பற்று

விருப்பம் கைப்பற்று வருவாய்

to be sufficient to be kindled (as fire, anger, desire) to form (as rust, flower)

Tamil Wiktionary

பற்று — பெயர்ச்சொல் (Noun)
  1. விருப்பம்
  2. கைப்பற்று
  3. வருவாய்
  4. விரும்பு

கைப்பற்று பின்பற்று அகப்பற்று புறப்பற்று நாட்டுப்பற்று சமயப்பற்று மதப்பற்று இனப்பற்று மொழிப்பற்று

Winslow (1862)

பற்று (paṟṟu) — noun
  1. A grasp, gripe, seizure, embrace, பிடிக்கை
  2. Reception, acceptance, receipt, ஏற்கை
  3. Adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, ஆசை
  4. Connexion affinity, bond சம்பந்தம்
  5. piece put on, nailed, &c., for strength, as ஒட்டு
  6. Metallic particles for soldering, பற்றாசு
  7. Any thing adhering, sticking, &c., as dust; any thing sticking to the bowels, to a pot, &c., சோற்றுப்பற்றுமுதலியன
  8. A medical application, plaster, &c., சேர்வை
  9. Alloy, கலப்பு
  10. Formation, concretion, திரளுகை. (c.)–Note. Attachments are of two kinds, அகப்பற்று, internal attachment, connexion of the affections
  11. புறப்பற்று, external attachments, connexion by births, friendship, marriage, secular pursuits &c
  • பற்றற — To be broken off as affection, friendship, attachment, earthly ties. 2. To be extirpated, exhausted, to be extinct; used also as an adverb. பற்றுக்கொண்டுபோய்விட்டான். He has taken all away.
  • பற்றாக்கை — [also பற்றார்க்கை.] A cord or string to tie a bunch of arrows, அம்புகட்டுங்கயிறு. 2. A cord in general for tying, கட்டுங்கயிறு. (சது.)
  • பற்றிலி — One free from sensual attachments–as the Deity, or an advanced devotee.
  • பற்றுக்கால் — Supporter of a lever, or swing.
  • பற்றுக்குறடு — A pair of tongs; sometimes பற்றுகுறடு.
  • பற்றுக்கொள்ள — To be attached, as the mind to earthly things.
பற்று (paṟṟu)
  1. [prov.] A parish, as கோயிற்பற்று, சிற்றூர்.
பற்று (paṟṟu) — infinitive
  1. , கிறேன், பற்றினேன், வேன், பற்ற, v. a. To grasp, seize, catch, hold, பிடிக்க
  2. To receive, accept, embrace, வாங்க
  3. To attach, adhere, cling to, அடுக்க
  4. To insinuate itself, to take effect as poison, &c., பிடிப்புற
  5. To dye, to tinge, to take, as color, நிறக்க
  6. To kindle, as fire, anger, desire, &c., to ignite, தீமூள
  7. To apprehend, to comprehend, கிரகிக்க
  8. To pursue, aim at a thing தொடர
  9. To stick, ஓட்ட
  10. To become joined or welded, as metals soldered, &c., பொருந்த
  11. To be sufficient, போதுமானதாக
  12. To smart, to feel pungent, as pepper in the eyes, உறைக்க
  13. To be formed in the mind, as thoughts or opinions, ஏண்ணமுண்டாக
  14. To form, as rust, as flower- buds, as a flower, a young fruit, a stone in the fruit, துருமுதலியபிடிக்க
  15. To drive away. &c., துரத்த, used in the South. (c.) பணம்பற்றிக்கொண்டேன். I have received the money வரப்பற்றிக்கொண்டேன். The money, or goods, sent, came to my hands, I took charge of them. வீட்டிலேநெருப்புப்பற்றிக்கொண்டது. The house took fire. பற்றவில்லை. It is insufficient
  16. It does not stick, kindle, &c. பற்றாது. It is not enough. பற்றாக்குறைக்குநீவந்தாயோ. Did you come to share in what is insufficient for me? மாட்டைப்பற்றிக்கொண்டுவா. Drive the oxen here. பற்றும்பற்றாமலிருக்கிறது. It is not quite sufficient. கரையைப்பற்றிவா. Come towards the shore. மயிர்பற்றிப்போயிற்று. The animal has become shaggy. commonly spoken of sheep
  • பற்றவைக்க — [prov. பற்றச்சுட.] To solder, To weld 2. To kindle a fire. 3. [fig.] To make enemies, to sow discord. அவனிடத்திலே பற்றவைத்துவிட்டான். . . . . . . He referred the matter to another.
  • பற்றற்றார்–பற்றற்றோர் — Rishis, Munis who have relinquished. earthly attachments.
  • பற்றாக்குறை — Any thing which is very inadequate.
  • பற்றி — Of, about, concerning, respecting. adverting to, referring to. 2. By, by means of, guided by, taking hold of, tracing by scent. அதைப்பற்றிஏனக்குச்சொன்னான். He told me about it. அவனைப்பற்றிஏனக்குக்காரியமில்லை. I have nothing to do with him. உன்னைப்பற்றி. For your sake. 2. About you. நீ ஏன் அதைப்பற்றிக்கவலைப்படுகிறாய். Why do you care for it?
  • பற்றிக்கொள்ள — To take hold of. 2. To receive–as money, a debt, &c.
  • பற்றித்திரிய — To follow one for a living, &c.

Fabricius (1972)

பற்று — noun
  1. a grasp, seizure, பிடிக்கை
  2. receipt, ஏற்கை
  3. adherence, attachment, சார்பு
  4. anything adhering or sticking, ஒட்டு
  5. medical application, plaster, சேர்வை
  6. alloy, கலப்பு
  • பற்றலர்–பற்றார் — foes, enemies.
  • பற்றிலி — one free from sensual attachments as the deity or an advanced devotee.
  • பற்றுக்கால் — the supporter of a lever or swing.
  • பற்றுக் குறடு — a pair of tongs.
  • பற்றுக்கொண்டாட–கூற — to be greatly attached to objects of sense.
  • பற்றுக்கொள்ள — to be attached to earthly things.
பற்று — s. (prov.)
  1. (prov.) a parish, சிற்றூர்.
பற்று — v. t.
  1. v. t. lay hold, grasp, seize, பிடி
  2. receive, take, வாங்கு
  3. ap- prehend, கிரகி
  4. follow, accompany, adhere or cling to, அடு
  5. stick, ஒட்டு; v. i. kindle (as fire, wrath etc.) மூளு
  6. be sufficient
  7. form (as rust, fruits etc)
  • வீட்டிலே நெறுப்புப் பற்றிக்கொண்டது — the house took fire.
  • அது பற்றவில்லை — it is insufficient, it does not adhere, strick, kindle etc.
  • பற்றாது — it is not enough.
  • பற்றும் — it is sufficient.
  • கடன் பற்றினேன் — I have taken up money.
  • கடன் பற்றிக்கொண்டேன் — I have re- ceived the amount of debt.

Tamil Moli Akarathi (1928)

பற்று (paṟṟu)
  1. அறவிட்டத்து,அன்பு, ஆசை, இசைவு, உலோகங்களைப் பொருத் துங்கூட்டு, சம்பந்தம், சிற்றூர், சேர் வை, தொடர்ச்சி, பசை, பற்றென் னேவல், பிடி, பொத்து, மண்டி, வாரப்பாடல்
பற்று (paṟṟu)
  1. ஆர்வு, ஈரம், பிரிவு
பற்று (paṟṟu)
  1. அன்பு, ஆசை, பற்றென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பற்று² (paṟṟu) — noun
  1. Grasp, grip, seizure; பிடிக்கை
  2. Acceptance; ஏற்றுக்கொள்கை
  3. Adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-paṟṟu, puṟa-p-paṟṟu; அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய அபிமானங்கள். பற்றற்றான் (குறள், 350)
  4. Connection, affinity, bond; சம்பந்தம்
  5. Piece put on or nailed on for strength; ஒட்டு
  6. Solder; பற்றாசு
  7. Paste, glue; பசை
  8. Particles of boiled rice adhering to the cooking pot; அட்டகலத்திற் பற்றிப்பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை. மட்கலமொழிய வேறுபற்றிலை (பிரபுலிங். ஆரோகண. 38)
  9. Pot containing particles of food adhering to it, as impure; சோற்றுப்பருக்கையொட்டி யுள்ள பாத்திரம். பற்றலம்பவேண்டும்
  10. Place under one's possession; உரிமையிடம். இவ்விடம் இன்னார்பற்று (ஈடு, 1, 3, 9)
  11. Resting place; தங்குமிடம். பற்றாகின்று நின் காரணமாக (பரிபா. 8, 10)
  12. Portion of a country consisting of many villages; பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி. (பு. வெ. 7, 2, உரை.)
  13. Receipt; things received; பெற்றுக்கொண்ட பொருள்
  14. Support; பற்றுக் கோடு. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் (குறள், 88)
  15. Pillar; தூண். (திவா.)
  16. Love, devotion; அன்பு. (சூடா.)
  17. Friendship; நட்பு. பற்றோடிக லற்ற பரம்பொருளை (கந்தபு. காமத. 23)
  18. Path to salvation; வீட்டுநெறி. பற்றற்றான் பற் றினை (குறள், 350)
  19. Riches, treasure; செல்வம். பற்றற்ற கண்ணும் (குறள், 521)
  20. Family life; இல்வாழ்க்கை. இயைவ கரவாத பற்றினில் (இனி. நாற். 27)
  21. Paddy field; வயல். செட்டிபற்றிற் கண்ணி வைத்து (குற்றா. குற. 102)
  22. Bundle; as of betel leaves; கட்டு. வெற்றிலைப்பற்று (S. I. I. iii, 188, 8)
  23. Purpose, intention, principle; கொள்கை. செழுஞ்சோதியைத் தொழுஞ்சீலந் தம்பற் றாக (பெரியபு. நமிநந்தி. 7)
  24. Plaster; poultice; medical application; மருந்துப்பூச்சு
  25. Disease of the skin, ring-worm, psoriasis; மேகப்படை
  26. Cement; கலவைச்சுண்ணாம்பு வகை
  27. A kind of song; வாரப்பாடல். (சிலப். 14, 155, உரை.)
  28. Village, parish; சிற்றூர். (J.)

IndoWordNet

பற்று — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
பற்று — noun
  1. கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று

விருப்பம் ஆசை ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் இஷ்டம் விருப்பு பிடித்தம் பிடிப்பு மனோரதம் வேட்கை பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை பத்து களிம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பற்று
  1. பிடிக்கை
  2. ஏற்றுக்கொள்கை
  3. அகப் பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள்
  4. சம்பந்தம்
  5. ஒட்டு
  6. பற்றாசு
  7. பசை
  8. சமைத்த பாண்டத்தில் பற்றிப் பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை
  9. சோற்றுப்பருக்கை ஒட்டி யுள்ள பாத்திரம்
  10. உரிமையிடம்
  11. தங்குமிடம்
  12. பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி
  13. பெற்றுக் கொண்ட பொருள்
  14. பற்றுக்கோடு
  15. தூண்
  16. அன்பு
  17. நட்பு
  18. வீட்டுநெறி
  19. செல்வம்
  20. இல் வாழ்க்கை
  21. வயல்
  22. கட்டு
  23. கொள்கை
  24. மருந்துப் பூச்சி
  25. வாரப்பாடல்
  26. சிற்றூர்
  27. கலவைச் சுண்ணாம்புவகை