பத்திரம்

முத்திரைத் தாள். பத்திரம் - கவனமாக கொள் a stamped paper, safety .

leaf palm leaf of a book plate in the form of leaf

Tamil Wiktionary

பத்திரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. முத்திரைத் தாள்.
  2. பத்திரம் - கவனமாக கொள்

Winslow (1862)

பத்திரம் (pattiram) — noun
  1. Letter, epistle, note, tract, commonly, any written document, bond, deed, order, &c., சீட்டு
  2. Leaf, இலை. (c.)
  3. Leaf of a book, புத்தகத்தினேடு
  4. Petal of a flower பூவிதழ்
  5. Wing, feather, plumage, சிறகு
  6. Feathers of an arrow, அம்பினிறகு
  7. Arrow, அம்பு
  8. Paper, gold or silver leaf, மெல்லியதகடு. W. p. 498. PATTRA
  9. A dagger, cimeter, உடைவாள்
  10. One of the postures of the silent devotee, as பத்திராசனம்
  11. Beauty, handsomeness, grace, அழகு
  12. Hill, mountain. மலை
  13. One of the five parts of a crown, See முடியுறுப்பு
  14. (c.) Caution, care, circumspection, சாக்கிரதை
  15. Firmness, safety, secureness, validity, உறுதி; [from Sa. B'hadra, auspicious, beautiful, right, &c.] பத்திரம். Take care, be careful. பத்திரமாய்ப்பார். Take good care
  • பத்திரக்கடன்காரன் — A bond-creditor.
  • பத்திரஞ்சாத்த — To put leaves about an idol.
  • பத்திரப்படுத்த–பத்திரம்பண்ண — To take care. 2. To keep in safe or close custody. 3. To make firm or safe; to secure.
  • பத்திரமெடுக்க — To pluck leaves or flowers for daily worship.
  • பத்திரயௌவனம் — Tender foliage, shootings of leaves, &c., இளந்தளிர்.
  • பத்திராசனம்–பத்திராதனம் — A throne, சிங்காசனம். (சது.) 2. One of the postures of the silent devotee when he is seated erect with bent legs crossed under him and turned so as to bring the ankles in contract with the perineum, while the soles of the feet are held by the hands close to the sides, யோகாசனம். W. p. 612. B'HADRASANA.

Fabricius (1972)

பத்திரம் — noun
  1. a leaf, இலை
  2. a leaf of a book ஏடு
  3. a letter, a bond, a deed, சீட்டு
  4. caution, care, security, சாக் கிரதை
  5. firmness, safety, உறுதி
  6. a dagger, உடைவாள்
  7. one of the postures of the silent devotee
  8. beauty, handsomeness, grace, அழகு
  9. a hill, a mountain
  10. wing, feather, plumage, சிறகு
  11. an arrow, அம்பு
  • பத்திரம் — take care, be careful, keep safe.
  • பத்திரப்படுத்த–பத்திரம் பண்ண — to secure, to keep in custody.
  • பத்திரமாகப் பார்க்க–பத்திரமாய்ப் பார்க்க — to take good care of.
  • பத்திராசனம்–சிங்காசனம் — a throne, .
  • பத்திராசனர் — one of the classes of angels or heavenly inhabitants; 2. enthroned angels.
  • அதிகாரப்பத்திரம் — power of attorney.

Tamil Moli Akarathi (1928)

பத்திரம் (pattiram)
  1. அம்பு, அழகு, இலை, இறகு, உடைவாள், மலை, முடியுறுப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பத்திரம்¹ (pattiram) — noun
  1. < patra
  2. Leaf; இலை. பத்திரங்கொண் டருச்சித்தே (வெங்கைக்கோ. 120)
  3. Palm leaf of a book; புத்தகத்தி னேடு. எதிர்போயேறும் பத்திரம் வென்றதாக (திருவாலவா. 38, 24)
  4. Plate in the form of leaf; இலைபோன்ற தகடு. பைம்பொற் பத்திரம் (பெருங். மகத. 5, 51)
  5. A leaf-like ornament; ஓர் ஆப ரணம். வெண்கலப் பத்திரங்கட்டி விளையாடி (திவ். பெரியாழ். 1, 9, 5)
  6. Written document, bond, deed, order; சாஸனம்
  7. Letter, epistle, note, ola; திருமுகம். பத்திரங் கொடுத்தொதுங்கிப் பத்திரன் பணிந்து நின்றான் (திருவாலவா. 55, 19)
  8. Flower petal; பூவிதழ். (W.)
  9. Wing, feather, plumage; இறகு. (பிங்.)
  10. Arrow; அம்பு. (பிங்.) துன்று பத்திர மாயிரம் வாசவன் றுரப்ப (குற்றா. தல. 14, 39)
  11. Small sword; சிறுவாள். (பிங்.) பத்திரம் புரை நாட்டம் (கம்பரா. ஊர்தே. 170)
பத்திரம்² (pattiram) — noun
  1. < bhadra
  2. Beauty, grace; அழகு. (பிங்.)
  3. Beautiful figures, as carved on a door; அழகிய உருவம். பத்திரமணிந்த சித்திரக்கதவின் (பெருங். இலாவாண. 2, 66)
  4. Caution, carefulness, circumspection; கவனம். சாமான்களைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
  5. Goodness; நன்மை. (சூடா.) பத்திரக்கடிப்பு (சீவக. 2276)
  6. Safety, security; பாதுகாப்பு. பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் (கம்பரா. சடாயுவுயிர். 91)
  7. Good state of health, welfare; சௌக்கியம். ஊரில் எல்லாரும் பத்திரமா?
  8. A kind of elephant; யானைவகை. பத்திரப் பெயர்ப் பருத்தகைச் சிறுத்தகட் பாய்மதப் பரூஉப் பக டனையான் (பாரத. பதினெட்டாம். 31)
  9. Hill, mountain; மலை. (பிங்.) பத்திரத் தலையென (கம்பரா. கரன். 80)
  10. A kind of moulding in a pedestal; பீடத்திலுள்ள எழுதகவகை. நடுவு பத்திரம் உடைத்தாய் நின்ற பீடம் ஒன்று (S. I. I. ii, 222)
  11. See பத்திரவருடம். (சிவதரு. கோபுர. 53)
  12. See பத்திராசனம். ஆதன நூற்றெட்டவை பது மம் பத்திரம் (தத்துவப். 107)
  13. See பத்திரலிங்கம். (சைவச. பொது. 127.)
  14. Horse-stable; குதிரைப் பந்தி. (அக. நி.)

IndoWordNet

பத்திரம் — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
பத்திரம் — noun
  1. ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்
பத்திரம் — noun
  1. தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
பத்திரம் — noun
  1. ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் விழிப்பு உஷார் உன்னிப்பு கவனிப்பு தன்மை ஆவணம் சீட்டு சுங்கம் ஜமாபந்தி நிலவரித்திட்டம் அஞ்சல் தலை உரிமை பத்திரம் உரிமைப்பத்திரம் பதிவேடு குறிப்பேடு பாஸ்புக் நினைவுக்கடிதம் நினைவுமடல் நினைவுவஞ்சல் பாதுகாப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பத்திரம்
  1. இலை
  2. புத்தகத்தின் ஏடு
  3. இலை போன்ற தகடு
  4. ஓர் அணிகலன்
  5. சாசனம்
  6. திரு ' முகம்
  7. பூவிதழ்
  8. இறகு
  9. அம்பு
  10. சிறுவாள்
  11. அழகு
  12. அழகிய உருவம்
  13. கவனம்
  14. நன்மை
  15. ! பாதுகாப்பு
  16. நலம்
  17. யானைவகை
  18. மலை
  19. பீடத்திலுள்ள எழுதகவகை
  20. காண்க: