பாசறை
படைகள் தங்கும் இடம் பகைவர் நிலத்தில் சென்றிருக்கும் பொழுது தங்கி இருக்கும் இடம் பகைவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டுவோர் உறையும் இடம்
Basara
Winslow (1862)
பாசறை (pācaṟai) — noun
Encampment or tents of an army, a camp, பகைமேற்சென்றோருறைவிடம் Suffering, distress, affliction, துன்பம். (சது.) [vul.] A piece of board for smoothing new plaster,மணியாசப்பலகை
பாசறைமுல்லை — The lover thinking of his lady when absent from her in the camp, பாசறைத்தலை மகன்றலைவியைநினைத்தல். (சது.) 2. A poem in which this subject is handled, ஓர்நூல். (p.)
Fabricius (1972)
பாசறை — noun
a camp, an encampment, பாளையம் affliction, distress, துன்பம்
Tamil Moli Akarathi (1928)
பாசறை (pācaṟai)
ஒருமரம், துன்பம், பகைமே ற்சென்றோருறைவிடம், மணியாசிப் பலகை
பாசறை (pācaṟai)
தெவ்வர் முனைப்பதி-பாடி வீடு
பாசறை (pācaṟai)
துன்பம், பகைமேற் சென் றோருறைவிடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாசறை¹ (pācaṟai) — noun
+ அறை Encampment or tent of an invading army; war-camp; பகைமேற்சென்ற படை தங்குமிடம். மாறு கொள்வேந்தர் பாசறையோர்க்கே (பதிற்றுப். 83, 9) Bushy cave, cavern; பசிய இலையாற் செறிந்த முழை. மரகதப் பாசறை . . . பணிமாமணி திகழும் (தஞ்சைவா. 130) A kind of tree; மரவகை. (யாழ். அக.) A piece of board for smoothing plaster; மணியாசப் பலகை. (W.)
பாசறை² (pācaṟai) — noun
+ அறு-. Suffering, distress, affliction; துன்பம். (திவா.)
IndoWordNet
பாசறை — noun
மக்களின் நலனிற்காக ஏதாவது ஒரு முக்கிய செயலுக்காக செய்யப்படும் ஒரு ஏற்பாடு
கேம்ப் திட்டம் முன்னேற்பாடு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாசறை
போர்க்களத்தில் படைகள் தங்கும் இடம் ஒரு மரவகை மணியாசிப்பலகை துன்பம் பசிய இலையால் செறிந்த முழை
சொல் அகராதி
சொல் தேடு