கடன்

மற்றவரிடமிருந்து பெறும் பணம், பின்னாளில் திரும்பி அளிக்க வேண்டியது debt, loan, duty उधार, ऋण, कर्ज

debt, loan duty, obligation borrowed article

Tamil Moli Akarathi (1928)

கடன் (kaṭaṉ)
  1. அளத்தல், இருணம், கடமை, குடியிறை, மரக்கால் முறைமை
கடன் (kaṭaṉ)
  1. இருணம், இறை
கடன் (kaṭaṉ)
  1. 3 - தேவர்கடன், பிரதிரர்கடன், முனிவர்கடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடன் (kaṭaṉ) — noun
  1. Duty, obligation; கடமை. கடனறி காட்சியவர் (குறள், 218)
  2. [K. kaḍa.] Debt; loan of money, of goods on trust; இருணம். இன்னா கடனுடையார் காணப் புகல் (இன். நாற். 12)
  3. Borrowed article; இரவற்பொருள். அதனைக் கட னாக வாங்கிவந்தான். Loc
  4. Nature, natural attribute; இயல்பு. கடனென்ப நல்லவையெல்லாம் (குறள், 981)
  5. Order, manner, plan, system; முறைமை. எழுத்துக்கட னிலவே (தொல். எழுத். 142)
  6. Observances like the daily ablutions and other devotional exercises enjoined by religion; வைதிகக் கிரியை. அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும் (புறநா. 2, 22)
  7. Hospitality; விருந்தினர்க்கு உபசாரம். அருங்கடன் முறையி னாற்றி (கம்பரா. மிதி. 93)
  8. Measure, definite quantity; அளவை. (திவா.)
  9. A dry measure; மரக்கால். (தைலவ.)
  10. Tribute, tax; குடியிறை. (திவா.)
  11. Cause; காரணம். உணர்வியா னல்ல வான கடனியாதென்னின் (சி. சி. 4, 27)
  12. Honour; மானம். கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் (குறள், 1053)

IndoWordNet

கடன் — noun
  1. குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெரும் பணம்
கடன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்
கடன் — noun
  1. ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.
கடன் — noun
  1. பொருளின் எஜமானனுக்கு பின்பு தீர்க்கப்படும் ஏதாவது ஒரு பொருளின் மதிப்பு
கடன் — noun
  1. குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம் அல்லது கை மாறாக வட்டியுடனோ வட்டி இலலாமலோ தரவேண்டிய பணம்

சொத்து மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி

Tamil Wiktionary

கடன் — பெயர்ச்சொல் (Noun)
  1. மற்றவரிடமிருந்து பெறும் பணம்
  2. பின்னாளில் திரும்பி அளிக்க வேண்டியது
  3. கடமை

[object Object]

கடனாளி கடங்காரன் வட்டிக்கடன் வங்கிக்கடன் செஞ்சோற்றுக்கடன் வராக்கடன் நேர்த்திக்கடன் வேலை

Winslow (1862)

கடன் (kaṭaṉ) — noun
  1. Debt, loan of money or of goods on trust, இருணம்
  2. Tribute, tax, குடியிறை
  3. Duty, obligation, what is proper to be done or what one is bound to do, that which is devolved on one, accountability, responsibility, கடமை
  4. Measurement, அளவு
  5. A dry measure–the மரக்கால். கடனுக்குப்பாதகனாய்ப்போனவன். One who is deeply in debt. காலைக்கடன்கழித்தல். Performing the morning devotional exercises. அதுன்மேல்விழுந்தகடன். It is your duty. பகைவரைமுதலாய்ப்பரிவதுகடன். Even enemies ought to be loved. யான்செய்யவேண்டியகடன். The duty which I ought to discharge
  • கடனடைக்க–கடனிறுக்க–கடன்றீர்க்க — To clear off a debt. 2. To perform an obligation, duty, &c., in general. புத்திரன்றன்கடன்றீர்த்துப்போட்டான். The child has done his duty–spoken in commendation, or with reference to the performance of some exploit, &c.
  • கடனாக — As a loan, in loan.
  • கடனாளி — One who is obliged to do a thing. 2. A debtor.
  • கடன்கட்டு–கடன்வழி — Doing a thing for form's sake, not cordially.
  • கடன்கட்டாய்ப்பேச — To speak roughly.
  • கடன்கழிக்க — To perform a duty, to return a kindness, &c., கடமை செய்ய. 2. To perform the last funeral rites for a deceased person, either by fire or water, பிதிர்கருமஞ்செய்ய. 3. To perform private devotions as the repetitions of the மந்திரம், &c., நித்தியகருமஞ்செய்ய. 4. To do a service for one out of compliment, or for form's sake, மனமின்றிச்செய்ய.

Fabricius (1972)

கடன் — noun
  1. a debt, loan of money or goods, இருணம்
  2. duty, கடமை
  3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்
  4. order, plan, system, முறைமை
  5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை
  6. honour, மானம்
  7. measure, definite quantity அளவை
  8. tribute, tax, கப்பம், வரி
  • கடனுக்குப் பாதகனாய்ப் போனான் — he is involved in debt or deeply indebted.
  • அது ஏன்மேல் விழுந்த கடன் — that is my duty.
  • கடனாக — as a loan.
  • கடனாளி — one who is obliged to do a thing; a debtor.
  • கடன் கட்டு — doing a thing for form's sake only.
  • கடன் கட்டாய்ப்பேச — to speak roughly.