களிப்பு
fun
Tamil Wiktionary
களிப்பு
- மகிழ்ச்சி
- சந்தோஷம்
- உல்லாசம்
- குசால்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
களிப்பு (kaḷippu) — noun
- Joy, exultation, delight, hilarity; மன மகிழ்ச்சி. களிப்புமாண் . . . பேரூர் (மணி. 7, 26)
- Vanity, conceit, pride; செருக்கு. (பிங்.)
- Mental delusion; aberration of mind; மயக்கம். காமமும் வெகுளியுங் களிப்புங் கைத்து (கம்பரா. திருவவ. 48)
- Intoxication, inebriation; மதுவெறி. களிப்பாலே வறிதிடத்திலும் மாலைகொண்டோச்சி (சிலப். 14, 135, அரும்.)
- Sexual pleasure; சிற்றின்பம். (W.)
- Adhesive power, as in clay; மண்ணின் பசை. மண் களிப்பாயிருக்கிறது
Winslow (1862)
களிப்பு (kaḷippu) — noun
- Joy, exultation, delight, அதிகசந்தோஷம்
- Mirth, joviality glee, hilarity, மகிழ்ச்சி
- (p.) Vanity, conceit, elation, செருக்கு
- Wantonness, wilfulness, licentiousness, சிற்றின்பம்
- Intoxication, inebriation, வெறிகொள்ளுகை
- (p.) Intention, உள்ளக்குறிப்பு
- செல்வக்களிப்பு — Joy or high satisfaction from prosperity. 2. Elation from prosperity.
- மனக்களிப்பு — Joy, delight, great satisfaction.
Tamil Moli Akarathi (1928)
களிப்பு (kaḷippu)
- இன்பம், உள்ளக்களிப்பு, செ ருக்கு, மகிழ்ச்சி, மதர்ப்பு, மயக்கம்
களிப்பு (kaḷippu)
- அபிமானம், ஆமோதம், உவ கை, உவப்பு, ஏமம், கடி, களி, செ ருக்கு, தருக்கு, நகை, நயன், பாடவ ம், பெருமிதம், மகிழ்ச்சி, மதம், மதர், மதர்ப்பு, மதர்வு, மத்தம், மலர்ச்சி, யௌவனம், அன்றியுமிகு களிப்பின் பெயர் இறுமாப்பு,ஏக்களிப்பு,ஏக்கழு த்தம், ஏமாப்பு, செம்மாப்பு, பூரிப்பு
களிப்பு (kaḷippu)
- இன்பம், உள்ளக்குறிப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
களிப்பு
- மகிழ்ச்சி
- செருக்கு
- மயக்கம்
- வெறி
- மண்ணின் பசை
- சிற்றின்பம்,