கடை

முடிவு. () இடம். () அங்காடி. ()

shop, store, stall, bazaar, market to churn (with a churner) to drill

Tamil Wiktionary

கடை — பெயர்ச்சொல் (Noun)
  1. முடிவு. ()
  2. இடம். ()
  3. எல்லை
  4. அங்காடி. ()
  5. கீழ்மை
  6. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்
  7. வாயில்
  8. பூண்கடைப் புணர்வு. ()
  9. காம்பு
  10. சோர்வு. ()
  11. வழி. ()
  12. பெண்குறி. ()
  13. ஏழனுருபு. ( 302.)
  14. ஓர் உபசருக்கம்
  15. ஒரு வினையெச்ச விகுதி
  16. பின்
  17. மத்தால் கடைதல்
  18. மரம் முதலியனவற்றை இழைத்தல்
  19. மசித்தல்
  20. மிகப்பண்ணுதல்
  21. அரித்தல்
  22. கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.

கடைதல் கடைசல் கடைசி கடைக்கண் கடைவீதி கடைத்தெரு கடைக்கோடி அந்திக்கடை அலங்கடை அறங்கடை எதிர்க்கடை கள்ளக்கடை காசுக்கடை குஜிலிக் கடை சாப்பாட்டுக்கடை சில்லறைக்கடை தயிர்கடை தவணைக்கடை பிறங்கடை புழைக்கடை புறங்கடை மலர்க்கடை வயற்கடைதூரம்

Winslow (1862)

கடை (kaṭai) — noun
  1. End, extremity, termination, conclusion, முடிவு
  2. A shop, bazaar, market, அங்காடி
  3. (p.) Inferiority, baseness, meanness, lowness, the least, lowest, or worst kind, &c., கீழ்மை
  4. Way, வழி
  5. Termination of a particle, வினையெச்சவிகுதி
  6. Place, room, இடம்
  7. A form of the seventh case used also with verbs, to express if, when, after, &c., ஏழனுருபு
  8. A door, a gate-way, வாயில்
  9. The outer gate, புறவாயில்
  10. The clasp or other fastening of a neck-ornament, பணிப்பூட்டு
  11. Side, பக்கம். நீத்தக்கடை. If he leave– (குறள்.) ஈதலியையாக்கடை. If it be not possible to bestow–நள்ளிமுதற்கிள்ளிகடையாக. From Nalli to Killi (reigned sixty-four kings called சோழர்). நாயிற்கடையாநாயேனை. Me who am the most degraded of dogs–அவன்கடைச்சென்றான். He approached him
  • கடைகட்ட — To close a shop, கடைசாத்த. 2. To suspend a work, to discontinue, to make an end of–spoken diminutively.
  • கடைகாப்பாளர்–கடைகாவலர் — Door-keepers, porters, வாயில்காப்போர்.
  • கடைகெட்டவன் — An abandoned person, a wretch, முழுதுங்கெட்டவன்.
  • கடைக்கண் — The outside corner of the eye, கட்கடை. 2. A benign look, கடாட்சம். கடைக்கண்கிடைக்கவேண்டும். I am anxious to get a propitious look, glance of your eye.
  • கடைக்கண்ணாற்பார்க்க — To glance, look sidewise. 2. To cast a propitious or benignant look.
  • கடைக்கண்பார்வை — A side look, a glance. 2. A propitious or benignant look, approbation, a token of favor.
கடை (kaṭai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To churn, தயிர்கடைய
  2. To turn in a lathe, மரமுதலியனகடைய
  3. To form moulds on a wheel–as a brazier, தரா, செம்புமுதலியனகடைய
  4. To rub two sticks together till they ignite, தீக்கடைய
  5. To mash yams or other vegetable, &c., to a pulp with the bowl of a ladle, பருப்புமுதலியனகடைய. கடைந்தமோரிலேவெண்ணெயெடுக்கப்பார்க்கிறான். He is trying to get butter from whey; i. e. he is too exacting, rigorous. கடைந்தவெண்ணெய்மோர்புகா. Butter produced by churning will not again be diffused through the milk
  • கடைகோல் — Two sticks for kindling fire by attrition–commonly தீக்கடைகோல்.
  • கடைந்தகுமிழ் — A turned knob.
  • கடைந்தெடுத்தநெருப்பு — Fire produced by attrition.
  • கடைமரம் — A lathe, கடைகின்றமரம்.
  • கீரைகடைய — To mash pot- herbs into a pulp.
  • தயிர்கடைய — To churn curds to produce butter.

Fabricius (1972)

கடை — noun
  1. a shop, market bazaar, அங் காடி
  2. place, இடம்
  3. way, வழி
  4. gate, வாயில்
  5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்)
  6. a verbal prefix as in கடை கெட்ட
  7. a sign of the 7th case, ஏழனுருபு
  • கடை கட்ட — to close a shop; 2. to suspend a work.
  • கடை கண்ணி — of கடை, bazaar, shop, market.
  • கடைகாவலன்–காப்பாளன் — a door keeper.
  • கடை கெட்டவன் — a wretch (6).
  • கடைக்காரன் — a shop-keeper.
  • கடைத்தெரு — a market street.
கடை — noun
  1. , கடைசி, s. end, termination, முடிவு
  2. inferiority, meanness கீழ்மை
  • தலை இடைகடை — the beginning, middle and end.
  • கடைக்கண் — the corner of the eye; 2. a benign look.
  • கடைக்கண்ணாலே பார்க்க — to look side- ways, to look friendly upon, to favour.
  • கடைக்குட்டி–கடைச்சன்–தலைச்சன் — ( x ) the last born, the youngest child.
  • கடைக்குறை — apocope.
  • கடைக்கோடி — the very extremity.
கடை — v. t.
  1. v. t. churn, மத்தாற் கடை
  2. turn, work with the wheel or lathe, குடை
  3. mash vegetables with a ladle, குழை
  4. increase, as the passion of love, மிகப்பண்ணு. v. i. drip as honey, சொட்டு
  5. rattle as the throat from phlegm accumulation
  • கடைகோல்–தீக்கடைகோல் — two sticks for kindling fire by rubbing.
  • கடைச்சல்–கடைசல்–கடைதல்–கடைவு — churning curds; 2. turning on the lathe.
  • இதைக் கடைச்சல் பிடி — turn this in a lathe.
  • கடைச்சல் உளி — a turner's chisel.
  • கடைச்சல்காரன் — a turner.
  • கடைச்சல்–கடை–மரம் — a turner's lathe.

Tamil Moli Akarathi (1928)

கடை (kaṭai)
  1. அங்காடி, குடம், ஏழனுருபு [உ-ம்] அவன்கடைக்குச் சென்றான், க டையென்னேவல்,கதவு,கீழ்,பக்கம் புறவாயில், பூணின் கடைப்புணர்வு, பெண்குறி, முடிவு, வழி, வாயில், வினையெச்சவிகுதி
கடை (kaṭai)
  1. அந்தம், இறுதி, ஈறு, ஏல்லை, முடிதல், முடிவு, முற்றும், வாயில்
கடை (kaṭai)
  1. ஆவணம், ஏழனுருபு, (உ-ம்
  2. அவ ன்கடைச் சென்றான்) கடையென் னேவல், கீழ், புறவாயில், பூணின் கடைப்புணர்வு, முடிவு, வழி, வாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடை¹ (kaṭai) — noun
  1. [T. M. kaḍa, K. Tu. kaḍe.] End, termination, conclusion; முடிவு. (பிங்.)
  2. Place; இடம். (திவா.)
  3. Limit, boundary; எல்லை. கடையழிய நீண்டகன்ற கண் ணாளை (பரிபா. 11, 46)
  4. Shop, bazaar, market; அங்காடி. (பிங்.)
  5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை. நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60)
  6. Degraded person, man of low caste; தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி, 255)
  7. Entrance, gate, outer gateway; வாயில். கடைகழிந்து (அகநா. 66)
  8. Clasp, fastening of a neck ornament; பூண்கடைப் புணர்வு. (திவா.)
  9. Handle, hilt; காம்பு. கடை குடை யெஃகும் (மலைபடு. 490). — adj. Succeeding, following; பின். கடைக்கால் (பழ. 239). — part
  10. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன். 302.)
  11. Verbal prefix; ஓர் உபசருக்கம். கடைகெட்ட (திருப்பு. 831)
  12. Termination of a verbal participle; ஒரு வினையெச்ச விகுதி. ஈத லியையாக் கடை (குறள், 230)
கடை (kaṭai) — noun
  1. Fatigue; சோர்வு. (அக. நி.)
  2. Way; வழி. (யாழ். அக.)
  3. Pudendum muliebre; பெண்குறி. (யாழ். அக.)

IndoWordNet

கடை — noun
  1. அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.
கடை — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
கடை — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
கடை — adjective
  1. நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

எல்லை முடிவு முடிபு இறுதி கடைசி அந்தம் நுனி முனை தீர்வு நிகழ்ச்சி சம்பவம் காட்சிமுடிவு காட்சிமுடிபு காட்சிஇறுதி காரியமுடிவு செயல்முடிவு வேலைமுடிவு. யுகமுடிவு உலகமுடிவு யுகமுடிபு உலகமுடிபு லோகமுடிவு லோகமுடிபு வேலைமுடிவு பணிமுடிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடை
  1. முடிவு
  2. இடம்
  3. எல்லை
  4. அங்காடி
  5. கீழ்மை
  6. தாழ்ந்தோன்
  7. வாயில்
  8. புறவாயில்
  9. பக்கம்
  10. பணிப்பூட்டு
  11. காம்பு
  12. ஒரு வினையெச்ச விகுதி
  13. ஏழனுருபு
  14. பின்
  15. கழ்
  16. சோர்வு
  17. வழி
  18. பெண்குறி