நீர்

தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும். மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.நீரில் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் 2:1 என்ற கன அளவு சதவீதத்தில் உள்ளது.நீர் ஓர் சர்வ கரைப்பான் முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்

water fluid, liquid, juice, succulence hydro-

Tamil Wiktionary

நீர் — பெயர்ச்சொல் (Noun)
  1. தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
  2. மழையாகப் பெய்வதும்
  3. ஆற்றில் ஓடுவதும்
  4. குளத்தில் இருப்பதும்
  5. கடலாக இருப்பதும்
  6. ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.நீரில் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் 2:1 என்ற கன அளவு சதவீதத்தில் உள்ளது.நீர் ஓர் சர்வ கரைப்பான்
  7. முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
  8. குணம்
  9. நிலை
  10. புனல்

[object Object], [object Object]

நீர்மம் நீர்மை நீர்நிலை நீர்வளம் நீர்மட்டம் நீர்யானை நீர்வாழை குடிநீர் தண்ணீர் கண்ணீர் வெந்நீர் இளநீர் பதநீர் தேநீர் பன்னீர் சிறுநீர் பித்தநீர் உமிழ்நீர்

Winslow (1862)

நீர் (nīr) — noun
  1. Water, சலம்
  2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம்
  3. Wateriness, moisture, wetness, humidity, ஈரம்
  4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர்
  5. Urine, மூத்திரம்; modeste
  6. (p.) The twentieth lunar asterism, பூராடம்
  7. Nature, property, disposition, குணம்
  8. State, condition, நிலை.–Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளிநீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண்ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; i. e. relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity
  • நீரடிமுத்து–நீரெட்டிமுத்து — A medicinal nut, Jatropha Montana. (Willd.)
  • நீரடைப்பு — Stoppage, or suppression of urine, strangury.
  • நீரத்தி — A kind of fig-tree. See கொடியத்தி.
  • நீரரண் — Security of a fortification surrounded by water. See அரண்.
  • நீர்மகளிர் — Nymphs of the waters, நீரில்வாழுந்தெய்வப்பெண்கள்.
  • நீரருகல் — Passing urine with interruptions, and strangury, சிறுநீரருகியியிறங்கல்.
நீர் (nīr) — infinitive
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. to become too thin, as liquid fool in cooking, or boiled rice; to be thin, as some semen, நீராக. (c.)
  • நீர்த்துப்போக — As நீர்விட்டுப்போக.

Fabricius (1972)

நீர் — noun
  1. water, சலம்
  2. fluid, liquid, juice, இரசம்
  3. urine, மூத்திரம்
  4. nature, quality, குணம்
  5. state, condition, நிலை
  6. humours of the body, serum, lymph, புண்பொழி நீர்
  • நீரடிமுத்து–நீரெட்டிமுத்து — a medicinal nut,
  • நீரசம் — the lotus; the pomegranate.
  • நீரடைப்பு–நீர்க்கட்டு–நீர்ச் சிக்கு — stoppage or suppression of urine, strangury, .
  • நீரதம்–மேகம் — cloud, .
  • நீரரண் — security of a fortification surrounded by water.
  • நீரரமகளிர் — nymphs of the water.
நீர் — v. i.
  1. v. i. become watery, thin; be thin as water நீராகு.
  • நீர்த்துப்போக–நீர்விட்டுப்போக — to become watery & thin by keeping too long.

Tamil Moli Akarathi (1928)

நீர் (nīr)
  1. கடல், குணம், சாறு, தன்மை, நீ ரென்னேவல், நீவிர், புனல், இது அட்டமூரத்தத்தொன்று, பஞ்சபூதத் து மொன்று, பூராடநாள்
நீர் (nīr)
  1. அப்பு, அமுதம், அம், அம்பணம், அம்பு, அம்புதம், அயம், அலர், அள கம், அரல், ஆருவம், ஆலம், உதகம், கஞ்சம், கமலம், கம், கயம், கவந்த ம், கனரசம், கனவிரதம், காண்டம், கார், கீலாலம், குசம், கோ, சம்பரம் சலம், சவிலம், சிந்து, சீலம், சீவன ம், சீவனீயம், தீர்த்தம், தோணி, தோயம், நாரம், நீரம், பயசு, பயம், பாணி, பானீயம், பிசிதம், புட்கரம், புவனம், புனல், மறை, மாரி, மை வயம், வருணம், வனம், வாயம் வாரி, வார், அன்றியுந் தெளிந்தநீர் சற்சலம், தெண்ணீர் கலங்கனீரின் பெயர்-ஆவிலம், கலுடம், கலுழி, விலங்கல்
நீர் (nīr)
  1. குணம், நீர், முந்நிலைப்பெயர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீர்¹ (nīr) — noun
  1. cf. nīra
  2. [K. nīr.] Water, one of the five elements; ஜலம். தீமுரணிய நீரும் (புறநா. 2)
  3. Sea, ocean; கடல். நீரொலித்தன்ன (மதுரைக். 369)
  4. Juice, liquor; இரசம். கரும் பினை . . . யிடித்துநீர் கொள்ளினும் (நாலடி, 156)
  5. Rosewater; பனிநீர். நீரால் வெண்ணிறப்பொடியை மாற்றி (சீவக. 117)
  6. Humours of the body, as serum, lymph; உடலில் உள்ள இரத்தம் பித்தநீர் முதலிய திரவபதார்த்தம். (W.)
  7. Urine; மூத்திரம். இவ்வெல்லையி னீர்பெய்து யான் வருகாறும் (பிரமோத். 2, 50)
  8. cf. நீர்நாள். The 20th nakṣatra. See பூராடம். (பிங்.)
  9. The 25th nakṣatra. See பூரட்டாதி. (அக. நி.)
  10. Dampness, moisture, humidity; ஈரம். (W.)
  11. Water in a gem; இரத்தினத்தின் ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139)
  12. Nature, disposition; குணம். அன்ன நீரார்க்கே யுள (குறள், 527)
  13. State, condition; நிலை. (W.)
நீர்³ (nīr) — pron
  1. See நீயிர். (நன். 285.)

IndoWordNet

நீர் — noun
  1. மழையால் கிடைப்பதும் ஆறு முதலியவற்றில் காணப்படுபதும் குடிப்பதற்கு பயன்படுபதுமான திரவம்.

தண்ணீர் கங்கைநீர் அந்தர்வேதி நீர் அந்தரநதி நீர் அலகம்பு நீர் ஆகாயகங்கை நீர் சிரநதி நீர் தபோதன நீர் தக்ஷணகங்கை நீர் திரிபதகை நீர் பகீரதி நீர் மகாநதி நீர் வாமநீர் விண்டுநதிநீர் விமலை நீர் கடினத்தண்ணீர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீர்
  1. தண்ணீர்
  2. கடல்
  3. இரசம்
  4. பனிநீர்
  5. உடல் இரத்தம்
  6. பித்தநீர் முதலிய நீர்மப் பொருள்
  7. பூராடநாள்
  8. பூரட்டாதிநாள்
  9. ஈரம்
  10. மணியின் ஒளி
  11. குணம்
  12. நிலை