மஞ்சள்

மஞ்சள் என்பது ஒரு நிற வகை. இந்து சமயத்தில் மங்களகரமானதாகக் கருதப்படும் பொருள்களில் ஒன்று. நிலத்திற்குக் கீழே கிடைக்கும், ஒரு வகை கிழங்கு

yellow (colour) turmeric (Curcuma longa) turmeric (the pulverized rhizome of the turmeric plant, used for flavoring and to add a bright yellow color to food)

Tamil Wiktionary

மஞ்சள்
  1. மஞ்சள் என்பது ஒரு நிற வகை.
  2. இந்து சமயத்தில் மங்களகரமானதாகக் கருதப்படும் பொருள்களில் ஒன்று.
  3. நிலத்திற்குக் கீழே கிடைக்கும்
  4. ஒரு வகை கிழங்கு
  5. வாதம்
  6. பித்தம்
  7. கபம் சமன் செய்யும்.
  8. அதிகம் உண்டால்
  9. காமாலை வரும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மஞ்சள்¹ (mañcaḷ) — noun
  1. Turmeric, Curcuma longa; செடிவகை. மஞ்சள் மெல் லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44)
  2. Yellow colour, as that of turmeric; மஞ்சணிறம். மஞ்சள் வெயில்
  3. Acid lime; எலுமிச்சை. (சங். அக.)
  4. See மஞ்சட்குருவி. (சங். அக.)
மஞ்சள்² (mañcaḷ) — noun
  1. See மஞ்சரி². (சங். அக.)

Winslow (1862)

மஞ்சள் (mañcaḷ) — noun
  1. Indian saffron, long-rooted turmeric, அரித்திரம், Curcuma longa.–Ofturmeric are different kinds, as கஸ்தூரிமஞ்சள், Amomum, L; கப்புமஞ்சள், கொச்சிமஞ்சள், a superior kind from Cochin; கறிமஞ்சள், another kind used for curries; கிழங்குமஞ்சள், turmeric with round roots; விரலிமஞ்சள், that with slender roots; மரமஞ்சள், a tree and its root so called, very bitter, and medicinal. See திரிமஞ்சள். (c.) மஞ்சட்பாவாடைபோர்த்துக்கொள்ளுகிறது. Putting on a saffron-colored cloth, a religious ceremony.
  • மஞ்சட்கடம்பு — A tree, Nanclea cordifolia.
  • மஞ்சட்கரு — The yolk of an egg. See கரு.
  • மஞ்சட்கல் — A kind of mineral. See கொடுங்கோபிச்சிலை.
  • மஞ்சட்காப்பு — A spot of turmeric paste on the forehead, a charm. 2. See under, கா, v.
  • மஞ்சட்காமாலை — A kind of jaundice, causing yellowness of the eyes.
  • மஞ்சட்காளான் — A yellow kind of mushroom.

Fabricius (1972)

மஞ்சள் — noun
  1. Indian saffron, turmeric curcuma longa, அரிசனம்.
  • மஞ்சட்கரு — the yolk of an egg.
  • மஞ்சட்கொத்து — a bunch of turmeric; root and leaves.
  • மஞ்சட்காமாலை — a kind of jaundice.
  • மஞ்சணீர் — turmeric water used for sprinkling at weddings etc.
  • மஞ்சணீர் குடிக்க — to adopt a child by drinking turmeric water.
  • மஞ்சணீர்ச்சீட்டு — a written agreement of adoption.

Tamil Moli Akarathi (1928)

மஞ்சள் (mañcaḷ)
  1. அரிசனம்
மஞ்சள் (mañcaḷ)
  1. அரிசனம், கசற்பம், காஞ்சனி, நிசி, பீதம்

IndoWordNet

மஞ்சள் — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி
மஞ்சள் — noun
  1. பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.
மஞ்சள் — noun
  1. மஞ்சள் பொடியின் நிறம்

அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மஞ்சள்
  1. செடிவகை
  2. மஞ்சள்நிறம்
  3. எலுமிச்சை
  4. காண்க: மஞ்சட்குருவி,