சுருக்கம்
Summary
Winslow (1862)
சுருக்கம் (curukkam) — noun
- An abridgment, abbreviation, epitome, abstract, அடக்கம்
- Brevity, conciseness, சங்கிரகம்
- Smallness, சிறுமை
- Diminution, decrease, retrenchment, contraction, குறைவு
- Poverty. indigence, தரித்திரம்
- A fold or plait in a garment, வஸ்திரச்சுருக்கு
- A tie or bandage to tighten, கட்டு; [ex சுருங்கு, v.]
- சுருக்கத்திலேபிடிக்க — To curtail expenses, retrench. 2. To make short work of a thing, குறைக்க. (c.)
- சுருக்கம்வைத்துத்தைக்க — To fold or make plaits, to pucker.
- சுருக்கமாயிருக்க — To be small, little; to be in plaits.
- சுருக்கமாக்க — To epitomize.
- சுருக்கமாய்ப்பேச — To speak briefly.
- சுருக்கமானவழி — A short road. 2. (fig.) A short or concise method.
Fabricius (1972)
சுருக்கம் — noun
- (சுருங்கு) brevity, shortness, சங்கிரகம்
- abbreviation, abridgment, compendium, அடக்கம்
- contraction, decrease, குறைவு
- a plait or small fold in a garment, சுருக்கு
- miserliness, உலோபம்
- சுருக்கத்திலே பிடிக்க — to retrench, to make short work of a thing.
- சுருக்கமான வழி — a short road, a short or concise method.
- சுருக்கமாயிருக்க — to be small, to be in plaits.
Tamil Moli Akarathi (1928)
சுருக்கம் (curukkam)
- அடைக்கமானசெய்கை, கட்டு குறைவு, சங்கிரகம், சிறுமை, சுருக்கல்
சுருக்கம் (curukkam)
- இலக்கியச்செய்யுட்கூறுபாடு
சுருக்கம் (curukkam)
- கட்டல், சுருங்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுருக்கம் (curukkam) — noun
- < சுருங்கு-
- [M. curukkam.] Brevity, conciseness; சங்கிரகம்
- [M. curukkam.] Abbreviation, epitome, abstract, gist; சங்கிரகமானது
- [M. curukkam.] Smallness, shortness; சிறுமை. (W.)
- Diminution, decrease, contraction; குறைவு. சுருக்க முற்றனரரக்கர் (கம்பரா. முதற்போ. 189)
- Poverty, want; வறுமை. சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு (குறள், 963)
- Miserliness; உலோபம். Loc
- Fold or pucker in a garment, crease; ஆடை முதலியவற்றின் சுருக்கு. Loc