மணம்

விவாகம் (அ) திருமணம் odor, odour, aroma wedding, marriage

odor, scent, (specifically) fragrance marriage, union (of lovers) fragrant substance

Tamil Wiktionary

மணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வாசனை
  2. விவாகம் (அ) திருமணம்

[object Object], [object Object]

திருமணம் நறுமணம் மறுமணம் கலப்புமணம் மண்மணம் மணமாலை மணமேடை மணமக்கள் மணமகள் மணமகன் மணவாளன் மணவாட்டி மணப்பெண் மணமுறிவு மணவிலக்கு மணம்புரிதல் மணம்வீசு நறவு மன்றல் வாசனை நாற்றம் பரிமளம் சுகந்தம் மனம்

Winslow (1862)

மணம் (maṇam) — noun
  1. Fragrance, நற்கந்தம்
  2. [fig.] Better circumstances, நலம். (c.)
  • மணங்கட்ட–மணமூட்ட — To fumigate with odors; to perfume.
  • மணங்கமழ — To yield fragrance.
  • மணந்துபார்க்க — To smell any thing. 2. To examine by smelling.
  • மணமாயிருக்க — To smell fragrantly. 2. To be prosperous. 3. To be illustrious.
  • மணம்பிடிக்க — To perceive by the smell or scent–as dogs; to be attracted by scent, as insects. 2. [prov.] To be attracted, as children, by dainties. 3. To stink badly.
  • மணம்வீச — To diffuse odor.
மணம் (maṇam) — noun
  1. Nuptials, marriage, wedding, wedlock, கலியாணம். (சது.)
  2. [fig.] Better circumstances, நலம்
  • அஷ்டமணம்–பிரமம்–பிரசாபத்தியம்–ஆரிடம்–தெய்வம் — . Eight kinds of marriage: 1. , marriage of a virgin to a bachelor; 2. , marriage by mutual consent of the relations; the girl having been solicited by the friends of the bridegroom; 3. , the gift of a girl in marriage; her relations receiving as a present one or two cows, or bullocks; or according to some, the girl is placed between a cow and a bullock with gilded horns and hoofs, and the ceremony is comfirmed by the pouring of water; 4. , marriage of a girl bestowed by a deity in recompense for a sacrifice offered by her father; or, as some say, marriage in the presence of a sacrifice.– These four are performed before the god of fire, as a witness; 5. காந்தருவம், marriage by the mutual consent of the individuals themselves; without consulting friends, or having a marriage ceremony; 6. ஆசுரம், marriage in which the bridegroom furnishes the bride with jewels, and pays her friends the sum which they demand for her.–Note. Some authorities mention certain heroic or athletic explcits as the price to be paid. 7. இராக்கதம், marriage in which the girl is taken by force, without her own consent or that of her friends; 8. பைசாசம், marriage in which a girl is forced when asleep, or in a state of insensibility. மணமும்பிணமும் போகிறவீதியிலிருந்துபேசுகிறேன். I assert it in a street where weddings and funerals pass; a strong asseveration.
  • மணக்கோலம் — Marriage-attire or costume. 2. See கோலம்.
  • மணப்பந்தல் — A marriage-shed erected and adorned for the wedding.
  • மணப்பறை — Drumming at a marriage–oppos. to பிணப்பறை.
  • மணப்பொருத்தம் — A marriage-contract, a written agreement between the parties marrying; or their parents, on giving their children in marriage. 2. See தசப்பொருத்தம்.
  • மணமகன் — A bridegroom, மணவாளன். 2. (சது.) A husband, புருஷன்.

Fabricius (1972)

மணம் — noun
  1. fragrance, வாசனை
  2. marriage, wedding, கலியாணம்
  3. (fig.) better circumstances
  • மணக்கோலம் வர — to make a wedding procession.
  • மணங்கட்ட–மணமூட்ட — to perfume, to fumigate with odours.
  • மணங்கமழ — to yield fragrance.
  • மணமகன் — ( மணமகள்) a bride- groom; 2. a husband.
  • மணமாயிருக்க — to smell fragrantly; 2. to be prosperous, to be illustrious.
  • மணமும் பிணமும்போகிற வீதி — a common street where weddings and funerals pass.

Tamil Moli Akarathi (1928)

மணம் (maṇam)
  1. கலியாணம், கூட்டம், மகிழ்ச்சி, வாசனை
மணம் (maṇam)
  1. 8- பிரமம், பிரசாபத்தியம், ஆரி டம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இ ராக்கதம், பைசாசம், இவற்றுட்பிரம சாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது பிரமமணம்; தலைமகனி னத்தார் வேண்டத் தலைமகளினத் தாருட் பட்டவளைத் தீ முன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்
  2. ஒ ன்றிரண்டு பசுவு மெருதும் வாங்கிக் கொண்டு கன்னியைத் தீமுன்னர் கொடுப்பதாரிடமணம், வேள்வியால் வந்த கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது தெய்வமணம் கொடுப்பா ருங் கேட்பாருமின்றி யிருவருந்தனி யிடத்தெதிர்பட்டுத் தாமே கூடுவது காந்தருவமணம்; பெண்ணுக்குப் பொன் பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன் வேண்டுவன கொடுத்துக் கொள்வதசுரமணம்; பெண்ணும் பெ ண்ணினத்தாரு முடன்படாமல் வலி திற்கொள்வ திராக்கதமணம், துயி ன்றாளைச் சென்றுகூடுவது பைசாச மணம்
மணம் (maṇam)
  1. கலியாணம், வாசனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மணம் (maṇam) — noun
  1. Union, as of lovers; கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (காசிக. மகளிர். 10). (உரி. நி.)
  2. Marriage, of which there are eight kinds, viz., piramam, teyvam, pirācāpattiyam, āriṭam, kāntaruvam, ācuram, irākkatam, paicācam; பிரமம், தெய்வம். பிராசாபத்தியம், ஆரி டம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எண்வகை விவாகம். (பிங்.)
  3. Fragrance; நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354)
  4. Fragrant substance; வாசனைப் பொருள். மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447)
  5. Respectability, dignity; மதிப்பு. பணமுள்ள வனுக்கே மணமுண்டு
  6. Prosperity, affluence; நன்னிலை. மக்கி மணங்குலைந்து (இராமநா. உயுத். 81)

IndoWordNet

மணம் — noun
  1. ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.

நறுமணம் வாசனை வாசம் நல்லமணம் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் இனியமணம் நல்லமணம் நல்லவாசனை நற்மணம் நாற்றம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மணம்
  1. கூடுதல்
  2. நறுநாற்றம்
  3. மணப்பொருள்
  4. மதிப்பு
  5. நன்னிலை
  6. எண்வகை மணம்