மன்மதன்
காமன்; காதல் கடவுள்; ஆண், பெண் இடையே காதலை ஏற்படுத்துபவனாகக் கருதப்படும் கடவுள் பேரழகன் god of love; Cupid
Cupid
Tamil Wiktionary
மன்மதன் — பெயர்ச்சொல் (Noun)
- காமன்; காதல் கடவுள்; ஆண்
- பெண் இடையே காதலை ஏற்படுத்துபவனாகக் கருதப்படும் கடவுள்
- பேரழகன்
Winslow (1862)
மன்மதன் (maṉmataṉ) — noun
- Kama, காமன். W. p. 643. MANMAT'HA
- (சது.) One who confounds the mind, மனங்கலக்குவிப்போன்
- மன்மதன்கணை–5.–பஞ்சபாணம் — The five arrows of Kama. See .
- மன்மதகிரகம் — Pudendum mulieris.
- மன்மதபாணம் — An arrow of Kama. 2. A kind of jasmine, ஓர்வகைமல்லிகை.
- மன்மதவருஷம் — The twenty-ninth year in the Hindu cycle, corresponding with A. D. 1835.
- மன்மதவேதனை — Suffering from love.
Fabricius (1972)
மன்மதன் — noun
- Kama
- one who confounds the mind
- மன்மத கிரகம் — pudendum mulieris or mons veneris.
- மன்மதம் — love of the sexes, passion.
Tamil Moli Akarathi (1928)
மன்மதன் (maṉmataṉ)
- காமன், மனங்கலக்குவிப் போன், விஷ்ணுமாநஸ புத்திரன்
- இவன் பாரி இரதி
- கொடி மகரம், பாணம், புஷ்பம்
- மன்மதன் ஏன்பதன் பொருள், மனதுக்குக் கிளர்ச்சியைக் கொடுப் பவன் ஏன்பது
- மன்மதனை பிரஹ்ம புத்திரனென்று கூறுவாருமுளர்
- ருக்வேதம் ப்ரஹ்ம சைதந்யத்திலே முதற்கணெழுந்தது இச்சை யென் றுகூறும்
- அது நிற்க காமவிச்சைக் கதிதேவதையாகிய மன்மதனே பெ ரும்பாலும் புராணங்களிலே பேசப் படுவன்
- மன்தன் அழகோடுகூடிய யௌவநத்தை அதிகரித்து நின்று ஆண் பெண்ணைக் கூட்டி பிரஜாவி ருத்திக் குபகாரஞ்செய்யும் இதிகார மூர்த்தி மன்மதன் அரூபியாய் வச ந்தகாலம்
- நிலா, மணி, மேடை, மணற்குன்று, பூஞ்சோலை, சந்த் ரோதயகாலம், புஷ்பம், வாசனை, அழகு முதலியவைகளைத் தனக்குப் பரிவாரமாகக் கொண்டிருப்பவன்
- தாரகாதி அசுரரால் வருந்திய தே வர் வேண்டுகோளுக்கிரங்கி மன்ம தன் சிவபிரான்மீது தனது காம பாணங்களைச்செலுத்தி அவர் நெற் றிக்கண்ணுக் கிரையாகி அங்க மிழ ந்து அன்றுதொட்டு அநங்கன் ஏன் னும் பெயர்கொண்டான்
- மன்மதன் பாரியாகிய ரதிதேவி பார்வதியைப் பன்முறையிரந்து தன் குறையைக் கூற, பார்வதி இரதியைத்தேற்றி
- "உன் கணவன் கிருஷ்ணனுக்கு பிரத் யும்நன் ஏன்னும் பெயரோடு புத்திர னாகப் பிறப்பான். அச்சிசுவைச் சம் பராசுரன் கவர்ந்துபோய்க் கடலி லிடுவான். அதனை மீன் கவர்ந்து விழுங்கும். அம்மீனை வலைஞர்பிடி த்து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அவன் வீட்டு ஏவற்பெண்ணாகி அம் மீனை வாங்கி அறுத்து அச்சிசுவைக் கவர்ந்தேகி, அவனோடு வாழ்வை ஏன்றார். அவ்வாறே இரதி சம்பரன் மனையில் ஏவற்பெண்ணாகி யிருந்து பிரத்யும்நனை நாயகனாகப் பெற்றாள்."
- இச்சரித்திரம், வாமந, பாகவத, விஷ்ணு புராணங்களில் கூறப்பட் டுள்ளது
- ஸ்காந்தபுராணத்திலே கூற ப்பட்ட சரித்திரம் சற்றே விகற்பமாம்
மன்மதன் (maṉmataṉ)
- அங்கசன், அனங்கன், ஆழி முரசோன், இரதிகாதலன், உருவிலி ஐங்கணைக்கிழவன், கந்தர்ப்பன், கரு ப்புவில்லி, காமன், சம்பராரி, சித்த சன், சிங்காரயோனி, சீபுத்திரன், சுரும்பாவன், சூர்ப்பகாராதி, தர்ப்ப கன், திங்கட்குடையோன், திருமக ண்மைந்தன், தென்றற்றேரான், பஞ் சபாணன், பிரத்தியும்நன், பூவம்பன் பூவாளி, மகரகேதனன், மதன், மது சகன், மனோசன், மனோற்பவன், மா மகன், மாரன், மான்மகன், மீனக் கொடியோன், மோகன், வசந்தன், வேள், வேனிலாளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மன்மதன் (maṉmataṉ) — noun
- Kāma, the God of Love; காமன். (திவ். நாய்ச். 1, 7.) (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)