போலி

ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று fake, imitation போலவே இருப்பது போலி

fake a counterfeit, duplicate, fake resemblance, likeness

Tamil Wiktionary

போலி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று

[object Object]

Winslow (1862)

போலி (pōli) — noun
  1. Similarity, ஒப்பு
  2. Imitation, semblance, likeness, சாயல்
  3. Any tthing spurious, artificial or deceptive; a counterfeit, கள்ளத்தன்மை
  4. A substitute, பிரதி
  5. An equivalent, ஒப்பானது
  6. [prov.] Dissimulation, hypocrisy, pretence, மாரீசம்
  7. [in gram.] The substitution of one letter for another–as அய் for ஐ, ஏழுத்துப் போலி; [ex போலு, v.]
  • போலிச்சரக்கு — Inferior goods or commodities. 2. Showy things; goods that appear well but disappoint one's hopes.
  • போலித்தனம் — Mere disguise, show, ostentation.
  • போலிமனிதன் — A beastly person, one who has but the form of a man.
  • போலியர் — Equals, as ஏன்போலியர், my equals; தன்போலியர், one's mates or fellows.
  • போலியாள் — A superficial person.
  • போலியெழுத்து — A letter resembling another in sound, as அயி for ஐ, in அயிக்கம் for ஐக்கம்; அய் for ஐ in அய்யன் for ஐயன்; அவ், for ஔ in அவ்வை, for ஔவை; அவு for ஔ in அவுடதம் for ஔடதம். 2. A letter substituted for another differing in sound, as ர் for another differing in sound, as ர் for ல் in சாம்பர், for சாம்பல்.

Fabricius (1972)

போலி — noun
  1. resemblance, likeness, சாயல்
  2. anything deceptive, a counterfeit, கள்ளத்தன்மை
  3. substitution of one letter for another (as அய் for ஐ in அய்யா for ஐயா)
  4. a substitute, பிரதி
  • போலிகாட்ட — to shew bad goods instead of good ones.
  • போலிச்சரக்கு — a counterfeit, base or bad merchandise.
  • போலிநியாயம்–ஆபாசம் — a fallacy, .
  • போலியர்–நும்போலியர்–தன்போலியர் — equals as in , your equals, , one's mates.
  • நும்போலியருக்கு இச்செயல் அடாது — this act does not become persons of your status or stamp.
  • போலிவேலை — unsubstantial work; 2. deceptive work.

Tamil Moli Akarathi (1928)

போலி (pōli)
  1. ஒட்டகம், ஒப்பு, ஒன்றுபோ லொன்றிருத்தல், கள்ளமுமிளப்பு மாயிருப்பது, கேலி, சாயல்
போலி (pōli)
  1. ஒன்றுபோலொன்றிருத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போலி (pōli) — noun
  1. < id
  2. A person or thing that is equal; equivalent; ஒப்புடைய-வன்-வள்-து. தில்லை போலிதன் காதலனே (திருக்கோ. 303). தாமரை திருவடிகளுக்குப் போலியா யிருக்க (ஈடு, 1, 4, ப்ர.)
  3. Similarity; ஒப்பு. உவமப் போலி (தொல். பொ. 300, உரை)
  4. Imitation, semblance, likeness; சாயல். (W.)
  5. Anything spurious, artificial or deceptive; counterfeit; கள்ளப்பொருள். போலி நாணயம்
  6. Dissimulation, hypocrisy, pretence; வஞ்சகம். (J.)
  7. Jest; கேலி
  8. See போலியெழுத்து. (நன். 122.)
  9. See இலக்கணப்போலி. (நன். 238.)
  10. (Log.) Sophism, erroneous though plausible; நியாயபாசம். பக்கப் போலியு மேதுப் போலியும் (மணி. 29, 145)

IndoWordNet

போலி — noun
  1. பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.
போலி — noun
  1. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை
போலி — noun
  1. தோற்றம், குணம், தன்மை முதலியவற்றில் பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே இருப்பது.
போலி — noun
  1. உண்மையானதைப் போலத் தோற்றமுடையது, தரத்தில் தாழ்ந்ததாக இருப்பது

பொய் கள்ளம் புரட்டு புளுகு கெட்டகுணம் வேடம் வேஷம் உருவம் இயந்திரம் கருவி உபகரணம் விலங்கு மிருகம் பிராணி ஜந்து செந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

போலி
  1. ஒன்றுபோல் ஒன்றிருத் தல்
  2. ஒப்புடைய வர்
  3. ஒப்புடையது
  4. ஒப்பு
  5. சாயல்
  6. கள்ளப் பொருள்
  7. படி, பிரதி
  8. பொய்
  9. வஞ்சகம்
  10. கேலி
  11. காண்க: போலியெழுத்து
  12. இலக்கணப் போலி
  13. நியாயாபாசம்