சித்தம்

மனம், புத்தி முடிவு will, mind

mind, will determination, firm conviction determinative faculty

Tamil Wiktionary

சித்தம்
  1. மனம், புத்தி
  2. முடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சித்தம்¹ (cittam) — noun
  1. < citta
  2. Mind, will; மனம். பத்தர் சித்தம் (திவ். திருச்சந். 110)
  3. Determination, firm conviction; முடிவான மனக்கொள் கை. தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி (திருவாச. 4, 42)
  4. Determinative faculty, one of four antakkaraṇam, q.v.; அந்தக்கரணம் நான்கனுள் நிச்சயிக்குந் தொழிலுடைய உட்கருவி. சிந்தித்தாய்ச் சித்தம் (சி. போ. சிற். 4, 1, 2)
  5. Courage, firmness; திடம். (சூடா.)
சித்தம்² (cittam) — noun
  1. < siddha
  2. That which is established or attained; பெறப்பட்ட முடிபு
  3. Certainty; திண்ணம். திருவற மெய்து தல் சித்தம் (மணி. 10, 85)
  4. That which is ready; ஆயத்தமானது
  5. An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமத்துளொன்று. (சைவச. பொது. 335, உரை.)
  6. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24.)
  7. Māyā, as the cause of the world of phenomenon; மூலப்பகுதி. சித் தத்து மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு (மணி. 27, 206)
சித்தம்³ (cittam) — noun
  1. cf. šigru. Horse-radish tree. See முருங்கை. (மலை.)

Winslow (1862)

சித்தம் (cittam) — noun
  1. The முருங்கை tree. (M. Dic.)
சித்தம் (cittam) — noun
  1. Will, volition, one of the four faculties of the mind, உட்கரணநான்கினொன்று
  2. Purpose, determination, resolution, pleasure, choice, உள்ளக்கருத்து. (c.)
  3. The mind or heart as the seat of affection, காருண்ணியமனம். W. p. 325. CHITTA
  4. An established truth; a tenet or doctrine maintained by certain authorities, சித்தாந்தம்
  5. Truth, certainty, உண்மை
  6. One of the twenty-seven astrological Yogas, யோகமிருபத்தேழிலொன்று. W. p. 924. SIDD'HA
  7. One of the twenty-eight Saiva Agamas, ஆகமமிருபத்தெட்டிலொன்று. உம்முடையசித்தம். According to your pleasure, as you please. சித்தத்தின்படி–சித்தமானபடி. According to one's pleasure, choice, &c. தங்கள் சித்தமெங்கள்பாக்கியம். Your pleasure is the source of our happiness; if you will it, we are made happy
  • சித்தசமாதானம் — Certainty or steadfastness of mind in religion. 2. Peace of mind, tranquility, calmness.
  • சித்தசமுசயம் — Doubt of mind, hesitation, indetermination. (p.)
  • சித்தசாந்தி — Stoical tranquility of mind, extinction of volitional feeling, &c., as attained by the ஞானி. (p.)
  • சித்தசலனம் — Agitation of mind, perturbation, disgust. See சலனம்.
  • சித்தஸ்வாதீனம் — Command of one's will, self-control.
  • சித்தஞ்செய்ய — To settle, decide, give a final judgement, தீர்மானிக்க. 2. To will, desire; to direct, command; to be pleased, ஆக்கியாபிக்க. 3. To make ready, தயார்பண்ண. (Colloq.)

Fabricius (1972)

சித்தம் — noun
  1. purpose, கருத்து
  2. mind, உள்ளம்
  3. will, மனது
  4. certainty, திண்ணம்
  5. that which is attained
  6. that which is ready
  7. a division of time, one of the 27 யோகங்கள்
  • உம்முடைய சித்தம்–சித்தத்திற்குச் சரிப்போனாற்போலே–சித்தப்படி — according to your pleasure, as you please.
  • சித்தசமாதானம்–சித்த சாந்தி — tranquillity, .
  • சித்தசலனம் — instability of mind ( திடச்சித்தம், firm mind).
  • சித்தசன் — Manmatha, as mind-born.
  • சித்தசுத்தி — purity of mind.
  • சித்த ஸ்வாதீனம்–சுவாதீனம் — self-control.

Tamil Moli Akarathi (1928)

சித்தம் (cittam)
  1. உட்கரண நான்கினொன்று, உண்மை, உப்பு, உள்ளம், ஏப்போழ் தும், கீர்த்தி, சிவாகம மிருபத்தெட் டினொன்று, துறவு, நித்திய யோகத் தொன்று, முடிப்பு, முருங்கை
சித்தம் (cittam)
  1. உள்ளம்

IndoWordNet

சித்தம் — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

யோசனை எண்ணம் ஆலோசனை சிந்தனை நினைப்பு உத்தேசம் உளப்பாடு மனக்கிடக்கை உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை பணி கவலை துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி