ஆறு

பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி. வழி, பாதை வெப்பம் மிகுந்த பொருள் காலப்போக்கில் வெப்பம் தணிவது (குறைவது).

six (numeral:௬) river, brook way, road, path

Tamil Wiktionary

ஆறு
  1. பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
  2. வழி
  3. பாதை
  4. வெப்பம் மிகுந்த பொருள் காலப்போக்கில் வெப்பம் தணிவது (குறைவது).
  5. முழு எண் வரிசையில் ஐந்துக்கு அடுத்த எண். இதனை அரபி-இந்திய எண்ணெழுத்தில் 6 எனக்குறிப்பர்.
  6. குணமாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
  7. சரியாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
  8. நதி
  9. ஓர் எண்

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

ஆற்று ஆறுதல் ஆறுமுகம் அறுபது அறுநூறு அறுகோணம் அறுசுவை ஆற்றுமணல் ஆற்றங்கரை ஆற்றுப்பாசனம் பாலாறு மணிமுத்தாறு காட்டாறு வரலாறு கோளாறு வழக்காறு பசியாறு பதினாறு இருபத்தாறு

Winslow (1862)

ஆறு (āṟu) — noun
  1. and adj. Six (6.) six things, ஓரெண்
  2. As a prefix to words beginning with consonants, the initial is often shortened, especially when the number is specific–as அறுசுவை, the six flavors. (c.)
  • அவ்வாறு — . Six by six, six to each, six of each.
  • அறுகுணன் — The deity–he who possesses the six attributes, கடவுள்; [ex குணம், quality.] (p.)
  • அறுகோணம் — A hexagon. 2. A magical diagram of two equilateral triangles, one laid over the other so that their sides may be parallel, making six outward and six inward angles.
  • அறுசமயம் — The six systems of religion maintained by Hindus. See சமயம்.
  • அறுதொழிலோர் — Brahmans–from the six duties prescribed to them, வேதியர். See தொழில், office.
  • அறுபகை — The six hurtful propensities–as காமம், &c. See பகை.
ஆறு (āṟu) — noun
  1. A river, natural current, brook, channel or passage through shallows, a canal, நதி. (c.)
  2. (p.) Way, road, path, mode, manner, rule, method, order, custom, circumstance, வழி. In this sense, in verse, the று, is sometimes omitted
  3. Morality, virtue, good conduct, way in a moral sense, the good or right way, ஒழுக்கம. சுரருலகெய்துமாறளித்தான. He endowed him with the bliss of the gods, or literally, granted that he should attain to the world of the gods. யான்வந்தவாசென்றியம்புதி Go and tell that I am come–ஆ for ஆறு. ஏன்றவாறு. A form added to explanations of grammatical rules, &c., implying such is the meaning
  • ஆறலைக்க — To rob in the highway, infest the road, வழிப்பறிக்க. (p.)
  • ஆறலை–ஆறலைப்பு — Highway-robbery, street-robbery, வழிப்பறிக்கை. ஆறலைக்கள்வருமளியராயினார். Even the highway-robbers have proved friends. (நடை.)
  • ஆறாடி — A lascivious, idle fellow, a vagabond, a pest. 2. One not to be relied on, a changeling, man without character.
  • ஆறுகட்ட — To construct a dam across a river, construct the banks of a river.
  • ஆறுகாட்டி — A guide, pilot, வழிகாட்டி.
  • ஆறை–ஆற்றூர் — The name of a town in the Carnatic. (p.)
ஆறு (āṟu) — noun
  1. , கிறேன், ஆறினேன், வேன், ஆற, v. n. To abate, relax, cool, grow cold, be refreshed, குளிர
  2. To be appeased, alleviated, mollified, தணிய
  3. To heal as a wound, hurt, &c., சொஸ்தமாக
  4. To rest, repose, இளைப்பாற. (c.) ஆறுவதுசினம். Anger should be appeased. புண்ணாறிற்று. The wound is healed
  • ஆறாப்பசி — An insatiable hunger.
  • ஆறாப்புண் — An incurable sore, ulcer, &c.
  • மனதாற — To be appeased when angry, be consoled.
  • ஆறுதல் — Abating, being alleviated, consoled, mitigated, refreshed.
  • ஆற்றிபண்ண — To relieve, aid one by carrying his load, &c., give one rest, respite.

Fabricius (1972)

ஆறு — noun
  1. & adj. six. In combination before consonants அறு which see, அவ்வாறு, six by six; six to each; six of each. ஆறாம், ஆறாவது, the sixth. ஆறாயிரம், six thousand.
ஆறு — noun
  1. a river நதி
  2. a way, road வழி
  3. morality, virtue அறம்
  4. the manner of doing a thing, விதம்
  5. result, பயன்
  • ஆறுகடக்க — to cross a river.
  • ஆறுகாட்டி — a guide.
  • ஆற்றங்கரை — the bank of a river.
  • ஆற்றுக்கால் — a streamlet, a small channel, for conveying water to the fields.
  • ஆற்றுணா — rice tied up for the journal.
  • ஆற்றுநீர்ப் பொருள்கோள்–மொழி மாற்றுப் பொருள் கோள் — the natural construction of a sentence ( x ,)
ஆறு — v. i.
  1. v. i. be appeased, calmed or mollified; தணி
  2. grow cool, be re- freshed, குளிரு
  3. heal up, சொஸ்த மாகு
  4. rest, repose, இளைப்பாறு
  5. be suppressed அடங்கு
  • சாப்பாடு ஆறிப்போகிறது — the meal grows cold.
  • கோபம் ஆறிப்போயிற்று — the anger is allayed.
  • தூக்கம் ஆறவில்லை — the grief has not abated.
  • புண் ஆறிவருகிறது — the sore begins to heal.
  • ஆற அமர — adv. (inf.) deliberately, with due consideration.
  • ஆற அமர யோசிக்க — to consider deli- berately.

Tamil Moli Akarathi (1928)

ஆறு (āṟu)
  1. ஆறென்னேவல், ஒழுக்கம், ஒரு ஏண், நதி, வழி
ஆறு (āṟu)
  1. உந்தி, ஒலியல், ஓணம், குடிஞை, சிந்து, தடினி, தரங்கணி, திரை, தீப வதி, தீர்த்திகை, துறை, துனி, நதி, புனல், யாறு, வருபுனல், வேணி இவற்றுண் மேற்கோடுமாறு - நதம், கீழக்கோடுமாறு - நதி, நிறையாறு- பீராறு, வழாறு - வாரி, புதுப்புனல் வரவு தலையல், நீந்துபுனல்-அகாதம், நீத்து
ஆறு (āṟu)
  1. ஆறுதலைச்செய்யென்னேவல், ஒ ழுக்கம், ஓர்வகையெண், நதி, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆறு¹ (āṟu) — noun
  1. prob. அறு²-
  2. cf. யாறு. [T. ēṟu, M. āṟu.] River, brook; நதி. (திவா.)
  3. Way, road, path; வழி. ஆறெறி பறையும் (சிலப். 12, 40)
  4. Side; பக்கம். நாலாறு மாறாய் (நாலடி. 383)
  5. Result; பயன். அறத்தா றிதுவென வேண்டா (குறள், 37)
  6. Religion; சமயம். சைவநல்லா றோங்க (பெரியபு. சணடேசு. 57)
  7. Morality, virtue, path of righteousness; அறம். ஆறன்மையின் முதி யாரையுமெறியானயி லுழவன் (சீவக. 2261)
  8. Means, device; உபாயம். ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள், 468)
  9. Mode, manner, method; விதம். கற்ப ழியா வாற்றால் (நல்வழி, 16)
  10. Nature; இயல்பு. செயுநீர செய்யா தமைகலா வாறு (குறள், 219)
ஆறு³ (āṟu) — noun
  1. The numeral 6; சா என்னும் எண்.
ஆறு (āṟu) — noun
  1. Front, entrance, as of a house; தலைக்கடை. (அக. நி.)

IndoWordNet

ஆறு — noun
  1. இயற்கையான முறையில் கரைக்களுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு.
ஆறு — noun
  1. நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு
ஆறு — noun
  1. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பந்தில் அடிக்கப்படும் ஓட்டத்தின் எண்ணிக்கை
ஆறு — noun
  1. சூதாட்டத்தில் விழும் எண்ணிக்கை
ஆறு — noun
  1. சீட்டு விளையாட்டில் உள்ள ஆறாம் எண்

நதி நர்மதா ரேவா இந்துஜா முர்லா சோமசுதா சரஸ்வதி பிரம்மநதி பிரம்மபுத்ரி சிந்துமாதா பிளக்ஷாதேவி பிரம்மஸ்தி காவேரி காவிரி சிந்து நதி சிந்து நீரோட்டம் வெள்ளம் பிரவாகம் அருவி முறை ரன் நிலை ஸ்தானம் நிலைமை