இவள்விவாகமாகிக்கொ ங்சநாளில் இறந்து திருவாலங்காட் டிலே போய்த் திரிந்துகொண்டிருந் தாள், ஒருநாள் அவள் கணவன் அக் காட்டுவழியே தனித்துச் சென்ற போது இந்த நீலிப்பேய் அவனது இ ரண்டாமனைவியைப்போல வடிவங் கொண்டு, ஒரு கள்ளிக்கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே தாங்கிக் கொண்டு அவனைத் தொடர, அவன் அவ்வடிவைப் பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்சக மொழிகளுக் கு இணங்காதோடினான், பேயும், இது முறையோ ஏன்னைக் காட்டில் தனி யேவிடுத்துச் செல்லா நின்றீரே, ஏன்று அழுதுகொண்டே பின்றொ டர்ந்து காஞ்சீபுரத்தை யடைந்து, அங்கே பொதுவிடத்தில் கூடியிருந்த வேளாளரிடத்திற்சென்று தன் வழக் கைச் சொல்லிற்று, அவ்வேளாளர் இவ்விருவர் வழக்கையுங் கேட்டுப் பேயைப்பார்த்து, நீ சொல்லுவதற் குச் சாக்ஷியாரென்று கேட்க, பேய், இந்தப் பிள்ளையைவிடுகிறேன், இது அப்பாவென்றழைத்துத் தந்தை மடி மே லேறாதோ, பாருங்களென்று, சொல்லி விடுக்க, குழந்தை அவ்வா றே செய்ய, வணிகன், இது பேய்க் கூத்தென்றான், அதுகேட்ட வேளா ளர், அது உண்மையானால் நாங்கள் பிணையாவோம் நீயும் இவளும் இந்த அறையினுள்ளே போய்ச் சிறிதுநே ரம் பேசிக்கொண்டிருந்து வாருங்கள் ஏன்று சொல்ல வணிகன் அச்சொல் லைத்தடுக்கவொண்ணாதவனாய் அறை யினுள்ளே செல்ல, பேயுந்தொடர்ந் துள்ளே புகுந்து கதவடைத்து அவ னுயிர் குடித்து மறைந்தது