுதல், அளபெடை
  • எடைக்கெடை — like weight, even weight.
  • எடைக்கட்டு — allowance made for the weight of a receptacle before weighing its contents.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எடை (eṭai) — noun
  1. Weighing; நிறுக்கை. (W.)
  2. Standard weight; நிறையளவு
  3. A measure of weight 25 palams; 25 பலங்கொண்டது. (G. Tn. D. i, 237.)
  4. A weight for weighing firewood 54 lbs.; விறகின் நிறையளவு. (C. G.)
  5. Rousing from sleep; துயிலெழுப்புகை. துயிலெடைநிலை (தொல். பொ. 91)
  6. Lengthening, increasing; மிகுதல். அளபெடை

IndoWordNet

எடை — noun
  1. பாரமாக இருக்கின்ற நிலை
எடை — noun
  1. ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.
எடை — noun
  1. எடை போடும் காரியம்
எடை — noun
  1. ஏதோ ஒரு பொருளின் எடை

கனம் பாரம் நிறை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை அரிசி டிராம் சுத்தமான எடை சரியான எடை நேர்த்தியான நிறை குண்டுமணி செயல் ஜௌ ஞானம் அறிவு பாதி அரை அரை பாட்டில் அக்சௌஹினி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எடை
  1. எடுத்தல், தூக்குதல்
  2. நிறை
  3. நிறுக்கை, நிறையிடல்
  4. எழுப்புகை
  5. மிகுதல்