மனை

மன் + ஐ மனை plot - வீடு முதலியன கட்டப்படும் நிலம் wife - மனைவி

A unit of land area equal to 24 square feet house, mansion wife

Winslow (1862)

மனை (maṉai) — noun
  1. A piece of ground of 2,400 square feet, 2,400-குழிகொண்டநிலம்
  2. A house, வீடு. (c.)
  3. Wife, மனைவி
  4. Family, household, குடும்பம்
  5. A table of cards, in tick-tack, சூதாடுபலகையினறை
  • மனைக்கட்டுநிவேசனம் — Ground on which a house stands.
  • மனைக்கிழத்தி — A wife, மனைவி. (p.)
  • மனைக்கோள் — A lizard, பல்லி.
  • மனைச்சீட்டு–மனைக்கிரயச்சீட்டு–மனை முறி — A title-deed of ground, மனைக்கிரயபத்திரம்.
  • மனைத்தக்காள் — A wife, a house-wife; [ex மனை et தக்காள்.] (குறள்.)
  • மனைத்தாயம் — The virtue of domestic life, இல்லறவொழுக்கம். (குறள்.)
மனை (maṉai)
  1. [improp. for வனை, which see.] To make, &c.

Fabricius (1972)

மனை — noun
  1. piece of ground containing 2400 sq. ft
  2. a house
  3. wife, மனைவி
  4. family, household, குடும் பம்
  5. a table of cards in tick-tack, சூதாடு பலகையினறை
  • மனைகொண்டுகட்ட — to buy a piece of ground and build on it.
  • மனைக்கட்டு — the site of a house.
  • மனைக்கட்டு நிவேசனம் — ground on which a house stands.
  • மனைக்கிழத்தி — a wife.
  • மனைக்கோள்–பல்லி — a lizard, .
  • மனைச்சீட்டு — a title deed of ground.

Tamil Moli Akarathi (1928)

மனை (maṉai)
  1. இரண்டாயிரத்து நானூறு குழி கொண்டநிலம், பதினாறரையேயரை க்காற் குழிகொண்டநிலம், மனைவி, வீடு
மனை (maṉai)
  1. மனை, மனைவி, வீடு

IndoWordNet

மனை — noun
  1. குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
மனை — noun
  1. பீடம், மனை

வீடு இல்லம் அகம் இல் பவனம் ஊடு. சூதாடும் இடம் ஆசிரமம் குருகுலம் ஆச்சார்யகுலம் விருந்தாளிவீடு விருந்தினர்வீடு உறவினர்வீடு சொந்தக்காரர்வீடு யானைக்கொட்டில் யானைக்கொட்டாரம் கோயில் கோவில் தேவாலயம் புனிதஸ்தலம் பிரசவசஅறை பீடம் ஆசனம் இருக்கை அதாரி

Tamil Wiktionary

மனை — பெயர்ச்சொல் (Noun)
  1. plot - வீடு முதலியன கட்டப்படும் நிலம்
  2. wife - மனைவி
  3. family
  4. household - குடும்பம்

[object Object]

மனைவி மனையாள் அடுமனை பணிமனை வளமனை அரண்மனை மருத்துவமனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனை² (maṉai) — noun
  1. prob. மன்னு-. [K. mane, M. mana.]
  2. House, dwelling, mansion; வீடு. சீர் கெழு வளமனை திளைத்து (சீவக. 828)
  3. House-site; வீடுகட்டற்குரிய வெற்றிடம்
  4. Ground, a land-measure 40' X 60' 2400 sq. ft. ¹⁄₂₄ kāṇi; நிலவளவுவகை. நூறுமனைக்கீழ் நால்கூறாக அடைப்பதாகவும் (S. I. I. i, 64)
  5. Wife; மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148)
  6. Family, household; குடும்பம்
  7. Domestic life; இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள். 51)
  8. Square, as of a chess-board; சூதாடு பலகையி னறை. (W.)
  9. Mother; நற்றாய். கவர் மனைமருட்சி (இலக். வி. 537)