அமைதி
peace
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அமைதி (amaiti) — noun
- < அமை¹-
- Being attached, joined; பொருந்துகை
- Nature, as of a thing; தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176)
- Abundance, plenitude; நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78)
- Occasion, opportunity; சமயம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா.. 210)
- Deed, action; செய்கை. அமைதி கூறு வாம் (கந்தபு. தெய்வ. 185)
- Modesty; அடக்கம்
- Satisfaction, contentment; திருப்தி
- Calmness, quietude, serenity of spirit; சாந்தம். பெரியோர் சிந்தை யமைதியின் (இரகு. தேனு. 47)
- Humility; தாழ்வு. (பரிபா. 4, 71.)
- Grandeur; மாட்சிமை. (திவா.)
அமைதி (amaiti) — noun
- < id
- Propriety, fitness; தகுதி. அகலிட நெடிதாளு மமைதியை (கம்பரா. வனம்புகு. 24)
- (Gram.) Sanctioned deviation from grammatical rules, as anomalous; வழவமைக்கை. இவ்வழுவிற்கு அமைதி இது
Winslow (1862)
அமைதி (amaiti) — noun
- Quietude, peace, stillness, calmness, submission, obedience, subjection, subordination, acquiescence, அடக்கம்
- (p.) Greatness, excellence of character, glory, மாட்சிமை
- Quality, property, தன்மை
- Opportunity, சமயம்
- Satisfaction, contentment, திருத்தி
- Time, காலம்
- Place of residence, வாசஸ்தலம்
Fabricius (1972)
அமைதி — noun
- calmness, peace, அமரிக்கை
- opportunity
- grandeur, greatness
- modesty, humility
- deed, action
Tamil Moli Akarathi (1928)
அமைதி (amaiti)
- அடக்கம், அமரிக்கை, சமயம், நிகழ்ச்சி, பொருத்தம், மாட்சிமை, வாசஸ்தலம்