கடுப்பு

bitter

Tamil Wiktionary

கடுப்பு
  1. கடுக்குகை
  2. நோவு
  3. வெகுளி
  4. வேகம்.
  5. ஒப்பு ()
  6. செருக்கு
  7. கருவூமத்தை ()
  8. முகஞ் சுளிக்கை
  9. வெறுப்பு
  10. எரிச்சல்
  11. கொண்டைவலையிற் கட்டுங் கோல்
  12. கடுக்காய்வேர் ()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடுப்பு (kaṭuppu) — noun
  1. < கடு¹-
  2. Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp; கடுக்குகை. கடுப்புடைப் பறவைச் சாதியன்ன (பெரும்பாண். 229)
  3. Aching, pain, throbbing; நோவு. முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே (ஈடு, 1, 1, 1)
  4. Ire, wrath; வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49)
  5. Speed, rapidity; வேகம். மண்டு கடுப்பினிற் பட ரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15)
  6. Similarity, likeness; ஒப்பு. (திவா.)
  7. Pride; செருக்கு. அவன் கடுப்பை இறக்கிவிட்டான். (W.)
  8. Purple stramony. See கருவூமத்தை. (மலை.)
  9. Twitching the face, to indicate either displeasure or anger; முகஞ்சுளிக்கை. ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?
கடுப்பு¹ (kaṭuppu) — noun
  1. Pole attached to the fishing net koṇṭaivalai; கொண்டைவலையிற் கட்டுங் கோல். Loc.
கடுப்பு² (kaṭuppu) — noun
  1. Root of gall-nut; கடுக்காய்வேர். (வை. மூ.)

Tamil Moli Akarathi (1928)

கடுப்பு (kaṭuppu)
  1. அகங்காரம், ஏரிவு, கடுநோய், குற்று, கொதிப்பு, சினம், வேகம்
கடுப்பு (kaṭuppu)
  1. ஊமத்தை, கடுக்காய்வேர்
கடுப்பு (kaṭuppu)
  1. ஒல்லை, கடுமை, கதவு, கதனம், துரிதம், நொறில், வல்லை
கடுப்பு (kaṭuppu)
  1. சினம், விரைவு

IndoWordNet

கடுப்பு — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
கடுப்பு — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
கடுப்பு — noun
  1. கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு