முன்

முன்பு முன்பே முன்னால்.. before முன் - முன்பு - முந்து

anteriority antiquity eminence

Tamil Wiktionary

முன் — பெயர்ச்சொல் (Noun)
  1. முன்பு முன்பே முன்னால்..

[object Object]

முன்பு முந்து முன்பனி முன்னிலை முன்னோடி முன்னோர் முன்னோக்கு முன்னுரிமை முன்னோட்டம் முன்மாதிரி முன்னேற்பாடு முற்காலம் முற்பகல் முற்பிறப்பு முற்பிறவி முற்போக்கு முன்னேறு முன்மொழி

Winslow (1862)

முன் (muṉ) — noun
  1. , [adj. and adv.] Before, antecedent, previous, முதலான
  2. Beyond, next, future, இனிமேலான
  3. In presence of, in front –oppos. to பின்
  4. First in importance, chief, special, முதன்மை
  5. Side, பக்கம்
  6. Antiquity, பழமை
  7. The seventh case or local ablative , ஏழனுருபு
  8. Over.–Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. –Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.)
  • முற்காலம் — Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illustrious of former days.
  • முற்குளம் — The twentieth lunar mansion. See பூராடம். (சது.)
  • முற்குறிப்பு — Prefiguration, prototype.
  • முற்கூரை–முன்கூரை — Front-slope of a roof.
  • முற்கூறு — Former part, the beginning.
  • முற்கொழுங்கோல் — The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.)

Fabricius (1972)

முன் — adj. & adv.
  1. & adv. before, formerly, antecedent, previous, முந்தின
  2. first in importance, முதன்மையான
  3. next, future, இனிமேலான
  4. prep. (with gen. or dat.) in front of, before
  5. s. antiquity, பழமை. Before hard consonants ன் may change into ற்
  • வீட்டுக்கு முன் — before the house.
  • வீட்டின் முன் மூன்று கதவுகள் உண்டு — there are three doors in the front of the house.
  • அவன் வருகிறதற்கு–வரும்–வராத தற்கு)–முன் — (, also , before he came.
  • முற்காலத்திலே–முன்னாளிலே — in former days.
  • முற்குறிப்பு — prefiguration.
  • முற்கோபம் — a sudden anger from a slight cause.

Tamil Moli Akarathi (1928)

முன் (muṉ)
  1. இனியென்பது, ஏழனருபு (உ-ம்) கற்றார் முற்றோன்றா கழிவிரக்கம், பக்கம், பழமை, முதல், முன்பு, முன் னென்னேவல், மேல்
முன் (muṉ)
  1. புரம், முன்பு
முன் (muṉ)
  1. இனியென்பது, ஏழனுருபு, (உ-ம் கற்றார்முற்றோன்றா கழிவிரக்கம்,) பக்கம் பழமை, முதல், முன், முன் னென்னேவல், மேல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்¹ (muṉ)
  1. , [T. munu, K. mun.] adj. & adv
  2. In front; இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.)
  3. Previous, prior; காலத்தால் முன். (நன். 123, உரை.) முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190). — n
  4. Antiquity; பழமை. (சூடா.)
  5. That which is first or chief; முதல். (பிங்.)
  6. Eminence; உயர்ச்சி. (திவா.)
  7. See முன்றோன்றல். அறு முகேசன் முன் (திருவாலவா. காப்பு, 2). (திவா.) — part. Sign of the locative; ஏழனுருபுள் ஒன்று. (நன். 302.)
முன்² (muṉ) — noun
  1. Meaning, idea; மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொ. 127).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்
  1. இடத்தால் முன்
  2. காலத்தால் முன்
  3. உயர்ச்சி
  4. முதல்
  5. பழைமை
  6. ஏழனுருபு
  7. மனக் குறிப்பு
  8. காண்க: முன்றோன்றல்